மார்கபந்தீஸ்வரர்

திருவிரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வரர் கோவில் : வேலூர் மாவட்டத்தில் பாலாற்றங்கரையில் அமைந்த மற்றொரு சிவத்தலம் விரிஞ்சிபுரம். இது ஷீரமாநதி (ஷீரம் என்பதற்கு வடமொழியில் பால் என்று பொருள்) என்றழைக்கப்படும் பாலாற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. சுமார் 1300 ஆண்டுகள் பழமையானது. இத்தலம் தேவாரப்பாடல் பெற்ற தலம் என்ற சிறப்பினை உடையது. இத்தலத்து வடக்கு பக்க கோபுர வாயில் எப்போதும் திறந்தே இருக்கும். இதன் வழியாக தேவர்கள் தினமும் இறைவனை வழிபடுவதாக செய்தி. திருவாரூர் தேரழகு. திருவிரிஞ்சை மதிலழகு. கோவிலின் மதில் […]

திருநறையூர் நம்பி கோவில்

திருநறையூர் நம்பி கோவில் :  பெரும்பாலான வைணவ தலங்களில் கருடபகவானுக்கு வைக்கப்படும் சிலை சுதை சிற்பமாகவோ அல்லது மரத்தால் செய்யப்பட்டதாகவோ இருக்கும். கற்சிற்பமாக இருந்தால் சிறிய அளவிற்கு இருக்கும் ஆனால் இக்கோவிலில் உள்ள கருடன் எந்த கோவிலிலும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவிலான கற்சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. தாயாருக்கு முன்னுரிமை தரும் இந்தத் தலத்தின் மற்றொரு சிறப்பம்சம் வியக்க வைக்கும் ஆலய அதிசயமாக இருப்பது… கல்கருடனின் எடை அதிகரிப்பது தான்…! பெருமாள் கோவில்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற கோவிலாக […]

வில்வவனநாதர்

அருள்மிகு வில்வவனநாதர் திருக்கோவில்: இந்த அருள்மிகு வில்வவனநாதர் திருக்கோவில் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திர வட்டத்தில் அமைந்துள்ள கடையத்தில் உள்ளது. பொதுவாக சிவனுக்கு மிகவும் பிடித்தமான அர்ச்சனை பொருள் வில்வம். அந்த வில்வத்தின் பெயரையே சுவாமி இங்கு தனக்கு பெயராகச் சூடிக்கொண்டுள்ளார். மேலும் மகாகவி பாரதியார் இக்கோவில் முன்பு உள்ள தட்டப்பாறையில் அமர்ந்து தான் ‘காணிநிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும்” என்ற புகழ் பெற்ற பாடலை எழுதினார். தேவர்கள் வளர்த்த மரம் : பிரம்மதேவருக்கு சிவபெருமான் […]

பச்சோட்டு ஆவுடையார் திருக்கோவில்

பச்சோட்டு ஆவுடையார் திருக்கோவில்: குளத்தில் மண் கலயத்தில் #விபூதி தோன்றுகிறது! சில ஆலயங்களைப் பற்றி படிக்கும்போதே அவை நம்மை ஆச்சரியப்படுத்தக் கூடியதாகவும் பிரமிக்க வைப்பதாகவும் இருக்கும். 500 -1000 வருடங்கள் மிக பழமை வாய்ந்த இந்த அருள்மிகு பச்சோட்டு ஆவுடையார் திருக்கோவில் ஈரோடு மாவட்டம் காங்கேயத்திற்கு அருகில் #மடவிளாகம் என்னும் ஊரில் உள்ளது. பச்சை ஓட்டுடன் #சிவன் எழுந்தருளியதால் இத்தல இறைவன் ‘பச்சோட்டு ஆவுடையார்” என அழைக்கப்படுகிறார். ஆனால் கல்வெட்டுக்களில் ‘பச்சோட்டு ஆளுடையார்” என காணப்படுகிறது. தலத்தின் […]

சுகந்தவனேஸ்வரர்

அருள்மிகு சுகந்தவனேஸ்வரர்….! தமிழகத்தில் இருக்கும் கோவில்களில் பல அதிசய நிகழ்வுகள் இன்றும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அது நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. அவ்வாறு சிவகங்கை மாவட்டம் கண்டிரமாணிக்கம் அருகில் பெரிச்சிகோவில் என்ற இடத்தில் உள்ள 1400 ஆண்டு பழமை வாய்ந்த அருள்மிகு சுகந்தவனேஸ்வரர் கோவிலில் நடைபெறும் அற்புதங்கள் அனைவரையும் வியக்க வைக்க கூடியதாக இருக்கிறது. இக்கோவிலின் மூலவர் சுகந்தவனேஸ்வரர் இறைவி சமீபவல்லி ஆவார். இங்குள்ள பைரவர் எட்டு கைகளிலும் ஆயுதம் ஏந்தி கபால மாலை அணிந்திருக்கிறார். […]

காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர்

காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் …!! ஒவ்வொரு கோவிலுக்கும் பொதுவாக ஒரு அதிசயம் இருக்கும். அவை கடவுளின் சக்தியால் நடக்கிறது என்பது நமது நம்பிக்கை. 500 ஆண்டுகள் மிக பழமை வாய்ந்த இந்த ஸ்ரீவரசித்தி விநாயகர் கோவில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் காணிப்பாக்கத்தில் எழில்மிகு அழகோடு உள்ளது. இங்கு,இந்த அதிசய ஸ்ரீவரசித்தி விநாயகர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். வரசித்தி விநாயகர் சுயம்புவாக தோன்றிய கிணறு இப்போதும் உள்ளது. இக்கிணற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர்தான் இன்றைக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. […]

நாகராஜா சுவாமி திருக்கோயில்

நாகராஜா சுவாமி திருக்கோயில்: தமிழகத்தில் நாகர் (பாம்பு) வழிபாட்டிற்கென அமைந்த #பெரியகோவில் நாகர்கோவில் மட்டுமே ஆகும். நாகராஜா கோவில் என்பது கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயிலில் உள்ளது. இக்கோயிலின் பெயரிலேயே ஊர் நாகர்கோவில் என்றழைக்கப்படுகிறது. இக்கோவிலின் கருவறையின் மேல் ஓலை வேயப்பட்டு உள்ளது. இது வேறு எந்தக் கோவிலிலும் பார்க்கமுடியாத சிறப்பு அம்சமாகும். அது மட்டுமல்ல இந்தக் கோவிலின் கருவறை மண் ஆறு மாதம் #கருப்பாகவும் ஆறு மாதம் #வெண்மையாகவும் காணப்படுகிறது. இது பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இக்கோவிலில் அருள்பாலிக்கும் பாலமுருகனுக்கு ஆண்டு தோறும் சஷ்டி விழா மிகச் […]

ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதஸ்வாமி:

ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதஸ்வாமி: #திருவரங்கம் என்னும் ஸ்ரீரங்கம் திருச்சிராப்பள்ளியிலுள்ள ஒரு தீவு மற்றும் தென் இந்தியாவில் ஒரு பகுதியாகும். ஸ்ரீரங்கம் ஒரு புறம் காவிரி நதி மற்றும் காவிரி விநியோகிப்பாளரான கொள்ளிடம் ஆகியவற்றால் பிரிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் ஸ்ரீவைஷ்ணவர்களின் கணிசமான மக்கள்தொகையை பராமரிக்கிறது. ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீ ரங்கநாதஸ்வாமி கோவிலின் முக்கிய கோபுரம் ஸ்ரீரங்கம் கோயிலின் வெள்ளை கோபுரம் ஆகும். ஸ்ரீ ரங்கநாதஸ்வாமி கோவில், இந்துக்களின் முக்கியமான இடமாகவும் மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய கோவில் வளாகத்திற்காகவும் புகழ்பெற்றது. விஷ்ணுவின் ஒரு சில […]

சென்னிமலை முருகன்

சென்னிமலை முருகன்: பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்களால் கட்டப்பட்ட இந்த கோவில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,749 அடி உயரத்தில் பசுமை மிக்க மரங்களாலும், மூலிகை குணம் கொண்ட செடிகளாலும் சூழப்பட்ட அழகிய வனப்பகுதியில் உள்ளது. இத்தல இறைவனை தண்டாயுதபாணி என்றும் அழைப்பார்கள். இங்கு இறைவன் அக்னி மூர்த்தியாக (இரண்டு தலைகளைக் கொண்ட முருகப்பெருமான்) திருக்காட்சியளிக்கிறார். இந்த ஆலயம் கந்தசஷ்டி கவச பாடல் அரங்கேற்றம் செய்யப்பட்ட தலமாகும். வள்ளி-தெய்வானை இருவரும், முருகப்பெருமானை திருமணம் செய்வதற்காக, […]

நாம மலை ஸ்ரீநிவாசப் பெருமாள்:

நாம மலை ஸ்ரீநிவாசப் பெருமாள்: சேலம் மாவட்டம் நாம மலையில் அமைந்துள்ள இக்கோவிலில் பெருமாள் #ஸ்ரீநிவாசப் பெருமாளாக அருள்பாலிக்கிறார். இவர் தாயார் ஸ்ரீதேவி-பூதேவி ஆகியோருடன் அழகுறக் காட்சி தருவது மிகச் சிறப்பாகும். நாம மலையில் மிகப்பெரிய அளவில் பாறைகளால் ஆன குளம் போன்ற ‘#பாலி’ ஒன்று காணப்படுகிறது. இந்த பாலியின் தீர்த்த நீர் அதிகளவு அடர்த்திகொண்டதாம். இதில், ராமனும் சீதையும் நீராடியதாக நம்பிக்கை. அதேபோல் அடிவாரத்தில் கிணறு ஒன்று உள்ளது. பெருமாளைத் தரிசிக்கும்போது, இந்தக் கிணற்று நீரை […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by