கவிஞர் வைரமுத்துவை கண்டித்து இன்று வி.எச்.பி., ஆர்ப்பாட்டம்

கவிஞர் வைரமுத்துவை கண்டித்து இன்று வி.எச்.பி., ஆர்ப்பாட்டம்

சென்னை : ‘உலகம் முழுதும் வழிபடக்கூடிய ராமரை அவதுாறாக பேசிய, கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வலியுறுத்தி, சென்னை பல்லவாரத்தில், இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்’ என, விஸ்வ ஹிந்து பரிஷத் வட தமிழக தலைவர் ஆண்டாள் சொக்கலிங்கம் அறிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

ஹிந்து கடவுள் களையும், சமயத்தையும் வைரமுத்து கேலி செய்து பேசி, ஹிந்துக்களின் மனங்களை புண்படுத்தி வருகிறார்.

ஏற்கனவே, ஆண்டாளை அவதுாறாக பேசி கடும் கண்டனத்திற்கு ஆளானார்.

உலகம் முழுதும் வழிபடக்கூடிய ராமரை அவதுாறாக, கம்பன் விழாவில் வைரமுத்து பேசியுள்ளார். கம்பருக்கும் இழுக்கு சேர்த்துள்ளார்.

வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும்; அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, இன்று பல்லாவரம் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா கண்டன உரை நிகழ்த்துகிறார்.

இவ்வாறு, ஆண்டாள் சொக்கலிங்கம் கூறியுள்ளார்.

https://www.dinamalar.com/news/tamil-nadu-district-news-chennai/vhp-protest-today-condemning-poet-vairamuthu/4005778

Share this:

Write a Reply or Comment

nineteen + 4 =