கடிதம் – 22 – அதிசயமும், பீனிக்ஸ் பறவையும்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்

அனைவருக்கும் வணக்கம்…

புகை பிடிப்பவர்கள் புகை பிடிக்கும் பழக்கத்தை அது தவறு என்று கருதி விட்டு விட்டாலும் ஏற்கனவே இருந்த புகை பழக்கத்தின் தீய விளைவுகள் குறிப்பிட்ட காலம் வரை அல்லது ஆயுள் முழுவதும் புகை பிடித்து அதனை கைவிட்டவரின் உடம்பிற்கு ஏற்படுத்துவது போல் தான் நம் தீய எண்ணங்களும் / தீய குணங்களும் நமக்கு ஒரு குறிப்பிட்ட காலம் வரை அல்லது ஆயுள் முழுவதும் தீயதை கொடுக்க / ஏற்படுத்த வல்லது என்பதை சேதமும், பூதமும் கடிதத்தில் பார்த்தோம். கடிதத்தின் முடிவில் காற்று தத்துவத்தை விளக்கி கூறி என் வெற்றிப் பயணத்தின் முதல் படிக்கட்டை எப்படி வெற்றிகரமாக கடந்தேன் என்பதை கூறுவதாக கூறி இருந்தேன்.

பஞ்ச பூதங்களில் காற்றுக்கு மட்டும் தனிச்சிறப்பு உண்டு. பஞ்ச பூதங்களிலேயே எப்படி காற்று மட்டும் மற்றவைகளுடன் தன் இருப்பையும் உணர்த்தியவாறே, தன் நிலை மாறாமல் சேர்ந்து இருந்து கொள்கின்றதோ, அது போல் தான் நாமும் இருக்க வேண்டும். இருந்தால், இருந்து இருந்தால், இருப்பின் நம் இருப்பின் உண்மை உள்ளம் உள்ளவர்களால் உணரப்படும். உணரப்பட்டால் நம் உள்ளம் உலர்ந்து போகாது. எண்ணிய எண்ணம் எண்ணமாக மட்டும் இல்லாமல் நல்லவைகளாக நாளும் மாறி நமக்கும் கிடைத்திடும். இது அனுபவ உண்மை.

வாழ்க்கையில் விடியலைப் பார்க்க, அனுபவிக்க நினைக்கும் அனைவருக்கும் நம் வாழ்க்கை விளையாட்டில் தாயம் விழும் என்பது வெறும் நம்பிக்கையாக இருக்க கூடாது. ஆழமான எதிர்பார்ப்பாக இருக்க வேண்டும். அடுத்தவர்கள் மாற வேண்டும் என நினைக்காமல் நம்மை “காற்று” போல் மாற்றி வைத்து கொண்டாலே, காற்று போல் கரைந்து போனாலே நமக்கு அதிசயம் கண்டிப்பாக நடக்கும். அதிசயம் என்கின்ற வார்த்தையை அது + செய்யும் என பிரித்து பார்த்தால் அது என்பது பரம் பொருள், இறைநிலை, ஆண்டாள், பெருமாள், சிவன், சக்தி, முருகர், புத்தர், இயேசுநாதர், அல்லா, etc., – ஐ குறிக்கும். அது என்பது உங்கள் இஷ்டப்படி மேற்சொன்ன எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும். ஆனாலும் அதை மட்டும் முழுவதுமாக நம்பினால் அதுவே எல்லாவற்றையும் செய்து கொடுக்கும் நமக்கு.

கஷ்ட ஜீவனத்தின் உச்சகட்டத்தில் இருந்தபோது, “எதை தின்னால் பித்தம் தெளியும் என்ற நிலையில் நான் என்னை அறியாமலேயே ஆண்டாளை நம்பினேன். பார்த்த முதல் நொடியே என்னுள் இருந்த மரண பயத்தை நீக்கி

நீ சாகப் பிறந்தவன் அல்ல….

நீ சாதிக்கப் பிறந்தவன்!!…

என்கின்ற விதையை என் அனுமதியில்லாமலேயே என்னுள் விதைத்தவள் ஆண்டாள். நான் அந்த நொடிக்காக இந்த பிறப்பில் பெரிதாக மெனக்கிட்டதில்லை என்கின்ற உண்மை ஒருபக்கம் இருந்தாலும் வேதத்தின் வித்தையே தனதாக்கியவளான என் பூரண தாய் ஆண்டாள் எனக்குள் என்னை உணர்த்தி தன்னையே வித்திட்டாள் என்பது தான் பெரிய அதிசயம் மற்றும் உண்மை.

இதில் பொதிந்துள்ள உண்மை என்ன தெரியுமா?

என்னைப் போன்ற தவறுகளும், தப்புகளும் செய்து குவித்து வாழத் தகுதியற்ற மானிடப் பிறவிகளுக்கே இந்த விஷயம் எளிதில் கிடைக்கின்றது என்றால் அதே உண்மை உங்களைப் போன்றவர்களுக்கு புரிந்து கிடைக்காமல் போய் விடுமா என்ன?

கிடைக்கும். கண்டிப்பாக கிடைக்கும். கண்டிப்பாக கிடைக்க  நீங்கள் செய்ய வேண்டிய ஒரே விஷயம் நம்ப வேண்டும். கண்டிப்பாக நம்மை படைத்தவனை மட்டும் நம்ப வேண்டும்.

தன்மேல் நம்பிக்கை இல்லாத என் சகோதர, சகோதரிகளே!!!

நம்புங்கள் உங்கள் பிரச்சினைகளை தீர்க்க, உங்களை எப்போதும் வெற்றி பெற வைக்க, உங்களை சந்தோஷப்படுத்த, உங்களை ஆனந்தப்படுத்த, உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற, உங்கள் கோரிக்கைகளை ஏற்று கொள்ள, உங்கள் ஆசைகளை பூர்த்தி செய்ய, பூரணத்துவத்தை உணர்த்த உங்களுக்காக ஒருத்தி காத்து கொண்டிருக்கின்றாள். என் குழந்தைகள் என்னிடம் கொஞ்ச வரமாட்டார்களே? என்னை ஆரத் தழுவி கொள்ளமாட்டார்களா, நானும், என் கணவரும் குடும்பம் நடத்தும் அழகையும், எங்கள் அன்னியோனியத்தையும் நீங்கள் எல்லாம் பார்த்து எத்தனை நாளாகி விட்டது என்று உங்களுக்காக உங்கள் வருகைக்காக வழிமேல் விழி வைத்து உங்களுடைய அத்தனை கோரிக்கைகளையும் நிறைவேற்ற ஸ்ரீவில்லிபுத்தூரிலே ஏங்கி காத்து கொண்டிருக்கிறாள் நம் பெரியாழ்வார் பெற்றெடுத்த பேதை பெண்.

இந்த உண்மையை நான் பரிபூரணமாக புரிந்து கொண்டேன். புரிந்து கொண்ட நொடியே நெருப்பில் விழுந்து உயிர்விட்டு பின் அந்த சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவையாக மாறிவிட்டேன். மனிதனாக இருந்து பீனிக்ஸ் பறவையாக நான் மாறிய உடனே செய்த ஒரே ஒரு விஷயம் தான் என்னை இந்தளவிற்கு பிரயாணப்பட வைத்திருக்கின்றது. ஆள்பலம், அரசியல் பலம், பண பலம், பொருளாதார பலம், உறவுகள் பலம் என என்னை எனக்கே தெரியாத அளவிற்கும் மற்றும் இது எப்படி நடந்தது என்று புரியாத அளவிற்கும் மிக பெரிய உயரத்திற்கு கொண்டு போய்விட்டது.

நீங்கள் என்னைப் போல் பீனிக்ஸ் பறவையாக மாறி இவ்வுலகை கட்டி ஆள வேண்டுமா? உங்கள் உழைப்பு கொண்டு இவ்வுலகையே நீங்கள் கட்டி போட வேண்டுமா? வேண்டும் என்பது விடையாக இருப்பின் அடுத்த கடிதத்தில் அந்த ஆச்சரிய உண்மையின் திரை விலக்கப்படும்.

அந்த உண்மையை கண்டபின் இந்த 4 எழுத்தை மட்டும் மறந்து விடாதீர்கள். அந்த எழுத்துக்கள்

“A   B   C   D”

 

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

TV Shows , , , , , , , , , , , , , , ,

கடிதம் – 21 – சேதமும், பூதமும்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்

அனைவருக்கும் வணக்கம்…

நான் இதற்கு எழுதிய கடிதங்களில் (கடிதம் 16, 17, 18, 19, 20) நான் பட்ட கஷ்டம், கஷ்டத்தில் இருந்து மீண்டது, பின் வாஸ்து என்கின்ற விஷயத்தை ஒரு கருவியாக பயன்படுத்தி அடுத்த கட்டம் நகர்ந்து, அப்படி நகர்ந்த பிறகும் என்னிடம் வாஸ்து பார்த்தவர்கள் யாரும் அவர்கள் வீட்டு பூமி பூஜைக்கு என்னை அழைத்ததே இல்லை என்றும் நான் செய்யும் உதவிகளை கூட கொச்சைப்படுத்தினார்கள் என்றும் வருத்தப்பட்டு கூறி இருந்தேன். மேலும் இது போன்று நூற்றுக்கணக்கான கஷ்டங்கள் எனக்கும் இருக்கின்றது. ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இதே போல இருக்கும் என்றும் எழுதி இருந்தேன்.

இதை படித்து விட்டு நிறைய பேர் தொலைபேசியிலும் / மின்னஞ்சல் மூலமாகவும் என்னிடம் மன்னிப்பு கேட்டார்கள். நிறைய நண்பர்கள் நீ எப்போதுமே சந்தோஷமாக இருக்க கூடியவன். இது போன்ற விஷயங்களை எழுதியதால் மற்றவர்கள் முன்னிலையில் அது உன்னை மிக சாதாரணமானவனாக காண்பித்தது மட்டும் அல்லாமல் அடுத்தவர்களையும் புண்படுத்தியது போன்ற ஓர் உணர்வை நீ எழுதிய கடிதங்கள் ஏற்படுத்தி விட்டதாக சொல்லி இதை தவிர்த்து, இனிமேல் தன்னம்பிக்கை சார்ந்த சந்தோஷ விஷயங்களை மட்டுமே பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அன்பான அறிவுரைகளையும் சொன்னார்கள். தீயை தொடாத மனிதர்களே இருக்க முடியாது – பிறந்ததற்கு பின். தொட்டதால் தான் தீயின் மேல் அனைவருக்கும் பயம். ஒரு முறை தொட்ட பின் கிடைக்கும் அனுபவம் வாழ்நாள் முழுவதும் போதனையாக இருப்பதை போல் தான் என் கடிதங்களும். வலியை உணராமல், வலி இல்லாமல் வலிக்கு மருந்து சாப்பிடுபவர்கள் யாரும் உண்டா இவ்வுலகில்? காய்ச்சல் என்று வந்த பின் தானே மருத்துவம் நம்மை சந்திக்கின்றது. அதே போல் நான் இது வரை எழுதிய விஷயங்களும், உண்மை எப்போதும் சுடும் அளவிற்கு வலியை தரக் கூடியது. முன் – வலி கிடைத்தால் தான்  பின் – வலிமை கிடைக்கும் என்பதை உணர்த்தவே இந்தக் கடிதங்கள்.

