திசைகள் மற்றும் மூலைகள் யாவை?

திசைகளே வாஸ்துவின் மூலக்கூறு

திசைகளே வாஸ்துவின் மூலக்கூறு. வாஸ்து என்ற ஒரு நடைமுறை தெரிந்தோ, தெரியாமலோ பல நூற்றாண்டுகளாக உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வாஸ்துவின் அடிப்படையாக நான்கு திசைகளையும், நான்கு மூலைகளையும் கூறலாம். அவை,

நான்கு திசைகள்

• வடக்கு
• கிழக்கு
• தெற்கு
• மேற்கு

நான்கு மூலைகள்

• வடகிழக்கு மூலை
• தென்கிழக்கு மூலை
• தென்மேற்கு மூலை
• வடமேற்கு மூலை

வடக்கும் கிழக்கும் சந்திக்கும் இடம் வடகிழக்கு மூலையாகும் (ஈசான்ய மூலை / சனி மூலை). தெற்கும் கிழக்கும் சந்திக்கும் இடம் தென்கிழக்கு மூலையாகும்(அக்னி மூலை). தெற்கும் மேற்கும் சந்திக்கும் இடம் தென்மேற்கு மூலையாகும் (நைருதி மூலை/ கன்னி மூலை) மற்றும் வடக்கும் மேற்கும் சந்திக்கும் இடம் வடமேற்குமூலையாகும்(வாயு மூலை).
இவ்வாறு திசைகளையும், மூலைகளையும் அடிப்படையாக கொண்டு அதற்கு ஏற்றார் போல் நல்முறையில் ஒரு வீடோ/ தொழில் நிறுவனமோ கட்டும்பொழுது மனிதனின் வாழ்வு தடுமாற்றமோ, தடமாற்றமோ இல்லாமல் அமையும்.

Share this:

Write a Reply or Comment

seventeen + 11 =