ஸ்ரீ முக்தி குப்தேஸ்வரர்:

 

 

ஸ்ரீ முக்தி குப்தேஸ்வரர்:

ஆஸ்திரேலியாவில் ஓர் அதிசய சிவன் கோவில் – குகையினுள் அதிசய பெட்டகம்!

சுற்றிலும் மலை அரணாக விளங்க பச்சைபசேலென அமைதியான சூழலில் அமைந்துள்ள ஸ்ரீ முக்தி குப்தேஸ்வரரை, தரையிலிருந்து சுமார் பதினைந்து அடி இறங்கிச் சென்றால் தரிசனம் செய்யலாம்.

ஸ்ரீ முக்தி குப்தேஸ்வரர் சின் கோவில் ஆஸ்திரேலியாவில் ரம்மியமாக அமைந்துள்ளது.

இந்த சிவன் கோவில் சிட்னி நகரிலிருந்து தென்மேற்கே சுமார் 60 கி.மீ தொலைவில் மின்டோ என்னும் இடத்தில் உள்ளது. பூமிக்கு அடியில் 1450 சதுர அடி பரப்பில் குகை வடிவில் அமைக்கப்பட்ட கோவில் இது.

1997ல் இக்கோவில் கட்டும் பணி ஆரம்பித்து 1999ல் மஹாசிவராத்திரி அன்று ஸ்ரீ முக்தி குப்தேஸ்வரர்

பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெறத் தொடங்கின.

கருவறைக்கு இருபுறமும் மாதா மந்திர், ராம் பரிவார் மந்திர் மற்றும் பக்கச் சுவர்களில் கணேஷ் மந்திர்,

ஆஞ்சநேய மந்திர் உள்ளனர். இவை பளிங்கு கல்லினால் ஆனவை.

உலகிலேயே முதன்முதலாக மனிதர்களால் உருவாக்கப்பட்ட 4.5 மீட்டர் உயரமுள்ள பளிங்குக்கல்லினால்

ஆன சிவபெருமானின் சிலை இக்குகை கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

‘முக்தி குப்தேஸ்வரர் கோவில்” என பெயரிடப்பட்டுள்ள இந்தக் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிவபெருமானின் சிலை உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது.

இந்த சிலையின் பின்புறத்தில் நிமிடத்திற்கு ஒரு நிறம் என்ற வகையில் மிளிரும் வண்ண
விளக்குகள் காண்போரை பக்தி பரவசத்துக்குள்ளாக்குகிறது.

இந்த குகை கோவிலினுள் 1,128 சிற்றாலயங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

உலகெங்கும் உள்ள இரண்டு மில்லியன் சிவபக்தர்கள் சேர்ந்து எழுதிய ஓம் நமசிவாய என்ற
மந்திரம் அடங்கிய ஒரு பெட்டி 10 மீட்டர் ஆழத்தில் வைத்து அதன் மீது இம்மூலவர் சன்னிதியை அமைத்திருப்பதாகக் கூறுகிறார்கள்.

உலகின் பல புண்ணிய நதிகளின் நீர், ஐம்பெரும் கடல் நீர், எட்டுவித உலோகங்களும் இதனுடன் அடங்கி உள்ளனவாம்.

#கடல்_நீர் #ஸ்ரீ_முக்தி_குப்தேஸ்வரர் #சிவன்

 

Share this:

Write a Reply or Comment

eighteen + 14 =