இருந்தாலும் இந்த இடத்தில் நான் பணிவன்போடு கூறிக் கொள்ள விரும்புவது எதையும் முழுவதுமாக படித்து முடிப்பதற்கு முன் முன்னுரை எழுத கூடாது / எழுதவும் முடியாது. காரணம் நான் என்னுடைய / நம்முடைய பிரச்சினைகளை மட்டுமே சொன்னேன். பிரச்சினைகளுக்கு காரணம் யார்? என்ற கேள்விக்கான விடையை இப்போது சொல்கின்றேன் நான் இவ்வுலகில் காணும் அத்தனை பிரச்சினைகளுக்கும் நான் மட்டுமே காரணம். நான் மட்டுமே ஒரே காரணமாகவும் இருக்க முடியும். எனக்குள் எழும் என்னுடைய அத்தனை கேள்விகளுக்கும் முழுமையான பதில் என்னை தவிர வேறு யாரிடம் இருக்க முடியும்? எனக்கு இவ்வாறு என்றால் உங்களுக்கும் அவ்வாறே.

ஆங்கிலத்திலேயே எனக்கு பிடித்த இரண்டு பழமொழிகள்

 1. One will not; Two cannot Quarrel (ஒருத்தருக்கு இஷ்டம் இல்லையென்றால் அவர் இன்னொருவருடன் சண்டை போட முடியாது).
 2. Peace is so hard to find because it is under your nose (அமைதியை கண்டுபிடிப்பது மிகவும் கடினம் காரணம் அது உன் மூக்கிற்கு கீழ் உள்ளது) – அதாவது வாய் தான் எல்லோருடைய எல்லா வகையான பிரச்சினைகளுக்கும் காரணம்.

மனித வாழ்கையை “தத்துவம்சி” என்கின்ற ஒரே வார்த்தையில் நம் உபநிபதங்கள் 2500 வருடத்திற்கு முன்னே சொல்லி விட்டது.

“தத்துவம்சி” என்ற வார்த்தையை தத் + துவம் + அசி என்று பிரிக்கலாம்.

துவம் என்றால் நீ

தத் என்றால் அது

அசி என்றால் ஆகிறாய்

நீ அது ஆகிறாய்.

நீ என்னவாக ஆக நினைக்கிறாயோ அதுவாக ஆகின்றாய் என்பது தான் இதன் சுருக்கமான விளக்க உரை.

மேற் சொன்ன மூன்று கோட்பாடுகளும் சொல்லும் விஷயங்களை சுருக்கமாக சொல்கின்றேன்

 1. சண்டை மற்றும் கோபம் – இதனை தவிர் அன்பு கொண்டு.
 2. எந்த நேரத்திலும் காலுக்கு கீழே பூமி பிளந்து தன்னை இழுத்து கொள்ளக்கூடும் என்று அச்சப்பட்டு, எல்லோரையும் சந்தேகிக்கிறோம் புரட்சி செய்வதற்கு அல்ல – பிழைத்து வாழ்வதற்கு!! – இதனை தவிர் அமைதி கொண்டு.
 3. எது வேண்டுமோ அதை நினை. எது ஆக மாற நினைக்கிறாயோ அதை மட்டும் தயவு செய்து நினைத்திரு.

ஒரு காலத்தில் என்னுடைய வாய் என் மனம் நினைக்காததை எல்லாம் பேசியது. உறவுகள் இல்லாமல் போனார்கள். நேற்றைய எண்ணமே இன்றைய வாழ்க்கை என்பதற்கேற்ப என்னுடைய மோசமான பழைய எண்ணங்களின் பாதிப்பு தான் இன்றைய என்னுடைய வாழ்க்கை…

நான் எல்லோரையும் அன்று வெறுத்தது. வெறுக்க வைத்த செயல் தான் இன்றளவும் சில, பல இடங்களில் என்னை தெரிந்தோ, தெரியாமலோ ஒதுக்கி வைக்கின்றது. உதாரணமாக என்னை யாரும் புது வீடு கட்டும் போது வாஸ்து பூஜைக்கு கூப்பிடவில்லை என்றால் அதற்கு உண்மையான முக்கிய காரணம்

ஆண்டாள் பி.சொக்கலிங்கம் மிகுந்த வேலை பளு மிக்கவர். அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்பதை எண்ணி கூப்பிடாமல் இருந்தவர்கள் அனேகம் என்பது தான் எனக்கு நன்கு தெரிந்த உண்மை. ஆனால் இந்த நிகழ்வுக்கு மூல காரணமாக நான் சொல்ல வரும் விஷயம் என்னுடைய கடந்த கால மோசமான வாழ்க்கையின் பிரதிபலிப்பு இன்றளவும் தொடர்கின்றது என்பது தான் கலப்படமில்லா உண்மை.

என்னுடைய மிக நெருங்கிய உறவு எப்போதுமே தனிமை தான். அதனால் தான் இன்று வரை தனித்து விடப்படுகின்றேன். தனித்து நிற்கின்றேன். ஆக ஒரு இடத்தில் நான் ஒதுக்கப்படுகின்றேன் ஏதோ ஒரு சுடு சொல். சொல்லப்பட்டு என்றால் அதற்கு காரணம் நான் எப்போதும் விரும்பும், விரும்பிய தனிமை தான்.

இந்த விஷயத்தை எளிதில் விளக்க தமிழில் ஒரு பழமொழியை ஞாபகபடுத்துகின்றேன்

‘சேதம் நினைத்தால்

பூதம் சிரிக்கும்”

சேதம் – அடுத்தவர்களை கஷ்டப்படுத்தினால், கஷ்டப்படுத்த நினைத்தால் பஞ்ச பூதங்களும் நம்மை பார்த்து சிரித்து உன்னுடைய தவறான போக்கிற்கு பின் ஒரு நாள் அசலுடன் வட்டியையும் சேர்த்து வசூலித்து கொள்கின்றேன் என்பது போல் சிரிக்கும் என்று சொல்வார்கள்.

உங்களுக்கு நான் சொல்கின்றேன் நான் அன்று செய்த தவறுகளுக்கு / தப்புகளுக்கு இன்று வரை கஷ்டங்களை அனுபவிக்கின்றேன். தயவு செய்து நீங்கள் சிந்திக்க வேண்டும். இந்த நொடியில் இருந்து தவறை தவற விட்டு விடுங்கள். பூதங்கள் உங்களை பார்த்து சிரிக்காமல் வாழ்த்த அது வகை செய்யும். உங்கள் வாழ்வு உங்கள் கையில் என்பதை நினைவில் நிறுத்தி அடுத்த கடிதத்தில் என்னுடைய வெற்றி பயணத்தின் முதல் படிக்கட்டை வெற்றிகரமாக கடந்த இரகசியத்தை காற்று தத்துவத்தின் மூலமாக பார்ப்போமோ!!!

 

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

TV Shows , , , , , , , , , ,

கடிதம் – 20 – அனுபவமும், காற்றும்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

 வாழ்க வளமுடன்

அனைவருக்கும் வணக்கம்…

“தனியாக பிறந்து, தனியாக வாழ்ந்து, தனியாக மறைந்து” என்கின்ற உண்மை நிலை தத்துவத்தின் நடுவே கொஞ்ச காலம் நான் கற்ற வாஸ்துவினால் மேலும் எனக்கென்று நண்பர்கள், உறவுகள் ஏற்படுத்தி என் வாழ்க்கையை கொஞ்சம் சந்தோஷமாக மாற்றி வாழ ஆசைப்பட்டதற்காவும்

என்னுடைய எதிர்கால இலக்கை இலகுவாகவும், சரியாகவும் அடைய -

நான் வாஸ்துவை உபயோகப்படுத்தினேன். உபயோகப்படுத்துகின்றேன்.

ஆண்டாள் அருளால் இதுவரை ஆயிரக்கணக்கான வீடுகளுக்கும், அலுவலகங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் வாஸ்து பார்த்து இருப்பேன். அப்படி நான் சென்று பார்த்த இடங்களில் புதியதாக ஒரு வீடோ, நிறுவனமோ  கட்டும்போது, கட்டபோகும் அந்த கட்டிடத்தின் உரிமையாளரிடம் தயவுசெய்து உங்கள் உறவினர்களை முறையாக அழைத்து அவர்கள் முன்னிலையில், அவர்கள் ஆசீர்வாதத்துடன் பூமி பூஜை செய்யுங்கள் என்று கூறுவேன். சொல்லி வைத்தார் போல் இன்று வரை அப்படி கூறிய என்னை யாரும் ஏனோ அவர்கள் போட்ட அந்த பூஜைக்கு அழைத்ததே இல்லை. புது வீடு, புதிய நிறுவனம் மற்றும் புதிய தொழிற்சாலை கட்டுவதற்க்காக  என்னிடம் வாஸ்து பார்த்தவர்கள் யாரும் இதுவரை என்னை உறவாகவே எடுத்து கொள்ள வில்லை என்பது தான் பொய்யில்லா நிஜம். இந்த வலியின் வலி, கொடுத்தவர்களுக்கு தெரியாது; அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும் மற்றும் தெரியும்.

எனக்கு ஏற்பட்ட இந்த வலிக்கு எது காரணம்?

காரணம் யார்?

காரணம் மற்றவர்களா?

காரணம் கடவுளா?

சற்று பொறுங்கள். சுடும் உண்மையை பின் பார்ப்போம்.

ஆண்டாள் அருளால் வாஸ்துவினால் எனக்கு கிடைத்த உறவுகளுக்கு நிறைய உதவிகளை செய்திருக்கின்றேன். அதிலும் குறிப்பாக ஒரே உறவுக்கு பலநூறு உதவிகளும், பலநூறு உறவுகளுக்கு குறைந்தது ஒரு உதவியாவது இதுவரை செய்து இருப்பேன். நான் செய்தவைகள் எல்லாம் பிரதிபலனை எதிர்பாரா உதவிகள். உள்ளத்திலிருந்து செய்த உதவிகள். நான் என்னுடன் பழகுபவர்களை என்றுமே தரம், இனம், மதம், ஜாதி பிரித்து பார்த்து பழகுவதில்லை. ஆனால் ஏனோ என்னை என்னிடம் இருந்தே இனம் பிரித்த ஒரு நிகழ்வு என்னை மிகவும் பிரித்து போட்டுவிட்டது. அந்த நிகழ்வு…

என்னுடைய வாஸ்து அனுபவத்தில் ஏறத்தாழ 1000 –க்கும் மேற்பட்ட உடல் உறுப்புகளில் குறைபாடு உள்ளவர்களை(மாற்று திறனாளிகள்) பார்த்து இருப்பேன். பேசி இருப்பேன். சராசரி மனிதனுக்கு இல்லாத வெற்றி பெற வேண்டும் என்கின்ற வெறி மாற்று திறனாளிகளுக்கு மிக அதிகமாக உள்ளதை உணர்ந்து இருக்கின்றேன். அப்படிப்பட்ட வெற்றி பெற வேண்டும் என்கின்ற உணர்வு உள்ள ஒரு ஒரு மாற்று திறனாளிக்கு உதவும் போது அந்த உதவிக்கான காரணமாக அந்த மாற்று திறனாளியின் உறவினர்கள் சொன்ன வார்த்தைகள் கீழே:-

நீ ஒரு மாற்று திறனாளி. உனக்கு உதவி செய்தால் ஆண்டாள் பி.சொக்கலிங்கத்திற்கு தான் நல்லது – காரணம் அவர் தான் சொல்லி இருக்கிறாரே “மாற்று திறனாளிகளுக்கு நிறைய உதவிகள் செய்பவர்களுக்கு நல்லது நடக்கும்” என்று. அந்த உறவினர்கள் சொன்னதில் பாதி சரி. பாதி தவறு என்பது ஒரு பக்கம் இருந்தாலும் வாழ்நாள் முழுவதும் ஒருவனை தனிமை சிறையில் அடைத்து, யாரிடமும் அவன் பேசவோ, யாரையும் அவன் பார்க்கவோ கூடாது என்கின்ற சூழ்நிலையில் அவனை இருக்க வைத்திருந்தால் அவன் மனம் எவ்வளவு வேதனைப்படுமோ அந்தளவிற்கு வேதனையை நெருப்புடன் சேர்த்து வாயில் போட்ட உணர்வு இந்த வார்த்தைகளை எதிர்பாராத விதமாக கேட்டவுடன். இந்த வலியின் வலி, கொடுத்தவர்களுக்கு தெரியாது; அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும் மற்றும் தெரியும்.

