April 15 2019 0Comment

ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி

ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி:
காஞ்சிபுரம் மாவட்டம் திருபோரூர் (OMR) செங்கற்பட்டு பட்டு சாலையில் உள்ள வட திருவானைக்கா என அழைக்கப்படும். செம்பாக்கத்தில் ஸ்ரீமத் ஓளஷத லலிதா மகா திரிபுரசுந்தரி ஸ்ரீசக்ரராஜ சூர்ண மகாமேரு ஸ்ரீபீடம் ஸ்ரீபாலா சந்நிதானத்தில் 9 அடி உயரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்ரீமத் ஓளஷத லலிதா மகா திரிபுரசுந்தரி அம்மன் சிலை உள்ளது.
அவள் நல்லவர்க்கு நடுவே விளையாடுவாள் வல்லவர்கெல்லாம் வல்லலளாய் ஆட்சி செய்வாள் அவளை விட அரியதான சூட்சமம் ஏது? என்கிறார் #கருவூரார் சித்தர் பெருமானார்.
பல சித்தர்கள் பூஜித்த பாலா திரிபுரசுந்தரி குழந்தை வடிவமாக பட்டு பாவடை சட்டையுடன் ரத்தினகரங்களுடன் நட்சத்திரங்களை பழிக்கும் முக்கித்தியுடன் பக்தர்களை வா வென்று தாயுள்ளத்துடன் அழைத்து அருள் பாலிக்கிறார். இந்த அம்பிகையை வணங்கினால் நேயற்ற வாழ்வு தருவாள் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை.
பிராத்தனைகள் நிறைவேறியதும் அம்பாளுக்கு பட்டுப் பாவடை சட்டை மற்றும் கொலுசு செலுத்துகின்றனர். மேலும் பள்ளியில் படிக்கும் 5 குழந்தைகளுக்கும் பட்டுப் பாவடை சட்டை மற்றும் கொலுசு கொடுத்து பிரசாதமாக தேனைக் கொடுக்கின்றனர்.
ஒரு சில அவரவர் வசதிற்கேற்ப தங்களின் நேர்த்திகடன் நிறைவேற்றுக் கொள்கின்றனர்.மேலும் செல்வ வளமும் கல்வி வேள்விகளில் சிறந்த ஞானம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
சித்தமெல்லாம் சிவ மயமாய் திளைத்திருந்த ஆதி சக்;தியின் அருளும் பூரணமாக தேவை என்பதை சித்தர்கள் உணர்ந்திருந்தனர். அத்தகையை ஆதிசக்தியின் அம்சம் தான் ஸ்ரீ பாலா தெய்வம் அவளையே போற்றி அகத்தியர்,போகர்,திருமூலர்,கெங்கனார்,கரூரார், போன்ற சித்தர்கள் வணங்கி பூஜித்தனர்.
இந்த அம்சம்ஒரு சின்னச்சிறிய பெண்ணின் அம்சம் என்பது ஆச்சிரியமான ஒன்று நம்மில் பலரும் அறிந்திராத ஒன்று தமிழில் வாலை வாலாம்பிகை என்றும் சித்தாந்தம் வணங்குகிறது. சமஸ்கிருத்தில் பாலா என்றும் வேதாந்தம் இந்த குழந்தை தெய்வத்தை வணங்குகிறது.
சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் முழுவதும் மூலிகைகளால் உருவாக்கப்பட்ட தெய்வச்சிலைகள் வழிபாடு வழகத்தில் இருந்து வந்தது. தறபோது பல வருடங்களுக்குபிறகு காஞ்சி மாவட்டம் திருப்போரூர் வட்டத்தில் (ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் ஆலயம் அருகில்) ஸ்ரீ பீடம் ஸ்ரீ பாலா சமஸ்தானம் ஸ்ரீ சக்ரராஜ பூர்ண மகாமேரு திருச் சந்நிதானத்தில் 9 அடி உயரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒளஷத லலிதா மகா திரிபுரசுந்தரி அம்மன் சிலை.
இந்த திருமேனி பல மூலிகைகள் மரப்பிசின்மரப்பட்டைகள் மற்றும் வேர்களிலிருந்து தயாரிக்கப்பட்ட கசாயங்கள் கலவைக் கொண்டும் எண்ணற்ற பாணலிங்கங்கள்வலம்புரி சங்குகள்நவரத்தினங்கள்நமது உடம்பில்லுள்ள நாடிநரம்புகளை குறிக்கும் விதமாக வெள்ளிக்கம்பிகள் முதலியன உச்சந்தலை முதல் பாதம் வரை பதிக்கப்பட்டும் வளர்பிறை காலங்களில் மருந்து மாற்றப்பட்டு சுமார் ஏழரை ஆண்டுகள் உழழைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது போற்றுதலுக்கு மட்டுமில்லாமல் வியப்புக்கும் உரிய தகவலாகும்.
தாந்ரீக முறையில் இந்த அம்பிகையந்திரம்தந்திரம்மந்திரம்அஸ்திரம்ஸஸ்த்திரம என்ற முறையில் அமையப்பெற்றவளாவாள்.
நின்ற கோலத்தில்’அவசர” ஸ்திதி ஸ்தானத்தில் அங்குசம்பாசம்இரண்டும் பிரயோகத்தில் இருக்ககீழ்க்கையில் மலர் (புஷ்பபாணம்) மற்றும் கரும்பும் ஏந்தி அம்பிகை மகா சௌத்தரய ரூபத்துடன் அருள்பாலிக்கின்றாள். அம்பிகைக்கு முதல் மாடியில் சந்நிதி பிரதிஷ்டையாகிள்ளது.
கீழ்த்தளத்தில் ஸ்ரீ சக்ரபிரதீஷ்டையுடன் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரியை தரிசிக்கலாம்.
மூலிகை அம்மனுக்கு அபிஷேகம் கிடையாது. மூலிகை மற்றும் அஷ்டகந்ததால் உருவாக்கபட்ட லேபனம் (தைலம்) குறிப்பிட்ட சில காலங்களில் பூசப்படும் என்றும் மாதம் ஒருமுறை மட்டும் பிரத்யேகமாக தறியில் நெய்யப்பட்ட 45 முழுபுடவை அணி விக்கப்படும் என்று பீடத்தின் ஸ்தாபகர் தெரிவிக்கின்றார். தினசரி பாதபூஜை உண்டு.
நோயற்ற வாழ்வு பெறுவதே இந்த அம்பிகையின் தரிசன பலனாகக் கூறப்படுகிறது. சிதம்பரத்ததை நடராஜ சபை என்றும் ஸ்ரீ ரங்கத்தை அரங்கம் என்றும் அழைப்பதுபோல் இங்கு அம்பிகை கோயில் கொண்டிருக்கும்.
ஆலயம் ஸ்ரீ சக்ரசபை என்று போற்றப்படுகிறது. ஏனென்றால் இங்கு அம்பிகை தனது பரிவாரங்களுடன் தர்பாரில் கோலோச்சி பரபாலனம் செய்வதாக ஐதீகம்.
Share this:

Write a Reply or Comment

eighteen − 12 =