ஆசையும், பேராசையும்…

ஸ்ரீ நாம் குறிப்பிட்ட ஓரிடத்திற்கு செல்வதற்கு பஸ்ஸிலோ அல்லது BMW காரிலோ பயணம் மேற்கொண்டாலும் சாலை ஒரே சாலை தான்… நாம் குறிப்பிட்ட ஓரிடத்திற்கு செல்வதற்கு விமானத்தில் அந்த  விமானத்தின் முதல் வகுப்பிலோ அல்லது அந்த விமானத்தின் சாதாரண வகுப்பிலோ சென்றாலும் நாம் போக வேண்டிய இடம் ஒரே இடம் தான்…. நாம் நேரத்தை பார்ப்பதற்கு 50 ரூபாய் கைகடிகாரம் கட்டியிருந்தாலும், 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கைகடிகாரம் கட்டி இருந்தாலும் ஒரே  நேரத்தை தான் 2 கைகடிகாரங்களும் காண்பிக்க போகின்றன. நாம் ஆசைப்பட்டவாறு சுகபோகமாக வாழ்வது தவறில்லை. ஆனால்  ஆசை பேராசையாக மாறாத வரைக்கும் எதுவும் பிரச்சினையில்லை.  காரணம் ஆசைகளை அடைய முடியும் ஆனால் கண்டிப்பாக  பேராசைகளை அடைய முடியாது. நம்மில் பெரும்பாலோனோர் ஆசைக்கும், பேராசைக்கும் அர்த்தம்  தெரியாமலேயே வளர ஆரம்பிப்பதற்கு முன்பே வளர்ந்து முடிந்த  திருப்தியுடன் வாழ்ந்து முடிந்துவிடுகின்றோம். எனக்கு தெரிந்த வரை  படித்த பெரியவர்களுக்குமே இதன் முழு அர்த்தம் புரியாத போது,  30 வயதே நிரம்பிய ஒரு பெண் எனக்கு நான்கு வருடங்களுக்கு  முன் அதன் முழு  அர்த்தத்தை புரிய வைத்தாள். இன்னும் சில தினங்களில் வாஸ்து பயிற்சி வகுப்பு  I – க்கு  வருபவர்களுடன் சேர்ந்து அந்த பெண்ணை சந்திக்க இருக்கின்றேன்.  நாங்கள் அந்த பெண்ணை  சந்தித்தபின் கடிதத்தில் சொல்லப்படாத முழு விவரத்தையும் நல்லதொரு தருணத்தில் உங்கள் அனைவருக்கும்  தெரிவிப்பேன்.   திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்; தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம் ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!   வாழ்க வளமுடன் […]

வெற்றிக்கு காரணம் மனசு!

ஒரு இளைஞனுக்கு மகானாக வேண்டுமென்ற ஆசை எழுந்தது. என்ன செய்தால் மகான் ஆகலாம் என யோசித்தான். ஒரு மகானிடமே கேட்டுவிட்டால், தன் கேள்விக்கு பதில் கிடைத்து விடுமென ஒரு சிறந்த மகானை நாடிப் போனான். காவியும், பட்டையுமாய் அமர்ந்திருந்த அவரிடம்,””சுவாமி! உங்களை மகான் என்று ஊரே புகழ்கிறது. உங்களது இந்த நிலைக்கு காரணம் என்ன?” என்று கேட்டான். “”உண்ணுகிறேன், உறங்குகிறேன், தியானம் செய்கிறேன்,” என்றார் அவர். இளைஞன் சிரித்து விட்டான். “”ஏன் சாமி! இதைத்தான் ஊரில் எல்லாரும் […]

கடிதம் – 28 – வேரும், வெந்நீரும்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… கொடுப்பவனுக்கு என்றுமே கொண்டாட்டம்; கொடுக்காதவனுக்கு நித்தம் திண்டாட்டம் என்று சென்ற கடிதத்தில் கூறி இருந்தேன். அடுத்தவர்களுக்கு கொடுக்காமல் தனக்கும், தன் குடும்பத்திற்கு மட்டும் என வாழ்ந்தவர்களின் கதையை நீங்கள் புரிந்து கொண்டால் தான் வாழ்க்கையில் நாம் நம்மை யாரோடும் ஒப்பிடாமல், ஒப்பிட்டு வீணாக போகாமல், தவறு எதுவும் செய்யாமல் நமக்கென்று ஓர் நல்ல வாழ்க்கையை […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by