நோய்கள் தீர்க்கும் காய்கள், கனிகள்!

வாழைத்தண்டு

சத்துக்கள்: நார்ச் சத்து, நீர்ச் சத்து அதிகம் இருக்கின்றன. ஓரளவு வைட்டமின் சி மற்றும் பாஸ்பரஸும், குறைந்த அளவு கலோரியும் உள்ளன.
பலன்கள்: அதிக எடை உள்ளவர்கள், தினமும் எடுத்துக்கொள்ளலாம். நீர்ச் சத்து அதிகம் இருப்பதால், சிறுநீரை நன்றாக வெளியேற்றும். சாப்பிட்டவுடன், நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும்.

நெல்லிக்காய்

சத்துக்கள்: வைட்டமின் சி, செல்லுலோஸ், கார்போஹைட்ரேட், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், நிகோடினிக் ஆசிட் இதில் உள்ளன.
பலன்கள்: ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவர்களுக்கும் சர்க்கரை நோயாளிகளுக்கும் மிகவும் நல்லது. வாய் கசப்பைப் போக்கும். இதயம், நுரையீரலை வலுவூட்டும். இளமையைத் தக்கவைக்கும். முடிவளர்ச்சிக்கும், தோல் பளபளப்புக்கும், கண் பார்வை கூர்மைக்கும் நெல்லிக்காய் அருமருந்து. தினமும் ஒரு நெல்லிக்காயை, தேனில் ஊறவைத்துச் சாப்பிடுவதால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது.

மாம்பழம்

சத்துக்கள்: தாது உப்புக்கள், நார்ச் சத்து, பீட்டா கரோட்டின், சர்க்கரை அதிக அளவு இருக்கின்றன. மாவுச் சத்து, வைட்டமின் சி ஓரளவும், இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் மிகவும் குறைவாக இருக்கின்றன.
பலன்கள்: மலச்சிக்கலைப் போக்கும். கண்களுக்கு மிகவும் நல்லது. ரத்தம் அதிகரித்து, உடலுக்கு நல்ல பலத்தைக்கொடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும். சர்க்கரை நோயாளிகள், உணவுக்கு இடைப்பட்ட நேரத்தில் நாள் ஒன்றுக்கு 2 துண்டுகள் மட்டுமே சாப்பிடலாம்.

Daily Tips

வீட்டிலேயே இருக்கும் மருந்துகள்….

வீட்டிலேயே இருக்கும் மருந்துகள்….

Home Medicine

வீட்டில் சிக்கனோ, மட்டனோ இருந்தால் ஒரு பிடி பிடித்து விட்டு அஜீரணக்கோளாறால் அவதிபடுவது வழக்கம்.

இவ்வாறு அஜீரணக்கோளாறால் அவதிபடுபவர்களுக்காகவே வீட்டில் இருக்கின்றது மருந்து. வெளியில் சென்று வாங்கவும் வேண்டாம், அடுப்பன்கறை பொருட்களை வைத்து எப்படி அஜீரணத்தை போக்கலாம் என்பதை பற்றி பார்ப்போம்.

எலுமிச்சை மற்றும் இஞ்சி

எலுமிச்சை மற்றும் இஞ்சி அனைவரின் வீடுகளிலும் கிடைக்கும் ஒரு சமையலறை பொருளாகும். அஜீரணக்கோளாறை போக்க இஞ்சி பெரிதும் பயன்படுகிறது. அதிகமாக சாப்பிட்டு அஜீரணக்கோளாறால் அவதிபடுபவர்கள் சாப்பிட்ட பின்னர் தேவையான அளவு தண்ணீரை ஒரு தம்ளரில் எடுத்துக்கொண்டு அதனுடன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 2 டீஸ்பூன் இஞ்சி சாறு மற்றும் தேன் எடுத்துக்கொண்டால் அஜீரணக்கோளாறுக்கு குட்பை சொல்லிவிடலாம்.