எனக்கு ஏற்பட்ட இந்த வலிக்கு எது காரணம்?

காரணம் யார்?

காரணம் மற்றவர்களா?

காரணம் கடவுளா?

சற்று பொறுங்கள். சுடும் உண்மையை பின் பார்ப்போம்.

இது போல் எனக்குள் இருக்கும் கஷ்டங்கள் என பல நூறு விஷயங்களை அடுக்கி கொண்டே போகலாம். எல்லாவற்றையும்  சொல்லி பின் அதனை அலசி ஆராயாமல் மேற்சொன்ன இரண்டு விஷயங்களையே உதாரணமாக எடுத்துக்கொண்டு பார்த்தோமேயானால்

இந்த நிலைக்கு என்ன காரணம் சமுதாயமா, தனி மனிதர்களா, நம்மை படைத்த கடவுளா

என்று எழும்பும் கேள்விகளுக்கு பதில் தான் நம் வாழ்க்கையின் அடிப்படை. இதுபோன்ற நிலை ஆண்டாள் பி.சொக்கலிங்கத்திற்கு மட்டும் இல்லை –  ஒவ்வொரு தனி மனிதனுக்கும் ஏற்படுவதுண்டு வெவ்வேறு பரிணாமங்களில் / நேரங்களில். ஆனால் ஏனோ நாம் சிந்திப்பதும் இல்லை. அலசி ஆராய்வதும் இல்லை. இதன் விடையை நாம் புரிந்து கொண்டால் என்றும் நமக்கு வெற்றி தான். நம் மனம் இன்ப, துன்ப நிலைகளை சமமாக எடுத்து கொள்ளும் பக்குவத்திற்கு வந்து விடும். “காரணமின்றி காரியமில்லை” என்பது புரிந்துவிடும். “மனம் அது செம்மையானால் மந்திரங்கள் தேவை இல்லை” என்பது தெரிந்து விடும்.

பஞ்சபூதங்களில் காற்று மட்டும் அசாத்திய குணம் கொண்டது.

காற்று மட்டும் அதிசயம் மிக்க அதிசயத்தை தன்னுள் அடக்கி உள்ளது.

காற்று மட்டும் ஒப்புகை இல்லா தனித்துவம் கொண்டது.

காற்று நீரோடு சேரும் போது நீர் குமிழியாகவும்,

காற்று நெருப்போடு சேரும் போது புகையாகவும்,

காற்று ஆகாயத்தோடு சேரும் போது இடி, மின்னலாகவும்,

காற்று மண்ணோடு சேரும் போது புழுதியாகவும்,

காற்று காற்றோடு சேரும் போது புயலாகவும் – மாறும் தன்மை கொண்டது.

காற்று தான் கடவுளாக இருந்து நமக்கு கற்பித்தது, கற்பித்தும் வருகின்றது. ஆனால் நாம் தான் இந்த முதல் பாடத்தையே சரியாக படிக்காமல், மெத்த படித்தவர்களாக நம்மை காண்பிக்க முற்பட்டு நிழலுடன் யுத்தம் செய்து நித்தம் போராடாமல் தோற்று கொண்டிருக்கின்றோம்.

எனக்கும், நமக்கும் ஏற்பட்ட / ஏற்படுகின்ற இது போன்ற பிரச்சினைகளுக்கு யார் காரணம்?

காற்று கற்பித்தது என்ன?

வாழ்க்கையை, வாழ்க்கையின் அர்த்தத்தை சற்று காற்றை உற்று பார்த்து உள் வாங்கிய பின் பார்க்கலாமா அடுத்த கடிதத்தில்?

 

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

 

TV Shows , , , , , , , , , , ,

கடிதம் – 19 – வாழ்க்கை – கதையல்ல நிஜம் – IV

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

 வாழ்க வளமுடன்

அனைவருக்கும் வணக்கம்…

பிறந்து ஒரு நிமிடமே ஆன குழந்தை கூட அது பிறந்த உடன் அழுகை என்னும் புரட்சி செய்து தான் தன் தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றது என்று நேதாஜி சொன்னதாக நான் மார்க்ஸிய கொள்கைகள் சம்பந்தமான புத்தகங்கள் படித்த போது படித்ததுண்டு. அதை வேடிக்கையான வாசகமாக நான் எடுத்துக் கொண்டேன் முதலில் படித்த போது. அழுகையின் வலிமையை நான் என் சொந்த வாழ்வில் எனக்கு நினைவு தெரிந்த பிறகு என்னை அறியாமல் உபயோகப்படுத்தி பார்த்த போது தான் அதன் உண்மை புரிந்தது.

எல்லோர் வாயிலும் எப்போதும் நின்று, மென்று துப்பப்பட்டவன். எல்லோரையும் எப்போதும் அழவைத்தவன்…

அப்படிப்பட்ட நான் கண்ணீர் சிந்துவேன் என்பதை என்றுமே நினைத்து பார்த்ததில்லை. நான் சொல்லப் போவது சிலருக்கு கதையாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் இதை கதையாகவே வைத்துக் கொள்ளுங்கள். கதையாக படிப்பவர்களுக்கும், இது கதையல்ல நிஜம் என்று உணர்ந்து படிப்வர்களுக்கும் ஒரு வேண்டுகோள். கதையை விடுத்து கதையின் நிஜத்தை மட்டும் உணர்ந்து உங்களுக்குள் எடுத்துக் கொள்ளுங்கள் தயவு செய்து”.

அழுகைக்கு பின் ஆனந்தம் என்பதை மெய்ப்பித்ததை போல் என் வாழ்க்கையில் அழுகையுடன் ஆண்டாளை பார்த்த பிறகு ஆனந்த படும் வகையில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

நான் குடியிருந்த வீட்டின் வாடகையை எப்போதும் நானோ, மேல் வீட்டில் இருந்தவரோ வீட்டு உரிமையாளரின் வீடு சென்று கொடுத்து விடுவோம். வீட்டு உரிமையாளர் எங்களுக்கு வாடகை கொடுத்த பிறகு நாங்கள் குடியிருந்த வீட்டை பார்க்க வந்ததே இல்லை. அப்படிப்பட்டவர் அடுத்த நாள் திடு திடுப்பென்று வந்து, நான் இந்தப் பக்கம் காலி மனை பார்க்க வந்தேன். அப்படியே வீட்டை பார்க்க வந்தேன் என்று கூறிவிட்டு வீட்டை சுற்றி பார்த்தவர், நான் சுவரில் செய்த துவாரம் மற்றும் மரத்துண்டுகளை சுவற்றில் Fevicol வைத்து ஒட்டி இருந்ததை பார்த்து விட்டு எதற்கு இதை செய்தீர்கள் என்று என்னிடம் கேட்டார். நான் சொன்ன பதிலில் திருப்தி அடையாத அவர் என்னிடம் கடினமான வார்த்தைகளை உபயோகப்படுத்த ஆரம்பிக்க, எனக்கும் கோபம் வந்து நானும் கோபத்தில் வார்த்தைகளை விட அது பெரிய வாக்குவாதமாக மாறி எங்களை வீட்டை விட்டு காலி பண்ண சொல்லிவிட்டார் உடனடியாக. எனக்கோ புது வாடகை வீட்டிற்கு முன்பணம்(Advance) கொடுக்க கூட பணம் இல்லை. இருக்கின்ற வீட்டை காலி செய்தால் உண்மையிலேயே தெருவில் தான் நிற்க வேண்டும் என்கின்ற நிலைமை. நான் வீட்டு உரிமையாளரிடம் என் பிரச்சினையை சொன்ன போது அவர் இந்த மாத வாடகை கூட எனக்கு தேவையில்லை. நீங்கள் கொடுத்த முன்பணம்(Advance) ரூ.17000 – த்தை (ரூ.1700 – மாத வாடகை x 10 மாதம்) உடனடியாக கொடுத்து அனுப்புகிறேன். Pl get out & get lost என்று கூறிவிட்டு சென்று விட்டார். மொத்த பிரச்சினைக்கு நடுவே, ரூ.17000 ரொக்கப் பணம் எனக்கு கையில் வந்தது சேர்ந்தது பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது. சிரமமே இல்லாமல் ஓரளவு நல்ல வீடு வாடகைக்கும் உடனே கிடைத்தது.

வீடு மாறும் போதே ஒருவித சந்தோஷத்துடன் வீடு மாறினோம் காரணம் நாங்கள் சென்ற புது வீட்டின் மாத வாடகை ரூ.1300/- மட்டுமே. அந்த வீட்டின் 10 மாத முன்பணம் (Advance) ரூ.13,000 என்பதால் வீடு மாற்றத்துக்கு முன்னே எங்கள் கையில் ரூ.4000 இருந்தது. புது வீட்டுக்கு சென்ற பின் முதல் வேலையாக என்னுடைய மிக நெருங்கிய நண்பன் ஒருவனிடம் வேலை கேட்டு போனேன். அங்கு பார்க்க சென்ற நண்பனின் நெருங்கிய நண்பரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அவர் என்னை சிங்கப்பூர் வா. நான் இடம், சாப்பாடு இலவசமாக கொடுத்து உதவுகின்றேன். அங்கு நீ வேலை தேடிக் கொள் என்று என்னை சிங்கப்பூர் அழைத்தார். என் மிக நெருங்கிய நண்பன் இராம்குமார் அப்பா திரு.முத்துகிருஷ்ணன் Customs –ல் உயர் அதிகாரியாக பணி புரிந்து வந்ததால் அவரின் ஏற்பாட்டின் படி வங்கி கியாரண்டி இல்லாமல் சிங்கப்பூர் செல்ல சுற்றுலா விசா 15 நாளுக்கு கிடைத்தது. ரூ.35,000 வட்டிக்கு கடன் வாங்கி (3 மாதத்திற்குள் திருப்பி கொடுத்து விடுவதாக கூறி ரூ.35000 கடனாக வட்டிக்கு வாங்கும் போதே வட்டியை எடுத்து கொண்டு அதாவது ரூ.50000 –ல் இருந்து ரூ.15000 வட்டியை எடுத்து கொண்டு மீதம் கிடைத்த பணம்) Singapore –க்கு கிளம்பி போனேன்.

