June 10 2018 0Comment

மனித உளவியல் 3

 

 

 

மனித உளவியல் 3

sigmund chocku

குறை ஒன்றும் இல்லை கண்ணா ……..

எனக்கு இந்த பாடலின் முதல் வார்த்தையில் உடன்பாடு இல்லாவிட்டாலும்  

மறைந்த இசை மேதை பாரத ரத்னா எம். எஸ். சுப்புலட்சுமி அவர்கள் லயித்து பாடும் விதத்தில் இருந்து ஒரு விஷயத்தை அறுதியிட்டு,உறுதியிட்டு நிச்சயமாக உளமார  கூற முடியும்.

அது 

திருவேங்கடவனை  யார் நேரில் கண்டாலும் இப்படி தான் பாடுவார்கள்.

எனக்கு சங்கீதம் அறவே தெரியாது என்றாலும் 

பெருமாள் தான் இவரின்  ஒரே உறவு  என்பதை நான் நம்புகின்றேன்.

இவருடைய முக பாவனைக்கு வேறு அர்த்தம் யார் கொடுத்தாலும் அது சரியான கேள்விக்கு தவறான விடையாகத் தான் இருக்கும்

என்னுடைய கண்ணீர் துடைக்கும் அரு மருந்து இவரின் முகத்திற்கு உண்டு.

ஏனோ எப்போது காஞ்சி காமாட்சியை பார்த்தாலும் இந்த இருவரின் நினைப்பு தான் முதலில் வந்து செல்லும்.

என்னை பொறுத்த வரை காஞ்சி காமாட்சிக்கு ஆண் குழந்தை மஹா பெரியவா என்றால் பெண் குழந்தை MS சுப்புலக்ஷ்மி தான்

நிச்சயமாக சொல்கின்றேன் உளவியல் ரீதியாக உங்கள் வருத்தம் துடைக்கும் வல்லமை  இவரின் முகத்திற்கு  உண்டு.

குறை ஒன்றும் இல்லை பற்றி உபரி தகவல்கள்:

குறை ஒன்றும் இல்லை என்பது திருவேங்கடக் கடவுள் மீது பாடப்பட்ட ஒரு தமிழ்ப்பாடல். இப்பாடலை எழுதியவர் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி ஆவார். தமிழகத்தில் மிகவும் பிரபலமாக உள்ள இப்பாடல், ராக மாலிகையின் அடிப்படையில் அமைந்த இப்பாடல் பெரும்பாலான கருநாடக இசைக் கச்சேரிகளில் ‘துக்கடா’வாகப் பாடப்படுகிறது.

சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியால் எழுதப்பட்ட ஒரே ஒரு பாடல் இதுவாகும். தமிழறிஞர் மீ.ப. சோமசுந்தரம் ( மீ.ப.சோமு) அவர்களின் உதவியுடன் இயற்றப்பட்ட இந்தப் பாடல் 1967-இல் ‘கல்கி’ பத்திரிகையில் வெளிவந்தது. இந்தப் பாடலுக்கு இசை வடிவம் தந்தவர் கடையநல்லூர் வெங்கட்ராமன் ஆவார். மறைந்த இசை மேதை பாரத ரத்னா எம். எஸ். சுப்புலட்சுமியால் 1979/80 -இல் முதலில் பாடப்பட்ட இப்பாடல், பிறகு இசையுலகில் மிகப் பிரபலமானது.

பாடல் வரிகள்

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

குறை ஒன்றும் இல்லை கண்ணா

குறை ஒன்றும் இல்லை கோவிந்தா

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

குறை ஒன்றும் இல்லை கண்ணா

குறை ஒன்றும் இல்லை கோவிந்தா

கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா

கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்குக்

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் என்றிருக்க

வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா

மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா

கண்ணா திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா – உன்னை

மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்

என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா

குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா

குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி

நிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா

கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி

நிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

யாதும் மறுக்காத மலையப்பா

யாதும் மறுக்காத மலையப்பா உன் மார்பில்

ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை

என்றும் இருந்திட ஏது குறை எனக்கு

என்றும் இருந்திட ஏது குறை எனக்கு

ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா

ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா

மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

https://www.youtube.com/watch?v=NXufcyf5f7g

என்ன ஒரு twist னா

இந்த பாடலை யாரெல்லாம் Hello Tune அல்லது caller Tune ஆக  வைத்துள்ளர்களோ அவர்கள் ஒரு பெருத்த சோகத்துடன் தான் இந்த பூமியில் 

இருந்து இருக்கின்றார்கள்;

இருந்து இருப்பார்கள்;

இருந்து கொண்டே இருப்பார்கள்.,

என்றும் உங்கள் நினைவுடன் & நிறையுடன்

தமிழக உளவியலின் கைகுழந்தை

ஆண்டாள் P சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

two × three =