ஆரஞ்சு சாறு

வீட்டு மருந்துகளில் அஜீரணக்கோளாறுகளுக்கு சிறந்த ஒன்று ஆரஞ்சு சாறு. சாப்பிட்டு முடித்த பின்னர் ஒரு தம்ளர் ஆரஞ்சு சாறு சாப்பிட்டால் உணவு செரிமானம் அடைந்து உடல் உறுப்புகளுக்கும் ஓய்வை கொடுத்து உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தையும் வழங்குகிறது.

மோர், பால்

தினமும் மூன்று வேளை பசும்பாலில் தேனும் நான்கு பூண்டுப் பற்களும் சேர்த்துப் பருகினால் தாய்பால் நன்கு சுரக்கும். இதனால் குழந்தைகளுக்கும் அஜீரணம், ஜலதோஷம் போன்றவை வராமல் தடுக்கப்படும். நீர்த்த மோரில் கால் டீஸ்பூன் மிளகுத் தூளும் சீரகத் தூளும் கலக்கிக் குடித்தால், அஜீரணக் கோளாறு உடனே சரியாகும்.

திராட்சை

வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் சிறந்தது திராட்சைபழம்.. இந்தப்பழத்தை தோலுடன் சாப்பிட்டாலோ அல்லது ஜீஸ் செய்து சாப்பிட்டாலும் வயிறு பிரச்சனைகளுக்கு சிறந்த நிவாரணமாக செயல்படும்.

எலுமிச்சை

சூடான எலுமிச்சை தண்ணீர் அஜீரணத்தை குணப்படுத்த சிறந்தது. உணவு எடுத்துக்கொள்வதற்கு முன்பு ஒரு கப் தண்ணீருடன் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறை எடுத்துக்கொண்டால் அமிலத்தை தடுத்து பாக்டீரியாவுடன் போராடி செரிமான பிரச்சனைகளை தீர்க்கிறது.

பூண்டு மருத்துவம்

வீட்டு மருத்துவத்தில் இஞ்சிக்கும் பூண்டுக்கும் தனி இடமே உண்டு. அனைத்து மருத்துவ குணங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள ஒரு சிறந்த அடுப்பங்கறை மருந்து பூண்டு. நீங்கள் வயிற்று வலியால் அவதிபடுகிறீர்கள் என்றால் சமஅளவு பூண்டு சாறு , சோயா எண்ணெய் எடுத்து வயிற்று பகுதியில் மசாஜ் செய்யவேண்டும். வயிற்றில் தடவிய எண்ணெய் தோல் மூலமாக உறிஞ்சப்படும். இது அஜீரணத்தை உடனடியாக நீக்கிவிடும்.

சமையல் சோடா

ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் சமையல் சோடாவை போட்டு கலந்து குடித்தால் செரிமான பிரச்சனையை குறைக்கலாம்.

கொத்துமல்லி இலை

ஒரு கிளாஸ் தண்ணீரில் சிறிதளவு சீரகம், கொத்துமல்லி சாறு, உப்பு ஒரு சிட்டிகை ஆகியவற்றை கலந்து குடிக்கலாம். வயிற்று வலி ஏற்படின் இதை பருகலாம். மேலும் கொத்தமல்லி இலை இரண்டு தேக்கரண்டி, இஞ்சி சாறு ஒரு தேக்கரண்டி மூன்று ஏலக்காய், கிராம்பு கலந்து குடிக்கலாம். இது வாயு தொந்தரவை நீங்கிவிடும்.

Daily Tips ,

நலம் தரும் நாவல் பழம்…..

Naval palam

நலம் தரும் நாவல் பழம்

“ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மாதங்கள் நாவல் பழ சீசன்தான். நம் ஊர்தான் நாவல் பழத்துக்குப் பூர்வீகம்.

