வாஸ்து – எனக்கு கொடுத்த அற்புத வரங்கள் – 1

ஸ்ரீ

வாஸ்து – எனக்கு கொடுத்த அற்புத வரங்கள்சபரி தன்னை தாயாக்கி கடவுளை குழந்தையாக பார்த்தாள்…

மீரா தன்னை காதலியாக்கி கடவுளை காதலனாக பார்த்தாள்…

ஆண்டாள் மட்டும் தான் தன்னை மனைவியாக்கி கடவுளை கணவனாக பார்த்தாள்…

அந்த வகையில் அரங்கனையே தனதாக்கி கொண்ட ஆண்டாளுடைய அன்பின் அளவு அளவிடமுடியாதது. இதனால் தான் என்னவோ ஒவ்வொரு முறை ஆண்டாள் தாயாரை பார்க்கும் போதும் பார்க்கும் அந்த நொடியே இறப்பை தழுவ வேண்டும் என்கின்ற எண்ணம் என் மனம் முழுவதும் வியாபிக்கும். ஆண்டாளை தரிசனம் செய்யும் அந்நேரத்தில் ஆண்டாளைத் தவிர வேறு சிந்தனை தலை தூக்காது. எனக்கு இது கொடு, அது கொடு என்று கேட்கத் தோன்றாது. நிறைவோடு இப்போது நானிருக்கின்றேன். எனக்கு என்ன கொடுத்தாளோ அத்தனைக்கும் நன்றி. எனக்கு இது போதும் இந்த ஜென்மத்தில் என்று மனம் சொல்வதை புத்தி ஆமோதிக்கும். இது அத்தனையும் ஒரு நொடி ஆரம்பித்து அந்த நொடி முடிவதற்குள் வந்து போய்விடும். இந்த  உண்மையை உவமை கொண்டு  கூறாமல் உண்மையாகத்தானே கூற முடியும்.

அந்த வகையில் என்னுடைய இந்த எண்ணம் சரியா, தவறா என்று எனக்குத் தெரியாது.எனக்கு தெரிந்து நான் பார்க்கும் கோணமே சரியா, தவறா என்று தெரியாத சூழ்நிலையில் நான் பார்க்கும் கோணத்திலேயே ஆண்டாளை பார்த்தவர்கள் / பார்த்து கொண்டு இருப்பவர்கள் உண்டு….

இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமானால் என்னைவிட அதிகமாக ஆண்டாளை உணர்ந்தவர்களும் உண்டு…

அப்படி உணர்ந்த ஒரு கணவன் – மனைவி. மனைவி இரண்டாம் குழந்தைக்காக கருத்தரித்து இருக்கிறாளா, இல்லையா என்பதை பார்க்க போவதற்கு முன்னதாக எனக்கு போன் செய்து சொல்லிவிட்டு போனார்கள். (சொந்த அப்பா, அம்மாவிற்கு கூட மருத்துவமனைக்கு போய் விட்டு வந்தபின் தான் தன் மனைவி கருத்தரித்த விஷயத்தை மற்றவர்களிடம் சொன்னார் இந்த பெண்ணின் கணவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது)

பின் குழந்தை பிறந்தவுடன் தகவல் முதல் ஆளாக எனக்கு சொல்லப்பட்டது.

அதேபோல் பிரசவத்திற்கு பின் கண் திறந்த மனைவி தன் கணவரிடம் கேட்ட முதல் விஷயம், “ஆண்டாள் அண்ணனிடம் சொல்லி விட்டீர்களா?”

இதை அந்த பெண்ணின் கணவர் என்னிடம் சொல்ல கேட்டபோது நெகிழ்ந்து போய் விட்டேன்.என்னை வாழ தூண்டும் வார்த்தைகளாக அந்த கேள்வியை எடுத்து கொண்டேன்.வெயிலுக்கு நிழலாக இருக்க போகின்றது  இந்த உறவுகள் என்றும் என்பதில் எனக்கு எப்போதும் ஐயமில்லை.

என்னுடைய வாழ்க்கையில் ஆண்டாளைத் தெரிவதற்கு முன் நிறைய அர்த்தமற்ற எதிர்பார்ப்புகள் இருந்தது. அதனால் நிறைய அர்த்தமுள்ள ஏமாற்றங்களும் கிடைத்தது. வாழ்க்கை அதன் வழக்கமான வட்டப்பாதையில் சுற்ற ஆரம்பித்த உடன் கீழே இருந்த நான் மேலே வர ஆரம்பித்தது ஆச்சரியமல்ல. மனிதர்களுடன், நல்ல இதயங்களுடன் நான் மேலே வர ஆரம்பித்திருக்கின்றேன் என்பது தான் மிகப் பெரிய ஆச்சரியம்.

அந்த வகையில் நான் சந்தித்த அபூர்வ மனிதர்களில் கோயம்புத்தூரை சேர்ந்த இந்த தம்பதியினரின் நட்பு என் பிராத்தனைக்காக ஆண்டாள் கொடுத்த சிறந்த வரங்களில் ஒன்றாகும் என்பதை சொல்வதில் நான் மிக பெருமையடைகின்றேன்.

திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;

தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

 

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Share this:

1 comment

  1. be happy
    we must live in present time with awareness, we have no past are future in our hand
    b.srinivasan

    Reply

Write a Reply or Comment

20 − 12 =