March 01 2018 0Comment

பூலாநந்தீஸ்வரர் கோயில்:

பூலாநந்தீஸ்வரர் கோயில்:

பொதுவாக ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு தனிச் சிறப்பு இருக்கும். அதே
போல தான் தேனி மாவட்டம் சின்னமனூரில் அமைந்துள்ள பூலாநந்தீஸ்வரர் திருக்கோவிலிலும்
பல ஆச்சரியமான தகவல் உள்ளது.

சின்னமனூர் பூலாநந்தீசுவரர் கோயில் என்பது தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்திலிருக்கும் சின்னமனூர்
எனும் ஊரில் அமைந்திருக்கும் சிவாலயமாகும்.

இந்த சிவாலயம் 1000 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்தாகும். உயர்ந்த சிவத்தலம் எது? என்று கேட்ட நைமிசாரண்ய முனிவர்களுக்கு சூதமா முனிவர், “பதினெண் புராணங்களில் ஒன்றான கந்த புராணத்தில் சங்கர சங்கிதையில் கூறிய சிவத்தலங்களில் சிறந்த தலம் பூலாவனமாகும்” என்று சின்னமனூர் பூலாநந்தீசுவரர் கோயில் குறித்து குறிப்பிட்டிருக்கிறார்.

எப்பொழுதும் வியர்க்கும் அம்மன் :

இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் அம்பாளின் திருநாமம் சிவகாமி அம்மன் என்பதாகும். இங்கிருக்கும் அம்மனுக்கு முகம் எப்பொழும் வியர்த்துக் கொண்டே இருக்கிறது. அர்ச்சகர்கள் எவ்வளவோ தடவை அம்மனுக்கு அலங்காரங்கள் செய்தாலும் முகம் மட்டும் வியர்த்தபடியே இருப்பது அதிசயம்.

அளவுக்கு அளவான லிங்க காட்சி :

பார்க்கிறவர்களின் பார்வை எந்த அளவுக்கு உயரமோ அதே அளவு உயரமாக லிங்கம் காட்சி தரும் அதிசயத்தை காணலாம். இவ்வூரில் பிறப்பவர்களுக்கு முக்தி தரும் சிறப்புடைய சிவதலம். லிங்கம்
வெட்டுப் பட்ட நிலையில் உள்ளது. மன்னன் ஆலிங்கனம் செய்த அடையாளமாக இப்போதும் லிங்கத்தின் மீது மன்னனின் மார்புக் கவசத் தடம் இருக்கிறது.

கல்லாக மாறும் எலும்புகள் :

இவ்வூரில் இறப்பவர்களின் எலும்புகள் சுரபி நதியில் விழுந்தால் கல்லாக மாறிவிடும் என்ற ஐதீகம் உள்ளது.

பூ நடுவில் லிங்கம் :

இங்குள்ள மரத்தில் நாகலிங்க பூ பூக்கிறது. இப்பூவின் நடுவில் லிங்கம் போன்றும் அதற்கு ஆதிஷேசன் போல் குடையாக லிங்கத்தின் மீது இருப்பது அதிசயமாக உள்ளது.

இறைவனின் விஸ்வரூபத்தைக் கண்டு அரசன் திகைத்து நிற்க, அரசனின் உடல் அளவு உருவத்தை எடுத்து நின்ற பூலாநந்தீஸ்வரர், சிவகாமி அம்மையுடன் உடனுறையும் ஆலயம் தேனி மாவட்டத்தில் சின்னமனூரில் அமைந்துள்ளது.

அரசன் இராசசிம்ம பாண்டியன், குறுவடிவம் எடுத்து நின்ற சிவபெருமானை ஆனந்தத்தில் ஆரத்தழுவினான். முகம் புதைத்து அழுதான்.

சிவலிங்கத்தில் அரசனுடைய முகமண்டலமும், மார்பில் அணிந்திருந்த ஆரமும் அவனது கைக்கடங்களும் தன் திருமேனியின் பதியும் வண்ணம் குழைந்து அருளினார் இறைவன். அந்த அடையாளங்கள் இன்றைக்கும் மூலவரின் மேனியில் தெரிவதாகக் கூறப்படுகிறது.

சிவபெருமாள் பூலா ஆரண்யத்தில் இருந்தமையால் பூலோவணேசா மற்றும் பூலாநந்தீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இக்கோவிலில் பூலா மரம் தல விருட்சமாக உள்ளது.

மூலஸ்தனத்தில் நின்று சாமி தரிசனம் செய்யும்போது எந்த இடத்தில் நின்று நாம் வணங்கினாலும் நமது அளவுக்கு அவர் காட்சி அளிப்பார். அதனால் மூலவரை அளவுக்கு அளவானவர் என்றும் ஆணவத்தை அழிப்பவர் எனவும் பக்தர்கள் நம்புகிறார்கள்.

Share this:

Write a Reply or Comment

four × four =