August 03 2018 0Comment

நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோவில்:

நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோவில்:

 
தென் தமிழகத்தின் பஞ்சபூதத் தலங்களாக ஐந்து திருத்தலங்களைக் குறிப்பிடுவர். அவற்றில் ஆகாயத் தலமாக அருள்மிகு நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தேவதானம் என்னும் அழகிய சிற்றூரில் அமைந்துள்ளது.
மூலவர் : நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி.
அம்மன் : தவமிருந்த நாயகி.
தல விருட்சம் : நாகலிங்க மரம்.
தீர்த்தம் : சிவகங்கை தீர்த்தம்.
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்.
மாவட்டம் : விருதுநகர்.
தல வரலாறு :
சிவபக்தனான வீரபாகு பாண்டிய மன்னனுக்கும் விக்கிரமசோழனுக்கும் நீண்ட காலமாக பகை இருந்தது. விக்கிரமசோழன் பாண்டிய மன்னன் 
மீது பலமுறை போர் தொடுத்தும் அவனை வெல்ல முடியவில்லை. 
எனவே வஞ்சகத்தால் அவனைக் கொல்ல முடிவெடுத்தான்.
அவனுடன் நட்பு கொள்வதாகக் கூறி நச்சு கலந்த ஆடையை பரிசாக கொடுத்து அனுப்பினான். அந்த ஆடையை அணிந்தவர் எரிந்து சாம்பலாகி விடுவர். இறைவன் அருளால் சோழனின் சதித்திட்டத்தை பாண்டிய மன்னன் அறிந்தான்.
தனக்கு பரிசாக கொடுத்தனுப்பிய நச்சு ஆடையை அதைக் கொண்டு வந்த சேவகனுக்கே போர்த்தி விட்டான். சேவகன் எரிந்து சாம்பலானான். 
நச்சு ஆடையை அணியவிடாமல் பாண்டியனைக் காப்பாற்றிய சிவனுக்கு பாண்டியன் கோவில் எழுப்பினான்.
நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி என்று பெயர் சூட்டினான். இதன் பிறகு சோழன் பார்வை இழந்தான். தன் தவறை உணர்ந்துஇ தனக்கு மீண்டும் பார்வை கிடைக்கஇ தேவதானம் வந்து பாண்டியனிடம் மன்னிப்பு கேட்டு சிவனை வழிபட்டான்.
அதன் காரணமாக விக்கிரம சோழனுக்கு தேவதானம் தலத்தில் ஒரு கண்ணுக்கு மட்டும் பார்வையை சிவன் அருளினார். மற்றொரு கண்ணுக்கும் பார்வை வேண்டும் என்று அவன் உருக்கத்துடன் வேண்டினான்.
அப்போது அசரீரி ஒலித்தது. இன்னும் ஒரு கோவிலை இவ்வூர் அருகில் எழுப்பினால் பார்வை கிடைக்கும் என்றது. அதன்படி சேத்தூர் என்ற இடத்தில் கோவில் கட்டினான். பார்வையும் கிடைத்தது.
தல சிறப்பு :
கண் கெடுத்தவர் கண்கொடுத்தவர் கொழுந்தீஸ்வரர் என மூன்று சிவன் சன்னதிகள் இங்குள்ள குன்றின் மேல் உள்ளன. இந்த சன்னதிகளை வழிபட்டால் கண் பார்வை குறை தீர்ந்து பார்வை முழுமையாக கிடைப்பதாக நம்பிக்கையுள்ளது.
சிலருக்கு புண் ஏற்பட்டு ஆறாத தழும்புகள் இருந்தால் கொழுந்தீஸ்வரரை 11 வாரங்கள் தொடர்ந்து பூஜித்தால் குணமாகும் என்கிறார்கள்.
இந்தக் கோவிலைச் சுற்றியுள்ள பஞ்சபூத ஸ்தலங்களான சங்கரன்கோவில் (நிலம்), தாருகாபுரம் (நீர்), கரிவலம்வந்தநல்லூர் (நெருப்பு), தென்மலை (காற்று), தேவதானம் (ஆகாயம்) இவற்றை ஒரே நாளில் தரிசிக்க முடியும். மாத சிவராத்திரிகளில் இந்த கோவில்களை வழிபடுவது மிகவும் சிறப்பு.
Share this:

Write a Reply or Comment

18 − seven =