கல்யாண வெங்கட்ரமணர் திருக்கோவில்
சுவாமி : கல்யாண வெங்கட்ரமணர்.
அம்பாள் : ஸ்ரீ தேவி பூமிதேவி.
தலச்சிறப்பு :
இங்கு பெருமாள் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
தல வரலாறு :
சுசர்மா என்னும் பக்தன் தனது மனைவியுடன் புத்திர பாக்கியம் வேண்டி திருப்பதி யாத்திரை மேற்கொண்டான். யாத்திரையின் போது காவிரிக்கரையில் தங்கி இருந்தான்.
அப்போது நாரதர் கனவில் தோன்றி திருமக்கூடலூர் என்ற கூடுதுறைக்கு செல்லுங்கள். அங்கு உங்களைச் சிலர் வரவேற்பர் என்று சொன்னதைத் தொடர்ந்து அங்கு சென்றனர். அங்கு தச்சர்கள் இருந்தனர்.
அவர்கள் சுசர்மாவை வரவேற்று கல்வேலை நடக்கும் இம்மலைக்கு அழைத்துச் சென்ற போது மலையில் பிரகாசமான ஒளி ஒன்று கிளம்பியது.இதனையடுத்து பாறை பிளவுண்டு பெருமாள் காட்சி தந்தார்.
கேட்ட வரத்தையும் அருளையும் தந்தார். இவ்வாறு பெருமாள் இங்கு எழுந்தருளியுள்ளார். தவிர ஆதிசேசனுக்கும், வாயு பகவானுக்கும் நடந்த போட்டியில் சிதறிய திருவேங்கடமலையின் ஒரு பகுதிதான் தான்தோன்றிமலை என்றும் கூறப்படுகிறது.
இங்கு பெருமாள் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கே கல்யாண வெங்கட்ரமணர் திருக்கல்யாண வைபவம் மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது.
இந்த கோவில் 3000 ஆண்டுகள் பழமையான குடைவரைக் கோவிலாகும்.
இந்தக் கோவிலுக்கு தென்திருப்பதி என்ற சிறப்பு பெயரும் உண்டு.
இங்கே பக்தர்கள் அனைவரும் வேண்டிய அருளை தந்து கல்யாண வெங்கட்ரமணர் அருள்புரிந்து வருகிறார். இக்கோவில் கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
Share this: