January 02 2018 0Comment

16.#திருவிண்ணகரம்

திருவைகுந்த விண்ணகரம் அல்லது வைகுந்த விண்ணகரம் என்பது #108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் #திருநாங்கூரில் அமைந்துள்ளது.

இக்கோயில் திருநாங்கூர் #பதினொரு திருப்பதிகளுள் ஒன்று. வைகுண்டமான பரமபதத்தில் சங்கு சக்கரங்களுடன் எழுந்தருளியுள்ள வைகுண்டநாதனே இந்த வைகுந்த விண்ணகரத்தில் உள்ளான் என்பதும் சிவனின் ருத்ர தாண்டவத்தை நிறுத்த பரமபத நாதன் புறப்பட்டு வர அவரைப் பின்பற்றி 10 பெருமாள்களும் இவ்விடம் (திருநாங்கூர்) வந்தனர் என்பதும் தொன்நம்பிக்கை. பரமபதத்தில் இருந்து வந்ததால் அதே தோற்றத்தில் இங்கும் காணப்படுகிறார்.

திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளின் இறைவர்களும் எழுந்தருளும் #தை அமாவாசைக்கு மறுநாளான திருநாங்கூர் கருடசேவைத் திருவிழாவுக்கு இவ்விறைவனும் எழுந்தருளுவார்.

வேறு பெயர்(கள்): வைகுந்தநாதப் பெருமாள் கோயில்

பெயர்: வைகுந்த விண்ணகரம்

மாவட்டம்: நாகப்பட்டினம்

அமைவு: திருநாங்கூர்

கோயில் தகவல்கள்:
கட்டடக்கலை வடிவமைப்பு: திராவிட கட்டிடக்கலை

இறைவன் :வைகுந்த நாதன்

இறைவி:வைகுந்த வல்லி

தீர்த்தம் :லட்சுமி புஷ்கரணி, உத்தங்கபுஷ்கரணி, விரஜா

விமானம் :அனந்த சத்ய வர்த்தக விமானம்

#தலவரலாறு :-

சுவேதகேது என்ற ஒரு மன்னன் மிகுந்த திருமால் பக்தனாக விளங்கி வந்தான். நீதி நெறி தவறாதவன். எல்லா உயிர்களிடத்தும் அன்பு கொண்டவன். தெய்வ பக்தி கொண்டவன். உலக நாடுகள் பலவற்றை ஆண்டு வந்தான். மன்னனுக்கும், அவனது மனைவி தமயந்தியுக்கும் மகா விஷ்ணுவை அவர் வசிக்கும் இடமான வைகுண்டத்திற்கு சென்று தரிசிக்க வேண்டுமென்ற நீண்ட நாள் ஆசையை நிறைவேற்ற தனது ஆட்சிக் கடமைகளை முடித்து விட்டு  தவம் செய்ய முடிவு செய்தான். சுற்றிலும் தீ வளர்த்து, சூரியனைப் பார்த்தபடி தீயின் நடுவில் நின்று இருவரும் மகா விஷ்ணுவை நோக்கி கடும் தவம் இருந்தார்கள்.

நீண்ட நாள் தவத்திற்க்குப்பின் தங்களது பூதவுடலை துறந்து வைகுண்டம் சென்ற அவர்களால், வைகுண்ட வாசனைக் காண முடியவில்லை. சுவேதகேதுவும், தமயந்தியும், தன் வாழ்நாளில் ஒரு முறை கூட பூமியில் எத்தகைய தானமும் செய்தது இல்லை. மேலும் பெருமாளின் பெயரில் ஒரு முறை கூட ஓமகுண்டம் வளத்தது இல்லை. எனவே அவர்களுக்கு வைகுண்ட நாதனை காணும் பாக்கியம் கிடைக்கவில்லை.

எனவே சுவேதகேதுவும், தமயந்தியும்  நாரதரின் அறிவுரைபடி ஐராவதேஸ்வரரை வழிபட்டு பெருமாளின் தரிசனம் கிடைக்க வேண்டினர். இவர்களது பக்திக்கு மகிழ்ந்த #சிவபெருமான், உதங்க முனிவருடனும் தம்பதிகளும் சேர்த்து தவமிருக்க வாய்ப்பளித்தார். நீண்ட காலத்திற்கு பின் மகாவிஷ்ணு, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக நால்வருக்கும் காட்சி தந்தார். அப்போது ஐராவதேஸ்வரரின் வேண்டுகோள் படியே, வைகுண்டநாதன் என்ற திருநாமத்துடன் இத்திருத்தலத்தில் அருள்பாலிக்கிறார்.

சிவனின் #ருத்ரதாண்டவத்தை நிறுத்தப் #பரமபத நாதன் புறப்பட்டு வர அவனைப் பின்பற்றிப் பத்துப் பெருமாள்களும் இவ்விடத்துக்கு (திருநாங்கூர்) வந்தனர்.

#வழித்தடம் :-

சீர்காழி பேருந்து நிலையத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இத்திருக்கோவில்.

Share this:

Write a Reply or Comment

one × five =