ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு

வெகு விரைவில் எனக்கு தெரிந்த வாஸ்துவை மேலும் விஸ்தரிக்கும் வகையில், நான் தேர்ந்தெடுக்கும் சிலருக்கு வாஸ்துவை நன்கு சொல்லி கொடுக்க ஆசைப்படுகின்றேன். சொல்லி கொடுப்பது என்றால் கரும்பலகையில் கதை எழுதி அதை பார்த்து நீங்களும் எழுதிக் கொள்ளவும் என்கின்ற ரீதியில் அல்ல... கிட்டத்தட்ட கருமையத்தில் கருத்தை பதியமிடும் வேலையாக நான் செய்ய போகும் வேலை இருக்கும் என திடமாக உறுதியளிக்கின்றேன்...

கருத்து பரிமாற்றத்திற்காக என ஒரு நாள்

நான் கொடுத்த வரைபடங்கள் போல் கட்டிய வீடுகளையும்

நான் கொடுத்த வரைபடங்கள் போல் கட்டாத வீடுகளையும்

கூடவே வாஸ்து படி வீடு அமைத்தும் கஷ்டப்படுகின்றேன்(?!!!) என்று சொல்பவர்களின் வீடுகளையும்

பிரயாணப்படும் போது ஒரு சில கோவில்களின் அமைப்பையும்

குழந்தை பேறு தள்ளிப் போனவர்கள் திருவெண்காடு சென்று வந்தபின் எப்படி குழந்தை பேறு கிடைக்க பெறுகின்றார்கள் என்பதையும்

மேல்மருவத்தூர் சென்று வந்தால் குடிகாரர்கள் குடியை எப்படி நிறுத்துகிறார்கள் என்பதையும்

கள்ளழகரும் / ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளும் / திருவொற்றியூர் வடிவுடையம்மனும் / புன்னைநல்லூர் மாரியம்மனும் என்னவற்றிற்காக சிறப்பு பெறுகிறார்கள் என்பதையும்

கூடவே சில தேவாலயங்களின் அமைப்பையும்

சில தர்க்காகளின் அமைப்பையும்

பார்த்தபின்,

பயிற்சியில் பங்கு பெறுபவர்களுக்கு உண்மையான பரீட்சையையும் (Practical – 100 Marks & Theory – 100 Marks) வைத்து கடைசியில் வாஸ்துவிற்காக புதிய வாடிக்கையாளர்களை சந்திக்க போகும் போது என்னுடன் சேர்த்து பயிற்சி பெறுபவர்களையும் அந்த புதிய இடத்தை பார்க்க வைக்க உள்ளேன்.

நடுவில் சிறப்பு அழைப்பார்களாக சிலர் பேசுவதையும் கேட்க வைக்க போகின்றேன்.

பயிற்சியில் பங்கு பெறும் அனைத்து நாட்களும் அனைவரும் ஒரே இடத்தில் உண்டு, தங்கும் வகையில் பயிற்சி ஏற்பாடு செய்யப்பட உள்ளது. ஒரு அறையில் இருவர் தங்கும் வகையில் அறை வசதி செய்யப்படும்.

பயிற்சி நாட்கள்:- 9 நாட்கள்

பயிற்சி ஆரம்பிக்கும் இடம் சென்னை

பயிற்சி நிறைவு பெறும் இடம் சென்னை.

இந்த பயிற்சியில் வாஸ்து, மனம், பணம் ஆகிய மூன்று முக்கிய விஷயங்களை பற்றி எனக்கு தெரிந்ததை சொல்லித் தர ஆசைப்படுகின்றேன்.

ஒரு நாள் பயிற்சி முழுக்க / முழுக்க மனம் கொண்டு பணத்தை கவர்ந்திழுப்பது பற்றியும், பணத்தை ஈர்த்து கொண்டிருக்கும் பணக்காரர்களின் ரகசியங்கள் பற்றியும் இருக்கும்.