நாவல் பழத்தில் கால்சியம் அதிக அளவில் இருக்கிறது. இந்தப் பழத்தை அடுத்து சீதா பழத்தில்தான் கால்சியம் இருக்கிறது. இது தவிர சோடியம், தாமிரம் ஆகியவை கணிசமான அளவில் உள்ளது. வைட்டமின் பி1, பி2, பி6 ஒன்றாக உள்ள மிகவும் அரிதான பழம் இது’’ என்றவர், நாவல் பழத்தின் பலன்களை விவரித்தார்.

“கால்சியம், எலும்பு-களுக்கு உறுதியைக் கொடுப்-பதுடன், உடலை வலிமையாக்கும். ரத்தத்தைச் சுத்திகரித்து ரத்த விருத்திய-டையச் செய்யும். ரத்தசோகைக்கு மிகச்சிறந்த மருந்தே நாவல் பழம்தான். இதிலுள்ள வைட்டமின் சி உணவிலிருந்து இரும்புச் சத்தை உறிஞ்சும் திறனை அதிகரிக்கும்.

நாவல் பழத்திலுள்ள ‘ஜம்போலினின்’ எனும் ‘குளுக்கோசைடு’ உடலில் ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றும் செயல்பாட்டைத் தடுக்கிறது. இதனால் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். சர்க்கரை நோய் ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் நாவல் பழத்தை உணவாக அல்லா-மல் மருந்தாக பத்திய–மிருந்து 1 மண்டலத்துக்குச் சாப்பிட்டு வர, சர்க்கரையின் அளவு குறைந்து கட்டுக்குள் இருக்கும். நாள்பட்ட சர்க்கரை நோய் உடையவர்கள் நாவல் பழ விதையை காயவைத்து பொடியாக்கி, புளித்த மோரில் கலந்து குடிக்கலாம்.

Daily Tips

Vastu Consultant Andal P. Chockalingam’s Programme Video – 26th June 2014

Daily Tips, Media, TV Shows , , , , ,

தெளிவான பார்வைக்கு வைட்டமின் ஏ

தெளிவான பார்வைக்கு வைட்டமின் ஏ

வைட்டமின் – ஏ யின் முக்கியப் பணி, தெளிவான கண் பார்வையைத் தருவதுதான். புரதச்சத்துத் தயாரிப்பில் பங்குகொள்வதன் மூலம், உடலில் உள்ள செல்களின் வளர்ச்சிக்கும், உடலுக்கு அதிக எதிர்ப்பு சக்தியைக் கூட்ட‌வும், ஈறுகளை வலுப்படுத்தவும், செரிமானத்துக்கும் உதவுகிறது. மேலும், சருமப் பாதுகாப்புக்கும், நரம்பு மற்றும் எலும்புகளை உறுதியாக்கவும் வைட்டமின் ஏ தேவை.

பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்க…

இது மாம்பழ சீசன்… இப்போது வாங்கிச் சாப்பிட்டால் நான்கு மாதத்துக்கு தேவையான வைட்டமின் ஏ உடலில் சேரும்.

தினமும் 200 கிராம் கேரட், பால் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

காய்கறி, பழங்கள் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு மீன் எண்ணெய் மாத்திரை, மருந்து கொடுக்கலாம்.

10409306_671567879600508_9140807329661603992_n

Daily Tips ,

Vastu Consultant Andal P. Chockalingam’s Programme Video – 23rd June 2014

Daily Tips, Media, TV Shows , , , , , ,

Vastu Consultant Andal P. Chockalingam’s Programme Video – 21st June 2014

Daily Tips, Media, TV Shows , ,

Vastu Consultant Andal P. Chockalingam’s Programme Video – 19th June 2014

Daily Tips, Media, TV Shows , , ,

Your mind is a powerful thing….

Your mind is a powerful thing….
When you fill it with positive thoughts,
Your life will start to CHANGE….
Your mind is powerful thing

Daily Tips

Vastu Consultant Andal P. Chockalingam’s Programme Video – 16th June 2014

Daily Tips, Media, TV Shows , , , , ,