சிங்கப்பூர் போன முதல் 15 நாளுக்குள் வேலை கிடைக்கவில்லை. அதனால் 15 நாள் சுற்றுலா விசாவை 30 நாளாக நீட்டித்து வேலை தேடினேன். எனக்கு 1700 சிங்கப்பூர் டாலர் – “Employment Pass Holder” Permit –ல் Cuestar என்கின்ற நிறுவனத்தில் வேலை கிடைத்தது. இருந்தாலும், இருந்த கடனை இந்தப்பணம் வைத்துக் கொண்டு அடைக்க நெடுங்காலம் ஆகும் என்பதால் அந்த வேலைக்கு போக சற்று தயங்கி யோசித்து கொண்டு இருந்தேன். அந்த நேரத்திலே அடுத்த அதிசயம் நடந்தது. நான் Bedok என்ற இடத்தில் என்னை அழைத்து சென்ற நண்பரின் நண்பர்கள் வீட்டில் தான் தங்கியிருந்தேன். அவர்கள் எல்லோரும் 1 லட்சம் (தனி, தனியாக) பணத்தை ஊருக்கு அனுப்ப பேசிக்கொண்டிருந்த வேலையில், நான் அவர்களிடம் வேண்டுகோள் வைத்தேன். உங்கள் பணத்தை என்னிடம் கொடுங்கள். நான் ஊரில் சேர்த்து விடுகின்றேன் என்பதற்கு அவர்களும் சம்மதித்ததால் அந்தப் பணத்திற்கு ஈடாக பொருட்கள் வாங்கி அதை சென்னை எடுத்து வந்து 1½ லட்சம் ரூபாய் வரை லாபம் வைத்து வாங்கி வந்த பொருட்களை விற்று விட்டேன்.

அதன் பிறகு வந்த லாப பணம் தீரும் வரையில் வேலை தேடினேன். இன்னும் ஒரு  மாதத்திற்கு பிறகு தாக்கு பிடிக்கவே முடியாது என்கின்ற சூழ்நிலை வந்தபோது, நான் ஆறு மாதத்திற்கு முன் குஜராத் நிறுவனம் ஒன்றுக்கு இண்டர்வியூ சென்று அதன் M.D சந்தோஷப்படும் வகையில் இண்டர்வியூ –வில் நடந்து கொண்டது ஞாபகம் வந்தது. நான் அந்த வேலைக்கு எனக்கு உதவி செய்த Live Connections என்கின்ற வேலை வாங்கித் தரும் நிறுவனத்திடம் சென்று அந்த வேலை குறித்து கேட்டு வரலாம் என்று சென்ற போது அடுத்த அதிசயம் நடந்தது. உமா என்று அந்த நிறுவனத்தில் பணி புரிந்த பெண்மணி சந்தோஷத்தில் என்னை பார்த்து, Chockalingam You Mad Fellow. எங்கப்பா போயிட்டே. அந்த குஜராத் நிறுவன M.D உன்னை தான் தங்கள் நிறுவனத்தின் சென்னை மேலாளாராக போடனும் என்று இவ்வளவு மாதமாக காத்திருக்கிறார். நாங்கள் உன்னுடைய PP No –க்கு போன் செய்தால் யாரும் எடுக்கவில்லை. அனுப்பிய கடிதங்கள் திருப்பி வந்து விட்டது. தந்தி கொடுத்தாலும் உன்னிடம் இருந்து பதில் வரவில்லை; இன்று காலை தான் அந்த நிறுவன M.D சரி சொக்கலிங்கம் வராவிட்டால் வேறு ஆளை போடுங்கள் என்று சொன்னார் என்று கூறிவிட்டு என்னை உடனடியாக பெங்களூர் போய் அந்த நிறுவனத்தின் Regional Manager –ஐ பார்த்து விட்டு வர சொன்னார்கள். உடனே பெங்களூர் பயணம் மேற்கொண்டேன். Regional Manager –ம் என்னை உடனே குஜராத்தில் உள்ள Anand என்ற இடத்தில் இருந்த அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் பயிற்சி எடுத்துவிட்டு சென்னை வேலையில் சேர சொல்லிவிட்டார்.

ஆனந்த் என்ற இடத்திற்கு நேரடியாக செல்ல Train ticket கிடைக்காததால் நான் மும்பை சென்று ஆனந்த் செல்ல முடிவெடுத்தேன். முடிவெடுத்த படி மும்பை கிளம்பி சென்றேன் Reserved Ticket –ல். மும்பையில் இருந்து ஆனந்த் என்கின்ற இடத்திற்கு 8½ மணி நேர ரயில் பயணம் Un Reserved பெட்டியில். என் வாழ்க்கையில் மறக்கவே முடியாத பயணமாக அது இன்று வரை உள்ளது. காரணம் Un Reserved – பெட்டியில் மிக பயங்கர இட நெருக்கடி. வேறு வழி இல்லாமல் கழிவறையில் உள்ள கண்ணாடியை கழற்றி கழிவறை மேடை மேல் போட்டு முகம் தெரியாத 3 பேர் அமர்ந்து பயணிக்க எத்தனித்த போது நானும் அவர்களுடன் என் உடலை சுருக்கி உட்கார்ந்து 8½ மணி நேரம் பிரயாணப்பட்டேன். உட்கார்ந்த இடத்தை விட்டு எழுந்திருக்காமல், உணவு கூட அருந்தாமல் 8½ மணி நேரம் மிகவும் கஷ்டப்பட்டு பிரயாணப்பட்டு ஆனந்த் என்ற இடத்தை அடைந்தேன். கழிவறையில் உட்கார்ந்து பயணம் செய்தபோது கஷ்டம் உடலுக்கு இருந்தாலும் மிகவும் வைராக்கியத்துடன் இராமநாமம் போல நான் எனக்குள் சொல்லி கொண்டே போனது; நான் ஜெயிக்க பிறந்தவன். உண்மையாக வேலை பார்த்து என் குடும்பத்தை காப்பாற்றி எல்லோரையும் ஒரு நாள் என்னை நோக்கி திரும்பி பார்க்க வைப்பேன் என்கின்ற வார்த்தைகளை தான். எல்லாவற்றிற்கும் மேலாக திருச்செந்தூரில் பிச்சை எடுத்ததை விட – வாழ்க்கையில் மோசமான அனுபவம் வேறு எதுவும் இல்லை என்பதையும் என் வாழ்க்கையில் வெற்றி பெறவே இந்தப் பிராயணம் என்பதால் எனக்கு நானே சந்தோஷத்தை ஏற்படுத்தி கொண்டு இந்த பிரயாணத்தை செய்தேன். அதிலிருந்து இன்று வரை எல்லாமே வெற்றி தான்.

நல்ல மாலுமிக்கு காற்று கூட அவர் சொல்லுகின்ற திசையில் வீசும் என்பதை அடுத்த கடிதம் படித்த உடன் புரிந்து கொள்ளுவீர்கள். எப்படி எனக்கு இது சாத்தியமாயிற்று – அடுத்த கடிதத்தில் உங்களுக்கு தேவையான வெற்றிக்கான இரகசியங்களுடன்

 

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

TV Shows , , , , , , , , , , ,

கடிதம் – 18 – வாழ்க்கை – கதையல்ல நிஜம் – III

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்

அனைவருக்கும் வணக்கம்…

பிள்ளையார்பட்டியிலிருந்து மதுரை வந்து தனியார் பேருந்து பிடித்து சென்னை வருவதற்கு ஏதுவாக மதுரை பேருந்தினுள் ஏறினேன். எனக்கு கொடுக்கப்பட்ட இருக்கை எண் 3 (ஒற்றை இருக்கை) இன்னொருவர் எனக்கு 3 –ம் எண் இருக்கை கிடைத்தால் தான் நான் பேருந்தில் பயணம் செய்வேன். எனக்கு 3 –ம் எண் இருக்கை தருகின்றேன் என்று சொல்லிவிட்டு வேறு ஒருவருக்கு தந்து விட்டீர்கள். அந்த இருக்கையை எனக்கு ஒதுக்கி தராவிட்டால் எனக்கு என் பணத்தை திருப்பி கொடுங்கள் என்று ஓட்டுனரிடம் பயங்கர தகராறு செய்தார். எனக்கு அவர் மேல் கோபமோ கோபம். இருந்தாலும் அடக்கி கொண்டு பேருந்தின் ஓட்டுனர் என்னிடம் ரொம்ப பணிவாக கேட்டுக் கொண்டதற்காக நான் 9 –ம் எண் இருக்கைக்கு மாறி உட்கார்ந்து பயணிக்க ஆரம்பித்தேன். களைப்பில் நன்கு தூங்கியும் விட்டேன். இராமநத்தம் அருகில் செல்லும் போது நள்ளிரவு திடீரென்று பெருத்த சத்தம். எங்கள் பேருந்து ஓட்டுனர் வண்டியை ஓட்டும்போது தூங்கிவிட்டதால் எதிர்பாராத விதமாக முன் சென்ற அரசாங்க பேருந்தின் மேல் மோதி நான் சென்ற பேருந்தின் முன் பக்கம் பலத்த சேதம் அடைந்திருந்தது. இரண்டு பேருந்துகளில் பயணித்த யாருக்கும் எந்தவித காயங்களோ, அடியோ துளி கூட கிடையாது – என்னிடம் சண்டை போட்டு 3 –ம் எண் இருக்கையில் வலுக்கட்டாயமாக பயணம் செய்தவரை தவிர. அவருக்கு முகம் முழுவதும் இரத்த காயம். ஒத்தை இருக்கை என்பதாலும் அவர் இருக்கையின் முன்னாடி கண்ணாடி உள் கதவு இருந்ததாலும் அவருக்கு நல்ல அடி. அந்த இரவிலும், அந்த கஷ்டத்திலும் என் மனதினுள் ஒரு சிறிய சந்தோஷம். நாம் சாக பிறக்கவில்லை. என் அப்பா சொன்னது போல் என் பிறப்பு வேறு எதற்காகவோ என்பது போல் நினைத்து கொண்டு அடிபட்டவரிடம் ஆறுதல் சொல்லிவிட்டு தனியார் பேருந்து ஓட்டுனரிடம் சென்னைக்கு அரசாங்க பேருந்தில் செல்வதற்கு ஏதுவாக (நாங்கள் குழுவாக 16 பேர் மட்டும்) பணத்தை வாங்கிக் கொண்டு சென்னை திரும்பி வந்து சேர்ந்தோம். என் அம்மா, அப்பாவிடம் கொட்டி தீர்த்து விட்டேன், நான் பாட்டி வீட்டில் அவமானப்பட்ட கதையை. அவர்களுக்கும் ஒரே கஷ்டமாகி போய் விட்டது. நான் அவர்களிடம் கோவில்களுக்கு போய் வந்ததையும், பேருந்து விபத்தை பற்றி மட்டும் சொல்லிவிட்டு வேறு எந்த விஷயத்தை பற்றியும் கூறாமல் அடுத்து என்ன என்று அன்று மதியம் முதல் யோசிக்க ஆரம்பித்தேன்.