இந்த பயிற்சி நடைபெறும் போது பயிற்சி பெறுவோர் தங்கும் இடங்கள் :

 • Hotel Raintree or Hotel Hilton, Chennai
 • Hotel Crowne Plaza, Chennai
 • Hotel Heritage or ITC Pandian, Madurai
 • Hotel Turyaa or Hotel Intercontinental, Chennai
 • Hotel Welcome – ITC Chola, Chennai

நான் ஏன் கற்று கொடுக்கின்றேன்:

 • நல்ல வாஸ்து நிபுணர்களை உருவாக்க தருணம் வந்து விட்டதாக கருதுகின்றேன்.
 • மேலும், ஒரு உன்னத நோக்கத்திற்காக எனக்கு பணம் தேவைப்படுகின்றது. அந்த நோக்கதிற்கான பணத்தை திரட்டுவதற்காகவும்
 • ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு சிலரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஒரு நிரந்தர தொழில் வாய்ப்பை உண்டு பண்ணுவதன் மூலம் என்னை என்னுடைய மற்ற தொழில்களில் நன்கு கவனத்தை செலுத்திட வைப்பதற்காகவும்
 • என்னுடைய பழைய வாடிக்கையாளர்களின் தேவையை சரியாக நான் பூர்த்தி செய்வதற்கு ஏதுவாகவும் இந்த பயிற்சியை நடத்த திட்டமிட்டு உள்ளேன்.

இந்த பயிற்சி யாருக்கு தேவை:-

 • வாஸ்து அறிவு பெற்று வாஸ்துவை தொழிலாக செய்ய நினைப்பவர்களுக்கும், சேவையாக செய்ய நினைப்பவர்களும், பகுதி நேர தொழிலாக செய்ய இருப்பவர்களுக்கும் இந்த பயிற்சி பெரிய அளவில் பயன்பெறும்.
 • எனக்கு துணைவர் இல்லை, வேலை இல்லை, உறவுகளின் ஆதரவு இல்லை, பண கஷ்டத்தில் இருக்கின்றேன் என்று வாழ்பவர்களுக்கும், தைரிய மனம் படைத்தவர்களுக்கும் அவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த பயிற்சி இருக்கும்.

பிரயாணப்பட இருக்கும் ஊர்கள்:- (மாறுதலுக்குட்பட்டது)

 • சென்னை
 • காஞ்சிபுரம்
 • திருச்சி
 • மதுரை
 • ஸ்ரீவில்லிப்புத்தூர்
 • திருநெல்வேலி

இந்நிகழ்ச்சி பற்றி நான் சற்று உட்புகுந்து பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

 • Vastu Practitioner Training – பயிற்சி வகுப்பிற்கு 2௦ பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
 • எனக்கு Numerology, ஜோதிடம், Pronology, கைரேகை எல்லாம் தெரியும். வாஸ்துவும் தெரிஞ்சிகிட்டா நானே எல்லா விஷயத்தையும் என்னை நாடி வரும் மக்களுக்கு கொடுக்க முடியும் என்கின்ற கண்ணோட்டத்தில் இந்த வகுப்பிற்கு கற்று கொள்ள வருகிறீர்கள் என்றால் அப்படிப்பட்ட அன்பு உள்ளங்களுக்கு என் வேண்டுகோள்:
  • தயவு செய்து அப்படி பட்ட எண்ணம் வைத்து கொண்டு இந்தப் பயிற்சிக்கு வர வேண்டாம்.” என்பது தான்.
  • காரணம் நான் என்ன தான் பயிற்சி கொடுக்கிற அளவிற்கு வளர்ந்திருந்தாலும். நானே வாஸ்து என்கின்ற விஷயத்தை இன்றளவும் கற்றுக் கொள்ள முடியும் என்றுதான் நித்தமும் அணுகுகின்றேன். நீங்களும் அப்படி தான் இருக்க வேண்டும் என ஆசைப்படுகின்றேன். அப்படி இருந்தால் தான் கடல் போன்ற இந்த அறிவியலை புரிந்து கொள்ள முடியும். நாம் எல்லாவற்றையும் தெரிந்த அரைகுறையாக இருப்பதைவிட ஒன்றை மட்டும் நன்கு தெரிந்து கொள்ள முற்படுவோம்.
  • எப்படி டாக்டர்கள் Ortho, Neuro, Skin - க்கு என்று தனி தனியாக இருகின்றார்கலோ அதுபோல் எதாவது ஒரு கலையில் தனித்துவம் பெறுவோம்.
 • இந்நிகழ்ச்சிக்கு ஒரு பெண், தன் கணவர் மற்றும் குழந்தைகளுடன் தாராளமாக வரலாம். மனைவிக்கு மட்டும் வாஸ்து பயிற்சி எனும் பட்சத்தில் கணவர் மற்றும் குழந்தைகள் நிகழ்ச்சியில் பங்கு பெற அனுமதி இல்லை. அவர்கள் குடும்பமாக ஒன்றாக தங்கலாம். அப்படி தங்கும்பட்சதில் தங்குவதற்கும், போக்குவரத்திற்கும், உணவுக்காகவும் ஆகும் செலவு வசூலிக்கப்படும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
  • பெண்கள் தனியாக வரும் பட்சத்தில் பெண்களுடன் தங்க வைக்கப்படுவார்கள் அல்லது கூட உறங்க பெண்கள் துணை இல்லாத பட்சத்தில் அவர்களுக்கு தனி அறை கொடுக்கப்படும்.
 • பயிற்சி 9 நாள் என்பது கூட மாறுவதற்கு வாய்ப்புண்டு.
 • பயிற்சிக்கு வருகிறவர்கள் பயிற்சி நடைபெறும் 5 - 6 நாட்களும் நன்கு அலைய வேண்டும் என்பதை தயவு கூர்ந்து நினைவில் கொள்ள வேண்டுகின்றேன்.
 • சொந்த 4 சக்கர வாகனங்களில் வர இருப்போர் அந்த விபரத்தை முன் கூட்டியே எங்களிடம் கூறினால் நாங்கள் திட்டமிடுவதற்கு வசதியாக இருக்கும்.

Vastu Practitioner Training நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கு இருக்க வேண்டிய முக்கிய தகுதி :-

 • தன் மேல் நம்பிக்கை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
 • கடவுளும் இவர்கள் மேல் நம்பிக்கை வைத்திருக்கிறார் என்கின்ற அளவிற்கு நல்ல மனிதர்களாக இருக்க வேண்டும்.
 • சொல்வதை புரிந்து கொள்ளும் திறன் இருந்தால் அதுவே போதுமானது.
 • மனிதாபிமானம் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
 • கடினமாக உழைக்கின்ற மனப்பான்மை 100% இருக்க வேண்டும்.
 • இலவசமாக கருத்து கேட்பவர்களை அறவே ஒதுக்கி வைக்க தெரிந்திருக்க வேண்டும்; காரணம் அவர்கள் தான் மிகவும் அபாயகரமானவர்கள். இலவசமாக வாஸ்து அறிவுரை கேட்கிறவர்கள் பெரிய அளவில் எதிர்மறை எண்ணங்களை (Negative Energy) உங்களுக்கு கொடுக்கவல்லவர்கள். காரணம் ஒரு வீடு கட்டும் அளவிற்கு வசதி உள்ளவர்களான இவர்கள் ஒரே ஒரு சந்தேகம் என்று கேட்பார்கள். அந்த சந்தேகத்திற்கு நீங்கள் பதில் சொல்லும் பட்சத்தில் வீட்டில் வேறு தவறு இருந்து அவர்கள் கஷ்டப்படும் சூழ்நிலை ஏற்பட்டால் தேவை இல்லாமல் உங்களுக்கு தான் கெட்டப்பெயர் ஏற்படும். மேலும் ஒரு வீடு கட்டும் அளவிற்கு வசதி உள்ளவர்களுக்கு ஒரு கேள்வியோ அல்லது 1௦ கேள்வியோ நீங்கள் அவர்களுக்கு இலவசமாக பதில் சொல்லும் பட்சத்தில் நம் நேரத்தை அவர்கள் இஷ்டத்திற்கு பயன்படுத்த அனுமதிக்கின்றோம். இது தவறு. இது நம்மை முடமாக்கும் செயல். பயிற்சி பெறுபவர்கள் இந்த கருத்தை நன்கு ஞாபகம் வைத்து கொள்ள வேண்டும். நீங்களும் யாரிடமும் இலவசம் பெற கூடாது. அதேபோல் அடுத்தவர்கள் கொடுக்கும் இலவசமும் நமக்கு தேவை இல்லை என்பதில் தெளிவாக இருங்கள்.
 • பயிற்சி முடிந்த உடன் ஒரே நாளில் போட்ட பணத்தை எடுக்க ஆசைப்படாதவர்களாக இருக்க வேண்டும்.

கீழ்கண்டவற்றை மனதில் கொண்டு செயல்பட வேண்டும :-

 • எனக்கு வாஸ்து தெரியும் என்று நீங்களே உங்களை பற்றி சொல்லி கொண்டு திரிய கூடாது.
 • உங்களுக்கு வாஸ்து தெரியும் என்பதை உங்களை சுற்றி உள்ளவர்கள் ஏற்று கொள்ளும் வகையில் உங்கள் செயல்பாடுகள் இருக்க வேண்டும்.
 • தேவையில்லாத ஆட்களிடம் வாஸ்துவை பற்றி வாதம் செய்ய கூடாது.
 • இத்திட்டத்தில் பயிற்சி பெற்ற பிறகு உங்களை நீங்கள் சந்தைபடுத்த தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த கலையை கற்று பிரயோஜனம் கிடையாது.
 • ஒரு குறிப்பிட்ட காலம் வரை பணம் இல்லாமல் தேவையான நல்ல ஆட்களுக்கு வாஸ்து பாருங்கள். பின், பணம் இல்லாமல் யாருக்கும் பார்க்காதீர்கள். காரணம் இலவசம் மக்களால் கொண்டாடப்படுவதில்லை. இலவசத்திற்கு என்றும் மதிப்பும் இருப்பதில்லை.
 • என்னைப் பொறுத்தவரை நான் ஏறத்தாழ 1௦ வருடங்களுக்கு வாஸ்துவை சேவையாக பண்ணியதால் தான் இந்தளவிற்கு நான் வளர முடிந்தது. நீங்களும் அதே போல் கூடுமானவரை உங்களை மட்டம் தட்டாத ஆட்களையும், மதிக்கும் ஆட்களையும் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உங்கள் சேவையை அளிக்கவும்.
 • சேவையை அளித்தபின் அவர்கள் வாழ்க்கையில் நடைபெறும் மாற்றங்களை தயவு கூர்ந்து கவனிக்கவும். எவ்வளவு பேருக்கு வாஸ்து பார்க்கிறோம் என்பது முக்கியமல்ல. எந்தளவிற்கு சுத்தமாக செய்கின்றோம் என்பது தான் முக்கியம்.
 • எந்த நிலையிலும் யாரையும் உண்மைக்கு புறம்பாக பயமுறுத்தி வாஸ்து மாற்றத்தை கொண்டு வர முயற்சிக்க கூடாது. அதேபோல் எந்த சூழ்நிலையிலும் யாருக்கும் பரிகாரம் என்கின்ற பெயரில் எந்தப் பொருளையும் விற்கவே கூடாது.
 • கீழ் சொல்லப்படும் நீதிக்கதை பயிற்சிக்கு வரும் அனைவருக்கும் நினைவில் இருக்கவேண்டும்
  • ஒரு தீவில் தனது நிறுவனங்களை துவங்க இரு செருப்பு தயாரிக்கும் கம்பனிகள் முயன்றன அங்கு நிறுவனங்களை நிறுவினால் வியாபாரம் எப்படி இருக்கும் என்று கண்டு உணர தங்களுடைய விற்பனையாளர்களை அங்கு அனுப்பின...  முதல் நிறுவனத்தின் விற்பனையாளர் அங்கு ஆய்வு செய்து விட்டு அங்கு இலட்சம் பேர் உள்ளனர் ஆனால் ஒருவருக்கு கூட செருப்பு என்றால் என்னவென்றே தெரியவில்லை. அங்கு செருப்பு நிறுவனம் தொடங்குவதால் எந்தவித லாபமும் இல்லை என்று அறிக்கை சமர்பித்தார். இரண்டாவது நிறுவனத்தின் விற்பனையாளர் அங்கு ஆய்வு செய்து விட்டு அங்கு இலட்சம் பேர் உள்ளனர் ஆனால் ஒருவருக்கு கூட செருப்பு என்றால் என்னவென்றே தெரியவில்லை. எனவே நாம் செருப்பின் பயனை அவர்களுக்கு விளக்கி விளம்பரம் செய்தால் நாம் மிக பெரிய அளவில் வெற்றி பெறலாம் என்று அறிக்கை சமர்பித்தார். இரண்டாவது நிறுவனம் தனது நிறுவனத்தை துவங்கி வெற்றியும் பெற்றது.
