November 10 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கோவில்குளம்

  1. அருள்மிகு தென்னழகர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     தென்னழகர் (விண்ணகர்பெருமான்)

உற்சவர்        :     சவுந்தர்ராஜப்பெருமாள்

தாயார்          :     சவுந்திரவல்லி, சுந்தரவல்லி

தீர்த்தம்         :     மார்க்கண்டேயர் தீர்த்தம்

புராண பெயர்    :     திருப்பொதியில் விண்ணகரம்

ஊர்             :     கோவில்குளம்

மாவட்டம்       :     திருநெல்வேலி

 

ஸ்தல வரலாறு :

பெருமாள் மீது பக்தி கொண்டிருந்த மார்க்கண்டேய மகரிஷி, பூலோகத்தில் பல தலங்களில் பெருமாளை தரிசித்தார். அவர் பொதிகை மலைக்குச் சென்றபோது இவ்விடத்தில், சுவாமியை தரிசிக்க விரும்பி, பெருமாளை வேண்டினார். சுவாமி, அவருக்கு தாயார்களுடன் காட்சி தந்தார். பிற்காலத்தில் இப்பகுதியில் பெருமாள் பக்தர் ஒருவர் வசித்து வந்தார். மனதில் பெருமாளை எண்ணி வணங்கி வந்த அவருக்கு, சுவாமியை சிலாரூபமாக தரிசிக்க வேண்டுமென்று ஆசை உண்டானது. ஒருசமயம் அவரது கனவில் தோன்றிய பெருமாள், மதுரை அருகிலுள்ள கள்ளழகர் கோயில் மலையில் தான் சிலாரூபமாக இருப்பதாகவும், அச்சிலையை இத்தலத்தில் பிரதிஷ்டை செய்து வழிபடும்படியும் கூறினார். அதன்படி பக்தர் சிலையை கொண்டு வந்து இங்கு பிரதிஷ்டை செய்தார். பின்பு, மன்னர் ஒருவரால் இங்கு கோயில் எழுப்பப்பட்டது.

 

கோயில் சிறப்புகள்:

  • மதுரை கள்ளழகர் கோயிலில் இருந்து கொண்டு வரப்பட்ட மூர்த்தி என்பதால் இத்தல பெருமாள், “தென்னழகர்’ என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு, “ஸ்ரீபதிவிண்ணகர் பெருமான்’ என்றும் பெயருண்டு.

 

  • ஒரு காலத்தில் இந்த கோயிலைச் சுற்றி குளம் இருந்ததால் கோயில்குளம் என்று இவ்வூர் அழைக்கபெற்றது.

 

  • மூலஸ்தானத்தில் பெருமாள் காரை என்னும் கலவையால் செய்யப்பட்ட மூர்த்தியாக நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.

 

  • முதலில் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்ட விக்ரகம், காலப்போக்கில் சிதிலமடையவே இச்சிலையை பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். எனவே இவருக்கு திருமஞ்சனம் செய்வதில்லை.

 

  • சவுந்தரவல்லி, சுந்தரவல்லி தாயாருடன் காட்சி தரும் பெருமாளுக்கு அருகில் மார்க்கண்டேய மகரிஷி, வணங்கியபடி இருக்கிறார்.

 

  • கோயில் சுவற்றில் வடகிழக்கு மூலையில் மூலகருடாழ்வார் இருக்கிறார். ஆடி சுவாதியன்று ஒருநாள் மட்டும் இவருக்கு விசேஷ திருமஞ்சனம் செய்து, பூக்களால் ஆன சட்டை அணிவிக்கிறார்கள்.

 

  • ஆடிப்பூரத்தை ஒட்டி 10 நாட்கள் மட்டும் சுவாமிக்கு விசேஷ பூஜை செய்யப்படுகிறது.

 

  • முன்மண்டபத்தில் நாகர், விஷ்வக்ஷேனர், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், உடையவர் ஆகியோர் இருக்கின்றனர்.

 

திருவிழா: 

ஆடிப்பூரம், புரட்டாசி கடைசி சனிக்கிழமை, வைகுண்ட ஏகாதசி.

 

திறக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் 9 மணி வரை,

மாலை 5 மணி முதல் இரவு8 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு தென்னழகர் திருக்கோயில்,

கோவில்குளம்,

அம்பாசமுத்திரம்

திருநெல்வேலி மாவட்டம்.

 

போன்:    

+91- 4634 – 251 705.

 

அமைவிடம்:

திருநெல்வேலியில் இருந்து 40 கி.மீ., தூரத்தில் அம்பாசமுத்திரம் உள்ளது. இங்கிருந்து 2 கி.மீ., தூரத்திலுள்ள கோவில்குளம் என்ற கிராமத்தில் இக்கோயில் உள்ளது. குறித்த நேரத்தில் மட்டும் இவ்வூருக்கு பஸ்கள் செல்கிறது.

Share this:

Write a Reply or Comment

6 − three =