கால்பந்து கதை!!!!

கால்பந்து கதை: ஒருமுறை கால்பந்து, இறைவனிடம் போய் முறையிட்டதாம். “நானும், புல்லாங்குழலும் காற்றை மையமாக வைத்துத்தான் இயங்குகிறோம். புல்லாங்குழலை எல்லாரும் உதட்டோடு வைத்து கொஞ்சுகிறார்கள். ஆனால், என்னை மட்டும் எல்லாரும் எட்டி, எட்டி உதைக்கிறார்கள். இறைவா உனது படைப்பில் ஏன் இந்த பாகுபாடு…?” என்று கால்பந்து ஆதங்கத்தோடு கேட்டதாம். உடனே இறைவன் சொன்னாராம் “நீ சொல்வது உண்மைதான். புல்லாங்குழலும், நீயும் காற்றின் அடிப்படையில்தான் இயங்குகிறீர்கள். புல்லாங்குழல், தான் உள்வாங்கும் காற்றை அழகிய இசையாக உடனே பிறருக்கு கொடுத்து […]

நாற்காலி……

நாற்காலி   இந்த ஒத்தை வார்த்தைக்காக தானே மொத்த உலகமே சண்டையிட்டுக் கொண்டு இருக்கின்றது…..   அலுவலகம் அரசியல் ஆன்மிகம்   என அனைத்து இடத்திலும் நாற்காலிக்காக தானே எத்தனை எத்தனை நகர்வுகள் நடந்து நகர்ந்து கொண்டே இருக்கின்றன…   நாலு காசு பார்த்த நடிகர்களும் நாற்காலிக்காக தானே நடித்துக் கொண்டிருக்கின்றனர் இன்று……   சுட்டுப் போட்டாலும் நடிப்பே வராத நாடாளுபவர்களும் நாடாண்டவர்களும் நாடாள போகின்றவர்களும் நாற்காலியை கைப்பற்றுவதற்காக தானே நடித்துக் கொண்டே இருக்கின்றார்கள் இப்போதும் எப்போதும்….. […]

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்….

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்.   பூமியில் நாம் நிரந்தமானவர்கள் இல்லை என்றாலும் சரித்திரம் படைக்க சாதனைகள் பல புரிய பிறருக்கு உதவும் வகையில் வாழ்ந்திட   நம் இருப்பு இந்த பூமிக்கு நிச்சயம் அவசியம்….   அவசியம் நடந்திட உடல் பழகு…. உன் உடலை கவனி…..   என்றும் அன்புடன் டாக்டர் ஆண்டாள் சொக்கலிங்கம்   சென்னை 10/09/2020  

மதி சரி ஆக மிதி தான் சரியாக இருக்கும்….

மதி சரி ஆக மிதி தான் சரியாக இருக்கும்….   கண் கெடுவதற்கு முன் சூரிய நமஸ்காரம்…   இயற்கைக்கு நன்றி அவகாசத்தை கொடுத்ததற்காக….   மாற்றம் மற்றும் முன்னேற்றத்தை நோக்கி நான்   அப்ப நீங்க?????!!!!!   வலிமையான பாரதம் படைக்க ஆரோக்கியமாக வாழ்வோம்…..   என்றும் அன்புடன் டாக்டர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இறை குறிப்பு:

இறை குறிப்பு:   இடம் பழனி மலை நாள் 1/09/2020 நேரம் மதியம் 1.15   முடிந்தால் முடியும்..   தொடர்ந்தால் தொடரும்..   இதுதான் வாழ்க்கை:   முடியுமா என்று நினைத்தவனுக்கு முடியும் உன்னாலும் என்பதற்காக எனக்காக பழனி முருகன் அனுப்பிய கலங்கரை விளக்கம் தான் நீயோ……   இறை குறிப்பு கிடைத்தது..   இறைவனின் அருளால் இரையை(????!!!!!!) தேடி நீண்ட பயணம் நேற்றிலிருந்து……   என்றென்றும் அன்புடன் டாக்டர் ஆண்டாள் P.சொக்கலிங்கம்  