  • மேற்சொன்ன கதைபோல வாஸ்துவிற்கும் உலகம் முழுவதும் தேவை இருக்கின்றது. எனவே பார்க்கின்ற ஒவ்வொரு வீட்டையும் நமக்கு ஒரு விஷயத்தை கற்று கொடுக்கும் ஆசானாகவும், வாடிக்கையாளர்களாகவும் பார்க்கும் மனோ பக்குவம் வேண்டும்.
 • ஆரம்ப கால கட்டங்களில் கூடுமானவரை பெரிய பணக்காரர்களுக்கு வாஸ்து பார்ப்பதை தவிர்க்கவும். காரணம் என் அனுபவத்தின் படி நீங்கள் அதிகம் ஏமாற்றப்படுவதற்கு வாய்ப்பு உண்டு. அதற்கு பதில் ஏழைகளுக்கும், நடுத்தர மக்களுக்கும் வாஸ்து பார்க்கும் பட்சத்தில் அவர்களிடம் இருந்து உங்களுக்கு பெரிய நட்பும் / அன்பும் / அரவணைப்பும் / ஊக்கமும் கிடைக்கும்.
 • பணக்காரர்கள் உங்களை யாருக்கும் அறிமுகம் செய்ய மாட்டார்கள். ஆனால் ஏழைகளும், நடுத்தர மக்களும் உங்களை கண்டிப்பாக அவர்களுக்கு தெரிந்தவர்களுக்கு அறிமுகம் செய்வார்கள்.
 • ஒருவர் உங்களிடம் நீங்கள் கேட்ட பணத்தை தருவதாக சொல்லி இருப்பார். நேரடியாக பார்க்கும் பட்சத்தில் அவர் ஏழ்மையின் உச்சகட்டத்தில் இருப்பார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் இருபவர்களிடம் பணம் வாங்கவே கூடாது.
 • உள்ளுரில் வாஸ்து அதிகம் பார்க்க முற்பட கூடாது. (உள்ளூர் மாடு விலை போகாது)
 • வாஸ்து பார்ப்பதில் பெரிய நன்மைகள் நிறைய உண்டு. அதில் முக்கியமானவை:-
  • Money (பணம்)
  • Contacts (ஆட்கள் தொடர்பு)
  • தன்னம்பிக்கை வளரும்
 • இப்பயிற்சிக்கு பிறகு உங்களுக்கு என்று ஒரு Website, ஒரு அலுவலகம், ஒரு செயலாளர் என்கின்ற அமைப்பை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.
 • மற்ற வாஸ்து நிபுணர்களை உங்களுடன் ஒப்பிடு செய்து நீங்கள் தொழில் செய்ய கூடாது.
 • சாதாரண மக்களுக்கு நீங்கள் வாஸ்துவை எப்படி பரிசோதிக்க வேண்டும் என்றால் சிறிய அளவில் மாற்றத்தை சொல்லி (தவறான இடத்தில் இருக்கும் மரத்தை வெட்டுவதன் மூலமாகவும், தவறான இடத்தில் இருக்கும் சமையல் அறை, பூஜை அறையை மாற்றுவதன் மூலமாகவும், தவறான இடத்தில் உள்ள பாரத்தை குறைப்பதன் மூலமாகவும்) புரிய வைக்கலாம். பின் அவர்களுக்கு நம்பிக்கை வரும் பட்சத்தில் தவறாக உள்ள ஏனைய விஷயங்களை பற்றி கூறலாம்.

