உன்னைப் போல் தான் அவனுக்கும்…

வாஸ்து - உன்னைப் போல் தான் அவனுக்கும்...ஒரு சமயம் பிரம்மதேவர் நாரதரிடம், “”நாரதா! உலகில் நீ பார்த்தவற்றுள் எந்த விஷயத்தை எண்ணி மிகுந்த ஆச்சரியம் கொண்டாய்?” என்று கேட்டார்.

“” தந்தையே! நான் கண்டு ஆச்சரியப்பட்டதென்றால், இறந்து கொண்டிருப்பவர்கள் இறந்து போனவர்களைப் பார்த்து அழுதுவது தான்!” என்றார் நாரதர். அடுத்து, “” நீ எண்ணி வியந்த வேறொரு விஷயம் இருந்தால் அதையும் சொல்லேன்!” என்றார் பிரம்மா.

“”மனிதமனம் படுத்தும் பாடு இருக்கிறதே” என்று அதை எண்ணி வியந்திருக்கிறேன். உலகில் உள்ள எல்லோருக்கும் பாவ, புண்ணியம் பற்றிய சிந்தனைகள் எழாமல் இருப்பதில்லை. மக்கள் பாவச்செயல்களைச் செய்கிறார்கள். அதற்கான விளைவுகளையும் பெற்று துன்புறுகிறார்கள். புண்ணியங்களைச் செய்து நன்மைகளை அடைந்தாலும் நல்ல செயல்களைச் செய்யத் தயங்குகிறார்கள். பண்பான பேச்சினை விரும்புகிறார்கள். ஆனால், பிறர் மீது கோபம் கொள்கிறார்கள். தன்னிடம் மற்றவர்கள் உண்மையோடு நடந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டாலும் உண்மையை விட்டு விலகி வெகுதூரத்தில் நிற்கிறார்கள். இப்படி மனித மனத்தின் கோணல்களை நினைத்து வியந்திருக்கிறேன்,”என்றார் நாரதர். “”இதற்கெல்லாம் தீர்வு ஏதாவது சொல்லேன்?”என்றார் பிரம்மா.

“”தந்தையே! தனக்கு ஏற்படும் துன்பம் போலத்தானே மற்றவர்களுக்கும் அதன் வலி இருக்கும் என்பதை எல்லா மனிதர்களும் உணர வேண்டும். அதன் பின் அவர்களுக்கு எந்த தீங்கும் நேராது,” என்றார்.

Courtesy: Dinamalar

Share this:

Write a Reply or Comment

12 + twenty =