-    என் அப்பா என்னை கோவிலுக்கு போய்விட்டு வரச் சொன்னதில் இருந்து நான் சென்னை திரும்பி வந்தது வரை நடந்த சம்பவங்கள் எல்லாம் ஏதோ சங்கிலி தொடர்பு போல் இருந்தது. யோசிக்க, யோசிக்க பிரமிப்பாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது.

என்னிடம் எத்தனையோ பலவீனங்கள் இன்றளவு இருந்தாலும் என்னுடைய ஒரே பெரிய பலம் என்ன என்று யாராவது கேட்டால் என்னை ஒருமுறை பார்த்து சில நிமிடங்கள் பேசியவர்கள் கூட சட்டென்று சரியாக சொல்லிவிடுவார்கள் – “அது என்னுடைய ஞாபக சக்தி” என்று. அப்படிப்பட்ட ஞாபகசக்தி வாய்க்கப்பட்ட எனக்கு மூன்று முக்கியமான விஷயங்கள் இன்று வரை சுத்தமாக ஞாபகத்திலும் இல்லை. ஞாபகப்படுத்தவும் முடியவில்லை.

-    அதில் முதலாவது திருச்செந்தூரில் என்னிடம் பேசிய அடியார் முகம் என் ஞாபகத்தில் இல்லை.

-    திருச்செந்தூர் கோவிலில் என்னை கடந்து சென்ற இரண்டு பேரின் முகம் என் ஞாபகத்தில் இல்லை.

-    ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் என்னை சந்தித்த மனிதர் முகமும் என் ஞாபகத்தில் இல்லை.

மேற்கூறிய மூன்று விஷயங்களும் இன்றளவும் என்னைப் பொறுத்தவரை ஒரு அமானுஷ்ய ஆச்சரியமாகவே இருந்து வருகின்றது.

இது தவிர நடந்த சம்பவங்களில் ஒரு ஆச்சரிய உண்மை ஒளித்து இருக்கின்றது என்பது தான் அடுத்த கட்ட சுவாரசியம். என் அப்பா அவர் வாழ்நாளில் மிகவும் அடிக்கடி உபயோகப்படுத்திய வார்த்தைகள் “காரணமின்றி காரியமில்லை”. அதன் அர்த்தம் அவர் என்னை கோவிலுக்கு போக சொல்லி நான் போய் வந்த பின் தான் புரிந்தது.

ஆச்சரியம் 1:    தீவிரமான திராவிடர் கழக கொள்கை பிடிப்பு கொண்ட என் அப்பா தனக்கு திருநீறு வைத்துக்கொண்டு என்னை கோவிலுக்கு போகச் சொன்னது.

ஆச்சரியம் 2:    கடவுள் நம்பிக்கை கொண்ட என் அம்மா பணம் இல்லாத போது எதற்காக கோவில், குளம் என்று கேட்ட பின்னும் நான் கோவிலுக்கு பிரயாணப்பட்டது.

ஆச்சரியம் 3: பேருந்து பிரயாணம் என்றாலே எனக்கு சிறு வயது முதல் ஒத்து வராது. அப்படிப்பட்ட நான் குடித்துவிட்டு பேருந்து பயணம் செய்தேன் என்பது கனவிலும் நடக்காத விஷயம். ஆனால் நடந்தது.

ஆச்சரியம் 4:    நேராக கோவிலுக்கு போயிருந்தால் எந்தவித மாற்றமும் என்னிடம் ஏற்படாமல் சென்னை வந்து இருப்பேன். ஆனால் நொடியில் எடுத்த முடிவு என்னை என் பாட்டி வீட்டிற்கு போகச் செய்தது. அந்த கால கட்டங்களில் அவ்வாறு முடிவெடுக்க கூடியவல்ல நான். அங்கு போனதால் தான் ஸ்ரீவில்லிபுத்தூர் / பிள்ளையார்பட்டி போன்ற இடங்களுக்கு போக முடிந்தது. பெரிய விபத்திலிருந்து தப்ப நேரிட்டது. எனக்குரிய இருக்கையில் சண்டை போட்டு அமர்ந்து விபத்தில் சிக்கியவர் முகத்தில் கொட்டிய இரத்தத்தை நினைக்கவே பயமாக இருக்கின்றது. அடிபட்ட பின் அந்த நபர் சொல்லிய வார்த்தை “நீ தப்பிச்சுட்டேயா”. அவர் கஷ்டப்பட்டு சொன்னாரா அல்லது வருத்தப்பட்டு சொன்னாரா என்பது எனக்கு தெரியாது. அன்று யோசித்து பார்க்கையில் அது எனக்கு கடவுளிடம் இருந்து கிடைத்த ஆசீர்வாதமாக எடுத்து கொண்டேன்.

ஆச்சரியம் 5:    என்னிடம் திருச்செந்தூரில் பேசின அடியார் ஏன் வந்தார், எதற்கு திடீரென்று சென்றார் என்பது யோசித்து பார்க்கையில் அது மற்றொரு ஆச்சரியம்.

ஆச்சரியம் 6:    நான் சிறுவயதிலிருந்தே பசி தாங்க மாட்டேன். ஆனால் 1 நாள் முழுவதும் சாப்பிடாமல் இருந்தது அடுத்த அதிசயம்.

ஆச்சரியம் 7:    என்னிடமே பணம் இல்லை. ஆனால் என்னை அறியாமல் என்னிடம் இருந்த சொற்ப பணத்திலிருந்து ரூ.100 – ஐ ஆண்டாள் கோவிலில் நான் சேர்த்தது எனக்கே புரியாமல் நடந்த அதிசயம்.

ஆச்சரியம் 8:    பிச்சையாக கிடைத்த உணவானது புளி சாதமாகும். உணவு வகையிலேயே எனக்கு மிகவும் பிடித்த புளி சாதத்தையும், ரூ.10 –ஐயும் என்னிடம் உரையாடிய அடியாருக்கே கொடுத்து விட்டேன் – அதுவும் என்னையறியாமல். அவரும் மறுப்பேதும் சொல்லாமல் அந்தப் பணத்தையும், சாப்பாட்டையும் வாங்கி கொண்டதும் ஓர் அதிசயம். திடீரென்று என்னிடம் வந்து பேசியவர், திடீரென்று சதுரகிரி போகணும் என்று என்னை விட்டு சென்றதும் ஓர் அதிசயம்.

ஆச்சரியம் 9:    அடியார் எனக்கு சொன்ன “இதுவும் கடந்து போகும்” என்ற வாக்கியத்தை அவர் சொன்னதை நேராக இருந்து கேட்டதை விட சிந்தித்து பார்த்த போது அந்த வாக்கியமே ஓர் அதிசயமாக பட்டது.

ஆச்சரியம் 10:   பிள்ளையார்பட்டி கோவிலில் சாமி கும்பிட கருவறை முன் நின்ற போது அங்கிருந்த குருக்கள் என்னை முன்வந்து உட்கார்ந்து பிள்ளையாரை வணங்குமாறு கேட்டுக் கொண்டார். நானும் சந்தோஷத்துடன் உட்கார்ந்து சாமியை பார்த்தேன். 400 –க்கும் மேற்பட்ட பிள்ளையார் சிலையை உடைத்த எனக்கு பிள்ளையார்பட்டியில் முதல் மரியாதை கிடைத்தது அதிசயத்தின் உச்சகட்டம். (பின் குறிப்பு:- பிள்ளையார்பட்டியில் வேலை பார்க்கும் தலைமை குருக்கள் உள்ளிட்ட அனேக குருக்கள் என் அம்மா பாட்டி வாழ்ந்த இடத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் என்பதை பிற்காலத்தில் நான் அறிந்து கொள்ள நேரிட்டது போது அதுவும் ஒரு வகையான ஆச்சரியத்தை கொடுத்தது).

ஆச்சரியம் 11:   நான் எந்த காலத்திலும் செய்த உதவிகளை யாருக்கும் சொல்லி காட்டியது இல்லை. ஆனால் என் அம்மா பாட்டி, என் அத்தையிடம் அவ்வாறு சொல்லி நான் கடினமாக நடந்து கொண்டதும் ஒரு ஆச்சரியம் தான்.

இப்படி அதிசயங்களை அசைப்போட்டவாறே இரவு தூங்கி போனேன். அடுத்த நாள் திருச்செந்தூரில் எனக்கு கேட்ட இரண்டாவது வார்த்தைக்கு அர்த்தத்தை தேடி T.Nagar –ல் 4 – 5 பதிப்பகங்கள் அலைந்து திரிந்து பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் படம் போட்ட ஒரு புத்தகம் வாங்கி வந்து ஒரு மணி நேரத்தில் முழு புத்தகத்தையும் படித்து முடித்து, அந்த புத்தகத்தில் சொல்லப்பட்ட விஷயத்தின் படி என் வீட்டின் வடக்கு சுவரில் ஒரு செங்கல் வைக்கும் அளவிற்கு துவாரமும், வீட்டிலிருந்த Arch –களை மெலிதான மரத்துண்டுகளை வைத்து மறைத்தும், வடகிழக்கு மூலையில் சின்ன அகல்விளக்கும் ஏற்றி வைத்தேன். நான் இந்த மூன்றையும் செய்த அடுத்த நாளே என் ஆட்டம் ஆரம்பமானது.

எப்படி என் ஆட்டம் ஆரம்பித்தது?

வாஸ்து, ஜோதிடம், பெயர் மாற்றம் உண்மையா?

அடுத்த மாத வாடகைக்கு பணம் இல்லாத நிலையில் இருந்த என் வாழ்க்கையில் நடந்தது என்ன?

பதில் – அடுத்த கடிதங்களில் விரிவாக சொல்கின்றேன்:-

வாழ்க்கையில் வெற்றி பெற்ற யாரும் சொல்ல துணியாத சூட்சுமங்களை, சொல்லாத இரகசியங்களை என் வாழ்வில் நடந்தேறிய அற்புத அனுபவங்களுடன் சொல்லுவேன்…

அதை புரிந்து கொள்ள கீழ்கண்ட இந்த வாக்கியத்தை மட்டும் நினைவில் வைத்து கொள்ளுங்கள்:

“மீனாக பிறந்து சாவது என்று முடிவெடுத்து விட்டால் தவறில்லை….

அதற்காக பொழுது போக்கிற்காக மீன் பிடிப்பவனின் தூண்டிலில் சிக்காதே…

பிழைப்பிற்காக மீன் பிடிப்பவனின் வலையில் சிக்கிடு….

உன் மரணம் ஒருவனை வாழ வைக்கட்டும்”.

 

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

TV Shows , , , , , , , , , ,

கடிதம் – 17 – வாழ்க்கை – கதையல்ல நிஜம் – II

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!
நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்

அனைவருக்கும் வணக்கம்…

பிறப்பின் நோக்கம் இறப்பு அல்ல என்பது புரியாமல் பயணப்பட்ட நான், நினைவு தெரிந்து முதல் முதலாக திருச்செந்தூர் மண்ணை மிதித்தேன். என் வீட்டிலிருந்து நேராக திருச்செந்தூர் போனால் கையில் வைத்திருந்த பணம் பத்தாது போய்விட்டால் என்னாகும் என்ற சந்தேகம் வலுத்ததால் என் பாட்டி வீட்டிற்கு பிரயாணப்பட்ட என்னை அங்கு நான் மிகவும் மதித்த, நேசித்தவர்களே அந்நியனாக்கி விட்டார்களே என்ற மன வேதனையோடு பணத்தை பற்றிய சிந்தனை இல்லாமல் ஏதோ ஒரு உந்துதல் காரணமாக, ஈர்ப்பின் காரணமாக பிரயாணப்பட்டு விட்டேன் திருசெந்தூருக்கு. பேருந்தில் ஏறும் வரை எந்தவித முன்னேற்பாடு பற்றியும் சிந்திக்கவில்லை. இனிமேல் வாழ்க்கை வாழமுடியாது; வாழ்க்கை அர்த்தமற்றது; வாழ்க்கையே கேள்விகுறி; வாழ்க்கை என்னை வேடிக்கை பொருளாக்கிவிட்டதே என்ற வேதனையுடன் அழுதுகொண்டே வெளிப்பிராகரத்தில் உட்கார்ந்து இருந்தேன் திருச்செந்தூர் முருகன் இருக்கும் திசையை நோக்கி.

நான் உட்காந்திருந்த இடத்தில் இருந்து 20 அடி தொலைவில் 4 – 5 அடியார்கள் உட்கார்ந்து இருந்ததாக நினைவு. கடலில் விழுந்து என் வாழ்க்கையை முடித்து கொள்ளலாம் என்கின்ற எண்ணம் என் உடல் முழுவதும் வியாபித்து இருந்தாலும் எனக்காகவும், என் படிப்பிற்காகவும், என் ஊதாரித்தனமான செலவிற்காகவும் தங்கள் சொத்து அனைத்தையும் இழந்து நிற்கின்ற என் அப்பா / அம்மா – நான் உலகில் இல்லை என்றால் அவர்கள் சாப்பாட்டிற்கு என்ன பண்ணுவார்கள்? நான் இறந்த உடன் எந்த தவறும் செய்யாத அவர்களும் இறந்து போய் விடுவார்களே? – என்பதை நினைத்து மட்டும் தான் அழுது கொண்டே இருந்தேன். அப்போது என் அருகில் உருவத்தில் மிக மிக சாதாரணமான, சராசரிக்கும் குறைவாக மதிப்பீடக்கூடிய அடியார் ஒருவர் வந்து அமர்ந்தார் திருவோட்டுடன். மெல்ல அவர் என்னிடம் பேச ஆரம்பித்தார் எனக்கென்னவோ அவரிடம் பேசியபோது உள்ளம் அறியா ஆனந்தம். நானும் கொஞ்சம், கொஞ்சமாக பேச ஆரம்பித்தேன். அவர் பேசிய அனைத்துமே கேட்பதற்கு ஆனந்தமாக இருந்தது. அதில் 2 விஷயங்கள் மட்டும் தான் எனக்கு நினைவில் இருக்கின்றது அதில் முக்கியமானது முருகனைத் தேடி வந்து விட்டாய். முருகன் தமிழ் கடவுள். தமிழரின் முதல் கடவுள் “முருகனுக்கு மிஞ்சியதோர் தெய்வமில்லை” – (மு – முகுந்தன்; ரு – ருத்ரன்; க – கமலாசனன் – இப்படி மும்மூர்த்திகளும் ஒன்றாக இணைந்த ஒரு தெய்வம் தான் முருகன்) – எனவே கவலை வேண்டாம். “இதுவும் கடந்து போகும்” என்று என்னிடம் அவர் பேசிக் கொண்டு இருந்த போது நடந்த என்னை மெய்சிலிர்க்க வைத்த சம்பவம் ஒன்று பற்றி நான் கட்டாயம் குறிப்பிட்டாக வேண்டும் – முதல்முறையாக அந்த சம்பவத்தை நான் வெளி உலக பார்வைக்கு சொல்கின்றேன்.

- நான் பேசிக்கொண்டிருந்த அடியாருக்கு பக்கத்தில் 4 – 5 அடியார்கள் வரிசையாக உட்கார்ந்து இருந்தார்கள் அல்லவா? யாரோ ஒரு பணக்கார மனிதர் மார்பு நிறைய சந்தனத்துடன் அங்கிருந்த அடியார்கள் எல்லோருக்கும் ரூ.10 மற்றும் சாப்பாடு பொட்டலம் கொடுத்து விட்டு எனக்கும், என் பக்கத்தில் பேசிக் கொண்டு இருந்த அடியார்க்கும் கொடுத்து விட்டு போய் விட்டார். அந்த மனிதர் எனக்கு தர்மம் இட்ட போது என்னை அறியாமல் நான் அந்த தர்மத்தை பெற்று கொண்டேன். என்னுடைய சப்தநாடியும் அடங்கி, ஒடுங்கி போக வைத்த சம்பவம் அது. உலகத்திலே பெரிய ஆள் நான் தான் என்றிருந்த என் அகம்பாவத்தை சுக்கு நூறாக்கியது போன்ற நிகழ்வு அது.

ஏற்கனவே நொறுங்கி போய் இருந்து மேலும் நொறுங்கி போன அந்த நேரத்தில், என்னிடம் பேசிக் கொண்டிருந்த அந்த அடியார் நான் சதுரகிரி போகணும். பத்திரமாக வீடு போய் சேருங்கள். இதுவும் கடந்து போகும் என்று சொல்லியவாறு கிளம்பி போன சில மணித்துளிகளில் இரண்டு பேர் என்னை தாண்டி போனார்கள். அவர்கள் முகம், உடை, எதுவும் ஞாபகம் இன்றளவும் என்னிடம் இல்லை. ஆனால் அவர்கள் பேசி சென்ற 2 வார்த்தைகளில் எனக்கு அதிகம் ஈர்ப்பை கொடுத்த வார்த்தை “ஆண்டாள்”.

பிறந்த பிள்ளை தாயின் மார்பில் இருந்து தன் வாழ்வாதாரத்திற்குண்டான பாலை குடிக்க எத்தனை ஆர்வத்துடன் இருக்குமோ அத்தகைய ஆர்வம் எனக்கும் ஏற்பட்டது ஆண்டாள் பெயர் கேட்டவுடன். உடனடியாக ஆண்டாள் யாரென்று விசாரித்தேன். முதல் நாள் இரவு சாப்பிட்டது. அடுத்தநாள் காலை பல் துவக்கிய பின் Eltroxin மாத்திரை போட இரண்டு மடக்கு தண்ணீர் குடித்ததோடு சரி. ஆனால் உடம்பிற்கு பசி தெரியவில்லை. அசதி தெரியவில்லை. கஷ்டம் மறந்து போனது. உயிரை விடுவதென்று முடிவு எடுத்தாகிவிட்டது, அந்த உயிரை ஆண்டாளை பார்த்த பின் விடுவது என்று சடாரென்று முடிவெடுத்து ஆண்டாளை தரிசிக்க பிரயாணப்பட்டேன். மிகவும் கடினமாக இருந்தது பிரயாணம். ஆனாலும் அலுப்பு தெரியாத பயணமாக இருந்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் மண்ணில் கால்பதித்து கோவில் நோக்கி போனேன் – பஞ்சபராரியாய்.

ஆண்டாள் கோவில் எங்கே என்று விசாரித்தவாறு சரியாக சாயங்காலம் 6 மணிக்கு கோவில் உள் நுழைந்தேன். எந்த மகாலக்ஷ்மியை, பூமித்தாயை கிண்டலடித்து அடையாறு திராவிடக் கழக கூட்டத்திலேயும், தெருமுனை கூட்டங்களிலேயும் பேசினேனோ அந்த ஆண்டாளை அவருடைய கர்ப்பகிரகத்திலேயே பார்க்க எத்தனித்த போது திடிரென்று மின்சாரம் இல்லாமல் போனது. கற்பூர தீப ஆராதனையை மின்சார உதவியின்றி பார்த்தேன். கற்பூர ஒளியில் ஆண்டாள் எனக்கு ஒரு பெரிய நம்பிக்கையை கொடுத்தது போல் உணர்வு. எனக்காகவே காத்திருந்தவள் போல் அந்த சிலையின் முகத்தில் அவ்வளவு சந்தோஷம். ஏன் இவ்வளவு நாள் வரவில்லை என்பது போல் முகபாவனை. அடிக்கடி வந்து போ என்று சொன்னது போல் ஒரு சமிக்ஞை. ஆனந்த ஆண்டாள் தரிசனத்தில் மெய்மறந்து என்னை அறியாமலேயே என்னிடம் இருந்த ரூ.242 – ல் இருந்து ரூ.100 – ஐ அந்த கோயில் உண்டியலில் சேர்த்துவிட்டு, வெளிப்படிகட்டில் ( xxxx ) உட்கார்ந்து என்னை நானே தேற்றிக் கொண்டு என் நிலையை (காலையில் அவமானம், மதியம் பிச்சைக்காரன்) நினைத்து மெதுவாக அமுது கொண்டு இருந்த போது(சற்று தைரியத்துடன்), ஒரு மனிதர் பக்கத்தில் வந்து ஏன் அழுகிறாய் என்று கேட்ட ஒரே ஒரு வார்த்தைக்கு அதுவரை என் மனதில் இருந்த எல்லா குமுறல்களையும் அவரிடம் கொட்டி தீர்த்து விட்டேன். பொறுமையாக அத்தனையும் கேட்ட அவர் “சரிப்பா தம்பியை பார்த்துட்ட; அத்தையை பார்த்துட்ட; அப்படியே பிள்ளையார்பட்டி போய் அண்ணனை பார்த்துட்டு போ எல்லாம் சரியாக இருக்கும் என கூறிவிட்டு கிளம்பி போய்விட்டார். இதில் புரியாத புதிர் ஒன்று உண்டு. நான் போன கோயிலோ வைணவக் கோயில். என்னிடம் வந்து பேசியவர் நெற்றியிலோ முழுவதுமாக விபூதி இருந்தது. எது எப்படியோ அவரிடம் பேசிய பிறகு மனம் இலேசாகி இருந்தது. ஏதோ ஒரு இனம்புரியா மாற்றம் என்னுள். தற்கொலை எண்ணம் கொஞ்சம் மனதை விட்டு அகன்றது போல் ஒரு உணர்வு. பின் அந்த பெரியவர் சொன்னதற்காக பிள்ளையார்பட்டி நோக்கி பிரயாணப்பட ஏதுவாக, மதுரையில் உள்ள என் அத்தை வீட்டிற்க்கு சென்றேன். என் அத்தையின் கணவர் குடும்பம் மதுரையில் மிக பெரிய பணக்கார குடும்பம். என் அத்தையின் மாமனார் அழகப்பபிள்ளை. அவர் அரசாங்கத்திற்கு இனாமாக கொடுத்த 101 ஏக்கர் இடம் தான் மதுரையில் உள்ள கப்பலூர் Industrial Estate. அன்று இரவும் சாப்பிடாமல் என் அத்தை வீட்டில் தங்கி விட்டு, அவர்களிடம் என் பிரச்சினைகளை சொல்லி ரூ.500 வாங்கி கொண்டு அடுத்த நாள் பிள்ளையார்பட்டி சென்று கற்பக விநாயகரை வணங்கிவிட்டு இனம்புரியா உத்வேகத்துடன் சென்னை திரும்பிய போது நான் சென்ற பேருந்து இராமநத்தம் அருகில் மிக பெரிய விபத்துக்குள்ளானது.

அந்த விபத்து பற்றியும், உங்களுக்கு நான் சொல்ல விரும்பும் அற்புத விஷயங்களையும் அடுத்த கடிதங்களில் விரிவாக கூறுகின்றேன்.
வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

TV Shows , , , , , , , , , , ,

கடிதம் – 16 – வாழ்க்கை – கதையல்ல நிஜம்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!
நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்

அனைவருக்கும் வணக்கம்…

பிறப்போ மனிதர்கள் பிரித்த உயர் வகுப்பில்…

வாழ்வாதாரமோ நடுத்தரத்திற்கு சற்று கீழே…

பழக்க வழக்கங்களோ கீழ்த்தரத்திற்கு சற்று மேலே….

- இது தான் 1995 – 1996 க்கு முன்னே ஆண்டாள் பி.சொக்கலிங்கத்தை பற்றிய முன்னுரை…

* நல்ல வேலை – ஒரு தற்பெருமைக்காக சொன்ன பொய்யால் இல்லாமல் போனது…

* நல்ல உடல் நிலை – கல்வி கற்க போன இடத்தில் கற்க கூடாததை கற்று கொண்டு (புகை, மது) அதுவே பழக்கவழக்கங்களாக மாறி பின் உயிரே இல்லாமல் போக கூடிய சூழ்நிலை ஏற்பட்டது.

* வெட்டி திமிர் பேச்சு, கோபம், வெறுப்பு, பொறாமை, தற்பெருமை, பிடிவாதம், கவலை என்பவை எல்லாம் வாழ்க்கையின் முக்கிய அங்கங்களாக ஆகிப் போனதால் சொந்தங்கள் இருந்தும் இல்லாத நிலை ஏற்பட்டது.

* வீட்டின் வருமான மூலாதாரமாக இருந்த என் வேலை போன நேரம், என் உடல்நிலை சரியில்லாமல் போன நேரம், என் தந்தை உடல்நிலை மேலும் சரியில்லாமல் போன நேரம், கடன் அட்டைகளால் (Credit Card) உருவான கடனை அடைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு கடன் வசூலிப்பவர்களினால் மிகப்பெரிய நெருக்கடிகள் ஏற்பட்ட நேரம், உறவுகள் இருந்தும் யாரும் அருகில் இல்லாமல் போன நேரம்

* ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் இப்படி நூறு விஷயங்கள் ஒரே நேரத்தில் என்னை சந்தித்து சந்தோஷ பட்டுக்கொண்டு இருந்தது….

மேலும் சில விஷயங்கள் என்னை சந்தித்துவிடுமோ என்ற அச்சத்துடன் வாழ்க்கையை எதிர்கொள்ள பயந்து “எதை தின்னால் பித்தம் தெளியும்” என்ற நிலையில் இருந்த என்னிடம், ஒரு நாள் கடவுள் நம்பிக்கை அறவே இல்லாத என் அப்பா

- உனக்கு வேலை போய்விட்டது நீ செய்த தவறுக்காக. உன் உடல்நிலை, என் உடல்நிலை படு மோசமாக இருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக நம்முடன் யாரும் இல்லை என்கின்ற கவலை உனக்கும் உண்டு எனக்கும் உண்டு இருந்தாலும் நீயும், நானும் உயிரோடு இருக்கின்றோம் இது எதற்கோ ஒரு நல்ல விஷயத்திற்காக என்று தைரியமாக இருப்போம். ஏதோ ஒரு நல்ல விஷயம் நமக்காக காத்திருக்கின்றது என்று கூறிவிட்டு எங்கள் வீட்டில் இருந்த திருநீறு மறையில் இருந்து அவர் திருநீறு வைத்துக் கொண்டவாறே எனக்கென்னவோ ஒருமுறை நீ திருச்செந்தூர் சென்று வந்தால் சரியாக இருக்கும் என மனதிற்கு படுகின்றது. போய் வா…. என்று கூறியவாறு வெளியே கிளம்பி சென்று விட்டார்…. என்னை பொறுத்தவரை என் அப்பா என்னிடம் அதுநாள் வரை இது செய், அது செய், இப்படி செய்யாதே, அப்படி செய்யாதே என்று சொல்லியதே இல்லை. அதேபோல் அவர் திருநீறு இட்டு நான் பார்த்ததும் இல்லை. அப்படிப்பட்ட என் அப்பா முதல் முறையாக தனக்கு தானே திருநீறு இட்டு கொண்டு என்னை கோவிலுக்கு போக சொன்னது தான் என் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பு முனை. (என் அப்பா பட்டப்படிப்பு படிக்க வில்லை என்றாலும் நிறைய புத்தகங்கள் படிப்பார். அவர் எப்போதுமே ஒரு வாக்கியத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்ததை இப்போதும் நினைவில் வைத்து இருக்கின்றேன். அந்த வாக்கியத்தை சொன்னது Hot breads Mahadevan. அந்த வாக்கியம்

“ஆபத்தான காலகட்டங்களில் அதிக சவால்கள் நிறைந்த துணிகரமான முடிவுகள் எடுப்பதே நல்லது”)

அவர் கோவிலுக்கு போகச் சொன்னதில் எந்த பெரிய சவாலும் இல்லாததாலும் திருச்செந்தூர் கோவிலை சாக்காக வைத்து திருநெல்வேலி சென்றால் அங்கு வசிக்கும் எனக்கு மிகவும் பிடித்த என் அம்மா பாட்டியிடம் வீட்டு செலவிற்கு பணமோ அல்லது நகையோ கடன் வாங்கி வந்து இரண்டு மூன்று மாதங்கள் சென்னையில் பிரச்சனை இல்லாமல் சமாளித்து வாழ்க்கை ஓட்டலாம் என்பதாலும் ஊர் போக முடிவெடுத்து வீட்டை விட்டு திருச்செந்தூர் கிளம்பினேன்.

வீட்டை விட்டு கிளம்பிய பிறகு திடீர் மன மாற்றம். நம்மிடம் தான் ரூ.650/- பணம் இருக்கின்றதே தண்ணி அடித்து ரொம்ப நாளாகி விட்டதே என்று நினைத்து கொஞ்சம் குடித்துவிட்டு, நன்றாக அசைவம் சாப்பிட்டுவிட்டு செல்வோம் என முடிவெடுத்து அப்படியே செய்து விட்டு மேடவாக்கத்தில் இருந்து தாம்பரம் சென்றேன் ஊருக்கு செல்ல Bus பிடிக்க. குடித்திருந்ததால் சிந்தனை சிதறி திடீரென்று ஒரு இனம்புரியா பயம் – “இருக்கின்ற பணம் கொண்டு திருச்செந்தூர் சென்றுவிட்டு பின் அங்கிருந்து திருநெல்வேலி பாட்டி வீட்டிற்க்கு போகமுடியாத அளவிற்கு பண தட்டுபாடு வந்துவிட்டால் என்ன செய்வது என்று” – பயம் வந்த உடன் தாமதிக்காமல் முடிவெடுத்தேன் நேராக பாட்டி வீட்டிற்க்கு சென்று முதலில் பணம் வாங்கி கொண்டு பின் சாமி கும்பிட்டுவிட்டு வரலாம் என்று. முடிவெடுத்த படி என் பாட்டி வீட்டிற்கு சென்றேன். என் பாட்டி வீட்டில் என் மேல் எப்போதும் எல்லோருக்கும் பயம் கலந்த அன்பு, மரியாதை உண்டு காரணம் நான் அந்த வீட்டில் முதல் படித்த பேரன் மற்றும் என் அப்பா நிறைய உதவிகள் என் பாட்டி குடும்பத்திற்கு செய்து இருக்கிறார்கள் என்பதால். என் பாட்டி வீட்டு வருமானம் அவருக்கு குடும்பம் நடத்துவதற்கு போதுமானதாக இருந்தது. வீட்டு செலவை சமாளிக்க என் பாட்டி வீட்டிலே Mess மாதிரி வைத்து நடத்தி வந்தார்கள். சுவை நன்றாக இருக்கும் என்பதால் எப்போதும் 4 – 5 பேர் சாப்பிட வந்து கொண்டே இருப்பார்கள்… நானும் பாட்டி வீட்டை சென்றடைந்த உடன் குளித்து விட்டு சாப்பிட உட்கார்ந்தேன்… கூடவே வெளி ஆட்கள் 3 பேரும் அமர்ந்து இருந்தார்கள் சாப்பிட…. என் பாட்டி மெதுவாக கேட்டார். என்ன சொக்கு திடீரென்று வந்து இருக்கின்றாய் என்று நான் சொன்னேன்; அப்பா சித்தியின் chain – ஐ அடமானம் வைத்து ரூ.10000/- வாங்கி வர சொன்னார்கள் அல்லது chain – ஐ வாங்கி வர சொன்னார்கள் என்று (எதற்கு சித்தியின் chain என்பதற்கு பெரிய துணைக் கதை உண்டு. இவ்விடம் அதன் விளக்கம் வேண்டாம்) நான் கேட்ட உடனே அந்த chain – க்கு எந்தவித சம்பந்தம் இல்லாத என் அத்தை (அம்மாவின் முதல் சகோதரர் மனைவி) அய்யோ! வேண்டவே வேண்டாம்… நீங்கள் வித்து தின்னுருவீங்கள் அதெல்லாம் கொடுக்க முடியாது என்று சொன்ன உடன் பசியோடு சாப்பிட உட்கார்ந்தவன் சாப்பாடு தட்டை தட்டி விட்டு (இப்போதும் பெருத்த அழுகையோடு இந்த இடத்தில் இதை பதிவிடுகின்றேன்) நான் அப்பொழுது அழுத அழுகை எப்போதுமே என் வாழ்வில் மறக்க முடியாத சம்பவம்.

அந்த அழுகையின் இடையே நான் தெளிவாக என் பாட்டி – அத்தையிடம் சொன்ன விஷயங்கள்:

- சித்திக்கு செலவு செய்து திருமணம் செய்து வைத்து என் அப்பா (சித்தி – என் அம்மாவின் தங்கை சித்தப்பா என் அப்பாவின் தம்பி)

- சித்தப்பாவிற்கு Commercial Tax Department – ல் Govt வேலை வாங்கி தந்தது என் சொந்த பெரியப்பா

- என் சித்தப்பா தற்கொலை செய்து கொண்ட போது எல்லா செலவும் செய்தது என் அப்பா

- சித்திக்கு பெரிய போராட்டத்திற்கு பிறகு Pension – வாங்கி கொடுத்தது என் அப்பா

- அத்தை – ஊரே உங்களை பிடிக்கவில்லை என்றபோது என் அப்பா தான் இந்த பெண் 10 பேரோடு பிறந்தவர். வீட்டிற்க்கு அடக்கமாக இருப்பார் என்று எல்லோரையும் சம்மதிக்க வைத்து என் மாமாவிற்கு திருமணம் முடித்து கொடுத்தவர்

- அத்தை – உன் வீட்டுகாரரை சென்னை எங்கள் வீட்டில் தங்க வைத்து நாங்கள் தான் படிக்க வைத்தோம்.