குறிப்பு: -

  • இந்த நிகழ்ச்சிக்கு வரும்படி நான் யாரையும் வற்புறுத்தவில்லை. நிகழ்ச்சியில் பங்கு பெற விரும்புகிறவர்கள் தயவு செய்து நன்றாக, சுயமாக முடிவெடுத்து, நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்து முடிவெடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்
  • நான் யாரையும் ஆசை வார்த்தை சொல்லியோ, விளம்பரபடுத்தியோ கூட்டம் சேர்க்கவில்லை. இந்நிகழ்ச்சியால் நமக்கும் பயன் உண்டு என்று நம்புகிறவர்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றால் போதுமானது.
  • வாஸ்து பயிற்சி வகுப்பில் தேர்வு பெற்ற பிறகு கவனிக்க வேண்டிய முக்கிய குறிப்புகள்:
   • நான் புதியதாக ஒரு வாடிக்கையாளரை (Clients – ஐ) பார்க்க செல்லும் போது இப்போது வாஸ்து பயிற்சி பெறுபவர்கள் நான் சந்திக்கபோகும் அந்த புது வாடிக்கையாளர் இருக்கும் மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருக்கும் பட்சத்தில் பயிற்சி பெறுபவர்கள் விருப்பப்பட்டால் அவர்களையும் என்னுடன் அழைத்து செல்வேன். (சில நேரங்களில் புதிய வாடிக்கையாளர் நான் மட்டும் தனியாக வர வேண்டும் என்று விரும்பினால் அது போன்ற சூழ்நிலையில் வாஸ்து பயிற்சி பெறுபவர்களை என்னால் அழைத்து செல்ல இயலாது)
  • என்னுடைய பழைய வாடிக்கையாளர்கள் (Old Clients) என்னை அவர்களின் வாஸ்து தேவைக்காக தொடர்பு கொள்ள நேரிடும் போது சூழ்நிலைக்கேற்ப என்னுடைய பழைய வாடிக்கையாளர்கள் (Old Clients) விருப்பப்படும் பட்சத்தில் Andal Vastu Practitioner Training – ல் பயிற்சி பெற்றவரை பயன்படுத்துவேன்.
  • பயிற்சியில் பங்கு பெறுவோர் தேர்வு பெறும் பட்சத்தில் www.vastushastram.com / www.andalvastu.com website – களில் மாவட்ட வாரியாக Sri Andal Consulting approved Vastu Consultants என பெயர் வெளியிடப்படும்.
  • என்னுடன் 24x7 – ம் நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில் அவர்களுக்கு என்னுடைய Personal தொலைபேசி எண் கொடுக்கப்படும்.
  • Unique ஆன என்னுடைய Case Studies பற்றி Regular Interval – ல் வாஸ்து பயிற்சி பெற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வேன்.
   • உதாரணம்:- எல்லோரும் தெருக்குத்து ஒரு இடத்திற்கு இல்லவே இல்லை என்று சொல்லும் நிலையில், ஒரு இடம் தெருக்குத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என்று நான் மட்டும் கூறுகின்றேன் என்றால் அது எப்படி என்று விளக்கப்பட்டிருக்கும்
