சுகந்தவனேஸ்வரர்

அருள்மிகு சுகந்தவனேஸ்வரர்….!

தமிழகத்தில் இருக்கும் கோவில்களில் பல அதிசய நிகழ்வுகள் இன்றும் நிகழ்ந்து கொண்டுதான்
இருக்கின்றன. ஆனால் அது
நம்மில் பலருக்கும் தெரிவதில்லை.

அவ்வாறு சிவகங்கை மாவட்டம் கண்டிரமாணிக்கம் அருகில் பெரிச்சிகோவில் என்ற இடத்தில்
உள்ள 1400 ஆண்டு பழமை
வாய்ந்த அருள்மிகு
சுகந்தவனேஸ்வரர் கோவிலில் நடைபெறும் அற்புதங்கள் அனைவரையும் வியக்க வைக்க கூடியதாக இருக்கிறது.

இக்கோவிலின் மூலவர் சுகந்தவனேஸ்வரர் இறைவி
சமீபவல்லி ஆவார்.
இங்குள்ள பைரவர் எட்டு
கைகளிலும் ஆயுதம் ஏந்தி
கபால மாலை அணிந்திருக்கிறார்.

இரட்டை முக பைரவர் :

இந்த இரட்டை முக பைரவர் மேற்கு நோக்கியவாறு வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார்.
போகர் என்ற சித்தர்
நவபாஷாணத்தில் உள்ள விஷத்தன்மையை நீக்கி பழனி
முருகன் சிலையை உருவாக்கினார்.

அதே போகர் தான் இந்த இரட்டை முக பைரவரையும் விஷத்தன்மையை நீக்காமல் நவபாஷாணத்தால் வடித்துள்ளார். பழனி முருகனின் சிலையை வடிப்பதற்கு முன்பே உருவாக்கப்பட்டது இந்த பைரவர் சிலை என்று கூறுப்படுகிறது.

இரு விதமாக காட்சியளித்தால்….

காசி கால பைரவருக்கு நிகரான இந்த பைரவரின் முன்புறம் தீபாராதனை காட்டும்போது பைரவர் போலவும் பின்புறம் தீபாராதனை காட்டும்போது பழனி முருகன் போலவும் காட்சியளிப்பதாக கூறுகிறார்கள்.

கலியுக அதிசயம் :

காசி பைரவரின் சிலை அதிக சக்தியுடைய நவபாஷாணத்தால்
ஆனது என்பதால் இதன் விஷத்தன்மையை தாங்கும் வலிமை மனிதர்களுக்கு இருக்காது என்பதன் அடிப்படையில் பைரவருக்கு அணிவிக்கப்படும் வடைமாலை
மற்றும் தீர்த்தம் ஆகியவற்றை பிரசாதமாகக் கொடுப்பதில்லை.

வடை மாலையை சன்னதிக்கு மேலே போட்டு விடுகிறார்கள். அதிசயமாக இதை பறவைகளும் சாப்பிடுவதில்லை. அபிஷேக தீர்த்தம் பக்தர்கள் தொட முடியாதபடி கோயிலுக்கு வெளியே விழுமாறு அமைக்கப்பட்டிருக்கிறது.

Share this:

Write a Reply or Comment

13 + four =