- அத்தை – உன் வீட்டுகாரருக்கு வேலை கிடைத்தது என் அப்பாவின் முயற்சியால் தான்.

- அப்படியே நான் அந்த Chain – ஐ நான் விற்று தின்னால் உங்களுக்கென்ன? என்று கூறி விட்டு இனிமேல் உங்கள் வீட்டிற்க்கு நான் வர மாட்டேன்; என் அப்பாவையும் அம்மாவையும் வர விட மாட்டேன் என்று கூறிவிட்டு பசியோடு, அழுது கொண்டே திருசெந்தூர் செல்ல bus ஏறினேன்…

என் அத்தை சொன்ன வார்த்தையான Chain – ஐ விற்று தின்னு விடுவீர்கள் என்பதை நினைக்க நினைக்க அழுகை வந்து கொண்டே இருந்தது… Bus – ல் சுற்றிலும் இருப்பவர்கள் பற்றி கவலைப்படாமல் அழுதுகொண்டே வந்தேன். Bus – ஐ விட்டு இறங்கும் முன்பு முடிவெடுத்தேன் இதைவிட Life – ல் அவமானம், அசிங்கம், கஷ்டம் வராது என்பதாலும் நான் மறுபடியும் வாழ்க்கையில் வெற்றி பெறுவது சாத்தியமே இல்லை என்பதாலும் தற்கொலை செய்து கொள்வதென்று….

அடுத்த கடிதத்தில் மேலும் விவரத்துடன் சந்திக்கின்றேன்… உங்களுக்கு தேவையான விபரங்களுடன்…
வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

TV Shows , , , , , , , , , , , , ,

Vastu Article @ Times of India

Times of India

 

Click here to read fully

TV Shows , , , , , , , , , , ,

இறுதி பட்டியல் – ஸ்ரீப்ரஹதீஷ்வர லிங்கத்திற்கு அன்னாபிஷேகம்

இறுதி பட்டியல்:

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!
நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்

அனைவருக்கும் வணக்கம்…

ஐப்பசி 20ம் தேதி வியாழக்கிழமை, 06 நவம்பர் 2014-ல் கங்கைகொண்ட சோழபுரத்துக் கோயிலிலுள்ள ஸ்ரீப்ரஹதீஷ்வர லிங்கத்திற்கு நடைபெறும் அன்னாபிஷேகத்திற்கு இன்று(04-11-2014) காலை மொத்தம் 1750 கிலோ அரிசி கும்பகோணம் ஸ்ரீசங்கரமடத்தில் மண்ணச்சநல்லூர் திரு.ஆண்டாள் K.திருகோவிந்தன் அவர்கள் மூலமாக ஒப்படைக்கப்பட்டது.

அரிசி வழங்கியவர்கள்:

 1. கல்யாணி கண்ணன், டெல்லி               – Rs.44 x 250kg – ரூ.11,000.00
 2. நாகராஜன், மதுரை                        – Rs.44 x 150kg – ரூ. 6,600.00
 3. ராஜேஸ்வரி, சென்னை                     – Rs.44 x 100kg – ரூ. 4,400.00
 4. லட்சுமி கிருஷ்ணமுர்த்தி, சென்னை         – Rs.44 x  25kg – ரூ. 1,100.00
 5. தமிழ்செல்வி, தஞ்சாவூர்                   – Rs.44 x  50kg – ரூ. 2,200.00
 6. தினேஷ் தங்கராஜ், தஞ்சாவூர்               – Rs.44 x  25kg – ரூ. 1,100.00
 7. சூரியகலா, சென்னை                       – Rs.44 x  75kg – ரூ. 3,300.00
 8. அந்தோணி ராஜ், திருநெல்வேலி            – Rs.44 x  45kg – ரூ. 1,980.00
 9. டிஸ்கோ ரமேஷ், மண்ணச்சநல்லூர்         – Rs.44 x  25kg – ரூ. 1,100.00
 10. அர்ஜுனன் ராஜாராம், மண்ணச்சநல்லூர்      – Rs.44 x  50kg – ரூ. 2,200.00
 11. உஷா ரமேஷ், மண்ணச்சநல்லூர்            – Rs.44 x  50kg – ரூ. 2,200.00
 12. கிருஷ்ணவேணி, ஸ்ரீகிருஷ்ணா கே.கே.டிரேடர்ஸ், மண்ணச்சநல்லூர்                                                                  - Rs.44 x 125kg – ரூ. 5,500.00
 13. ரவி, கரத்தாம்பட்டி                        – Rs.44 x  25kg – ரூ. 1,100.00
 14. நாகேந்திரன், திருப்பூர்                      – Rs.44 x  50kg – ரூ. 2,200.00
 15. தெய்வலக்ஷ்மி, திருச்சி                     – Rs.44 x  25kg – ரூ. 1,100.00
 16. இளமுருகன், நாமக்கல்                     – Rs.44 x  75kg – ரூ. 3,300.00
 17. சந்தான லட்சுமி, சென்னை                 – Rs.44 x  25kg – ரூ. 1,100.00
 18. அகில் சண்முக ஸ்ரீராம், மாணிக்க கற்பகவள்ளி, சென்னை                                                                                                    - Rs.44 x  75kg – ரூ. 3,300.00
 19. சங்கமித்ரா தினேஷ், பவித்ரா செல்வராஜ், சென்னை                                                                                                                - Rs.44 x  75kg – ரூ. 3,300.00
 20. சரஸ்வதி கிரீஷ், சென்னை                 – Rs.44 x  75kg – ரூ. 3,300.00
 21. ஷோபா ஜெயராமன், சென்னை             – Rs.44 x  75kg – ரூ. 3,300.00
 22. கீர்த்திவர்மன் சௌந்தர், சென்னை           – Rs.44 x  50kg – ரூ. 2,200.00
 23. உஷா, சென்னை                          – Rs.44 x  25kg – ரூ. 1,100.00
 24. ஷோபா, திருவாரூர்                       – Rs.44 x  25kg – ரூ. 1,100.00
 25. பாஸ்கர், பெரம்பலூர்                       – Rs.44 x  25kg – ரூ. 1,100.00
 26. விருதகிரி, பெரம்பலூர்                     – Rs.44 x  25kg – ரூ. 1,100.00
 27. முருகேசன், பெரம்பலூர்                    – Rs.44 x  25kg – ரூ. 1,100.00
 28. செல்லையா, பெரம்பலூர்                   – Rs.44 x 11.5kg – ரூ.  506.00
 29. ராமசந்திரன், பெரம்பலூர்                   – Rs.44 x 13.5kg – ரூ.  594.00
 30. கவியரசு, பெரம்பலூர்                      – Rs.44 x  25kg – ரூ. 1,100.00
 31. சண்முகம், பெரம்பலூர்                     – Rs.44 x  25kg – ரூ. 1,100.00
 32. லீலா தெய்வீகராஜ், திண்டுக்கல்             – Rs.44 x  25kg – ரூ. 1,100.00

                                                            Total                = 1750 Kg

இந்த தெய்வீக கைங்கரியத்திற்கு மொத்தம் 1750 கிலோ அரிசி வழங்கிய அனைத்து நல் இதயங்களுக்கும் நன்றி.

இன்னும் ஓரிரு நாளில் கடிதம் 16 – ல் ஆச்சரியமான, அற்புதமான செய்திகளோடு சந்திக்கிறேன்…

 

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

 

TV Shows , , , , , , ,

தெய்வீக கைங்கரியத்திற்கு மொத்தம் 1463 கிலோ அரிசி வழங்கிய அனைத்து நல் இதயங்களுக்கும் நன்றி…

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!
நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்

அனைவருக்கும் வணக்கம்…

ஐப்பசி 20ம் தேதி வியாழக்கிழமை, 06 நவம்பர் 2014-ல் கங்கைகொண்ட சோழபுரத்துக் கோயிலிலுள்ள ஸ்ரீப்ரஹதீஷ்வர லிங்கத்திற்கு நடைபெறும் அன்னாபிஷேகத்திற்கு நம் சகோதரர் திரு.ஆண்டாள் K. திருகோவிந்தன், மண்ணச்சநல்லூர் (Ph: 94430 17131) அவர்கள் மூலம் அரிசி அனுப்பியவர்கள்:-

1. கல்யாணி கண்ணன், டெல்லி – Rs.44 x 250kg – ரூ.11,000.00

2. நாகராஜன், மதுரை – Rs.44 x 150kg – ரூ. 6,600.00

3. ராஜேஸ்வரி (Connexions), சென்னை – Rs.44 x 100kg – ரூ. 4,400.00

4. லட்சுமி கிருஷ்ணமுர்த்தி, சென்னை – Rs.44 x 25kg – ரூ. 1,100.00

5. தமிழ்செல்வி, தஞ்சாவூர் – Rs.44 x 50kg – ரூ. 2,200.00

6. தினேஷ் தங்கராஜ், தஞ்சாவூர் – Rs.44 x 25kg – ரூ. 1,100.00

7. சூரியகலா, சென்னை – Rs.44 x 68kg – ரூ. 2,992.00

8. அந்தோணி ராஜ், திருநெல்வேலி – Rs.44 x 45kg – ரூ. 1,980.00

9. டிஸ்கோ ரமேஷ், மண்ணச்சநல்லூர் – Rs.44 x 25kg – ரூ. 1,100.00

10. அர்ஜுனன் ராஜாராம், மண்ணச்சநல்லூர் – Rs.44 x 50kg – ரூ. 2,200.00

11. உஷா ரமேஷ், மண்ணச்சநல்லூர் – Rs.44 x 50kg – ரூ. 2,200.00

12. கிருஷ்ணவேணி, ஸ்ரீகிருஷ்ணா கே.கே.டிரேடர்ஸ், மண்ணச்சநல்லூர்
- Rs.44 x 125kg – ரூ. 5,500.00

13. ரவி, கரத்தாம்பட்டி – Rs.44 x 25kg – ரூ. 1,100.00

14. நாகேந்திரன், திருப்பூர் – Rs.44 x 50kg – ரூ. 2,200.00

15. தெய்வலக்ஷ்மி, திருச்சி – Rs.44 x 25kg – ரூ. 1,100.00

16. இளமுருகன், நாமக்கல் – Rs.44 x 75kg – ரூ. 3,300.00

17. சந்தான லட்சுமி, சென்னை – Rs.44 x 25kg – ரூ. 1,100.00

18. அகில் சண்முக ஸ்ரீராம், மாணிக்க கற்பகவள்ளி, சென்னை
- Rs.44 x 75kg – ரூ. 3,300.00

19. சங்கமித்ரா தினேஷ், பவித்ரா செல்வராஜ், சென்னை
- Rs.44 x 75kg – ரூ. 3,300.00

20. …………….., சென்னை – Rs.44 x 150kg – ரூ. 6,600.00

இந்த தெய்வீக கைங்கரியத்திற்கு மொத்தம் 1463 கிலோ அரிசி வழங்கிய அனைத்து நல் இதயங்களுக்கும் நன்றி.
வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

TV Shows , , , , , , , , , ,