  • ஒவ்வொரு வாஸ்து நிபுணரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஊர் ஆன இலங்கைக்கு விருப்பப்படுபவர்களை அவரவர் சொந்த செலவில் நான் அழைத்து செல்வேன். காரணம் தவறான வாஸ்துவினால் ஒரு நாடு சிதைந்து நாம் சகோதர இனம் அழிந்து போனதையும், நைனா தீவு நாகபூஷணியம்மனையும் கண்டிப்பாக பார்க்க வைத்து மனதில் பதிய வைப்பேன்.
  • என்னை நிறைய பேர் Franchise Model – ல் Andal Vastu Practitioner Training – க்கு பிறகு வேலை செய்ய சொன்னார்கள். நான் உழைக்காததற்கு பணம் பெறுவதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதால் Andal Vastu Practitioner Training – ல் பயிற்சி பெற இருப்பவர்களுக்கு என்னுடைய வேண்டுகோள்:-
   • Andal Vastu Practitioner Training – பயிற்சி பெற்ற அனைவரும் ஒரே மாதிரி System - ஐ பின்பிற்றுதல் நல்லது.
   • அடுத்த கட்டம் போகும்வரை ஒரே சீராக Consultation Fees வாங்குவது நல்லது. (வகுப்பில் விரிவாக விவரிக்கின்றேன்)
   • எந்த சூழ்நிலையிலும் Rate Negotiate பண்ண கூடாது.
  • கடவுளுக்கும், ஏழைக்குழந்தைகளின் படிப்பிற்காகவும், அன்னதானத்திற்கும் நிறைய செலவிடுங்கள்.
  • என்னுடைய ஆராய்ச்சியின் படி, ஜோதிடம் பார்ப்பதற்கு ஜோதிடத்தை குறைந்தபட்சம் 15 வருடமாவது ஆராய்ச்சி செய்திருக்க வேண்டும். உங்களுக்கு குறைந்தபட்சம் 15 வருடம் ஆராய்ச்சி அனுபவம் இல்லையென்றால் தயவுசெய்து வாஸ்து பார்க்க போகும் இடத்தில் ஜோதிட ஆலோசனை யாருக்கும் வழங்க வேண்டாம்.
  • எந்த சூழ்நிலையிலும் வாடிக்கையாளர் (Customer) சந்தோஷத்திற்காக வாஸ்து சொல்லாதீர்கள்.
  • ஒரு காலகட்டத்திற்கு பிறகு நீங்கள் தரும் சேவையால் உங்களை கடவுளாக கூட மக்கள் நினைக்ககூடும். (நாம் எல்லோருமே கடவுள் தானே!!!). அதற்கு ஏதுவாக நாமும் நடந்து கொள்ள வேண்டும். குடியும், புகையும், அசைவமும், இன்னபிற போதை பழக்கங்களையும் தவிர்ப்பது நல்லது.
  • பயிற்சிக்கு பின், ஒருவரை ஒருவர் போட்டியாளர் ஆக கருதாமல், தேவைப்படும் போது ஒருவருக்கு ஒருவர் உதவிகளை செய்து கொள்ள வேண்டும். நமக்குள் நிறைய பேசிக் கொள்வோம். தேவைப்படும் பட்சத்தில் 3 மாதம் அல்லது 6 மாதம் அல்லது 1 வருடம் கழித்து மீண்டும் ஒரு முறை நாள் முழுக்க சந்தித்து பேசுவோம்.
  • Andal Vastu Practitioner Training – பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட இருப்பவர்கள் அவர்களுடைய குடும்பத்தினரின் பெயர் / பிறந்த தேதி / நட்சத்திரம் / திதி / நேரம் / பிறந்த ஊர் பெயர்
  • வீட்டின் வரைபடம் மற்றும் எதிர்கால லட்சியம் என்ன என்பதை தெரிவிக்கவும்.

நிகழ்ச்சியில் பங்கு பெற விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:

திரு.செந்தூர் சுப்பிரமணியன் +91 99622 94600
திருமதி.சங்கமித்ரா +91 95972 77477