தந்தை

ஸ்ரீ

APC father

நான் சிகரெட் பிடிக்கின்றேன் என்று தெரிய வந்தவுடன் நான் எந்த கடையில் சிகரெட் வாங்குவேனோ அந்த கடைக்காரரிடம் சென்று என் பையனுக்கு காஸ்ட்லி சிகரெட் கொடுங்க; லோக்கல் சிகரெட் கொடுக்க வேண்டாம் என்று சொல்லியதை பக்கத்தில் இருந்து கேட்ட என் அப்பாவின் நண்பர் இது என்ன அநியாயம்? பிள்ளையை கூப்பிட்டு கண்டிக்காமல் என் பையனுக்கு காஸ்ட்லி சிகரெட் கொடுங்க என்று சொல்லறியே?!!! என்றதற்கு

அவர் சொன்ன வார்த்தைதான் இன்றுவரை என்னை மனிதனாக நடத்திகொண்டு இருக்கின்றது……

அந்த வார்த்தை…

என் பையனுக்கு அது நல்லது இல்லைன்னு தெரிஞ்சா அவன் அதை உடனே விட்டு விடுவான்…. அவன்  கண்டிப்பாக கூடிய விரைவில் இந்த பழக்கத்தை விட்டு விடுவான். Wait பண்ணி பாரு…..

தவறை தட்டி கேட்காமல் தானாக அது தீரும். நான் நேராவேன்; சீராவேன்  என்று அவர் என் மேல் வைத்த நம்பிக்கை தான் இன்றும் என்னை நகர்த்தி கொண்டு போகின்றது….

நம்பிக்கை தான் வாழ்க்கை என எனக்கு புரிய வைத்த என் தந்தை இன்று என்னுடன் உடலாக இல்லாமல் போயிருந்தாலும் கடவுளாக என்னை வழி நடத்தி கொண்டிருப்பது அவர் தான் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும்…

மறக்க முடியாத என் தந்தைக்கு இனிய நன்றிகள் ….

 

திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;
தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!
நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்
என்றென்றும் அன்புடன்
ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

four + five =