ஒரு இடத்தில் பூஜை அறையை எங்கு எப்படி அமைக்க வேண்டும்?

ஒரு இடத்தில் பூஜை அறையை கிழக்கு பார்த்து அமைக்க வேண்டும். தென்மேற்கு மற்றும் வடகிழக்கு மூலையில் கண்டிப்பாக அமைக்க கூடாது. சுவற்றில் பூஜை அறையை அமைத்தால் மனிதர்களின் கால் மிதி படாது என்பதால் படத்தில் உள்ள படி அமைப்பது சாலச்சிறந்தது.

ஒரு வீட்டில் கட்டிட வேலை நடைபெறும் போது அந்த வீட்டின் வடகிழக்கு மூலையில் கட்டிட வேலைக்கான பொருட்களை வைக்கலாமா?

ஒரு வீட்டில் கட்டிட வேலை நடைபெறும் போது அந்த வீட்டின் வடகிழக்கு மூலையில் கட்டிட வேலைக்கான பொருட்களை கண்டிப்பாக வைக்க கூடாது.

நான் வாஸ்து படி வீடு கட்டி கொண்டு இருக்கின்றேன். எனது வீட்டின் தென்மேற்கு வெளிப்பகுதியில் பக்கத்து மனைக்குரிய கிணறு உள்ளது. இது சரியா?

வாஸ்து படி நீங்கள் வீடு கட்டினாலும், உங்கள் வீட்டின் தென்மேற்கு வெளிப்பகுதியில் பக்கத்து மனைக்குரிய கிணறு இருப்பது தவறு. இது சரி செய்ய முடியாத பரிகாரம் அற்ற பிரச்சினை. படித்தில் உள்ள வீடு இருக்கும் இடம்: ஆலடிப்பட்டி, திருநெல்வேலி

Open chat
1
Hello,
Can I help You?
Powered by