விளம்பரப் படுத்த அல்ல இந்த நிகழ்வு

அன்பு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். 27/08/20 அன்று ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவையின் மதுரை மாவட்டம் சார்பாக திரு நாகராஜன், திரு ராஜா, திரு பாண்டியராஜா ஆகிய மூவரும் சில மாதங்களுக்கு முன் சீனாவுக்கு எதிரான போரில் தங்கள் இன்னுயிரை கொடுத்து நம் நாட்டை காப்பாற்றிய 20 வீரர்களில் ஒருவரான திரு பழனி அவர்களுடைய மனைவி திருமதி வானதி பழனி அவர்களை சந்தித்து, அவரின் இரண்டு வாரிசுகளுக்கு என ரூபாய் 2 லட்சம் மதிப்புள்ள இரட்டைக் காப்பீட்டை […]

கடந்து செல்வதற்காக தானே இந்த வாழ்க்கை!!!!!!

கடந்து செல்வதற்காக தானே இந்த வாழ்க்கை!!!!!!   நரி இடம் போனால் என்ன வலம் போனால் என்ன நம்மை விழுந்து பிடுங்காமல் இருந்தால் சரி……   பல பேருடைய வாழ்க்கையின் என்ன ஓட்டமாக இருந்த இவ் விஷயம் இன்று எல்லோருடைய எண்ண ஓட்டமாக மாறி விடும் என்கின்ற அளவிற்கு காலத்தின் ஓட்டம் கார்ல் லீவிஸை விட வேகமாக…….   அடுத்து என்ன? அடுத்த வேலை என்ன? அடுத்த நாள் என்ன? அடுத்த மாதம் என்ன?   மனித […]

நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?

நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?   தேடிச் சோறுநிதந் தின்று பல சின்னஞ் சிறுகதைகள் பேசி மனம் வாடித் துன்பமிக உழன்று பிறர் வாடப் பலசெயல்கள் செய்து நரை கூடிக் கிழப்பருவ மெய்தி கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?   சாம்பலிலிருந்து மீண்டும் உயிர்த்தெழுந்து வந்தவன் நான் பீனிக்ஸ் பறவை போல….   இருப்பதற்காக வாழும் மனிதர்களுக்கு நடுவிலே வாழ்க்கையே பறப்பதற்காக என வாழும் […]

கடலாக மாற!!!

கடலாக மாற!!!   மீண்டும் ஒரு காலை… மீண்டும் ஒரு பிறப்பு… மீண்டும் ஒரு பயணம்… என் இருப்பிற்காக அல்ல… எல்லோரும் இருப்பதற்காக!!!   வேகமாக ஓடு! முடியாவிட்டால் நட! அதுவும் முடியாவிட்டால் தவழ்! ஆனால் என்றும் முயற்சியை கைவிடாமல் இலக்கை நோக்கி நெடிய பயணம்…   நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு “நதி” போல…….. ஒரு இடத்தில் வெற்றி காத்திருக்கும் “கடலாக”.   இது சாதாரண சாதனை மனிதர்களுக்கு பொருந்த கூடிய வாசகம். என் பிரயாணமோ […]

ஒத்த புள்ளையும் சுகன்யாவும்…

ஒத்த புள்ளையும் சுகன்யாவும்…   ஒத்தையாக பிறந்ததால் என் பிள்ளைகளுக்கு என் பக்கம் இருந்து அத்தை மாமா சித்தப்பா சித்தி பெரியப்பா பெரியம்மா உறவு இல்லாமல் போனது…   இந்த வருத்தம் எந்த ஜென்மத்திலும் நீங்காத துன்பமாகவே இருக்கப்போகின்றது. இருந்துவிட்டுப் போகட்டும்..   கவிக்கோ சொல்வார் எனக்கு ரோஜாவை விட அதில் உள்ள முட்களை தான் மிகவும் பிடிக்கும் என்று.   காரணமாக அவர் முன் வைப்பது இந்த வாதத்தை தான்.   ஏன் முட்களை பிடிக்கும் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by