April 20 2019 0Comment

கோட்டை முனியப்பன் திருக்கோயில்: 

கோட்டை முனியப்பன் திருக்கோயில்:
வெட்டவெளியில் வானம் பார்த்து வரிசையாக குத்தப்பட்டிருக்கும் வேல்கம்புகள், விண் ஒளியை மறைத்து கிளைபரப்பி நிற்கும் வயது மறந்த அரச விருட்சம். அருகில் கோட்டை முனியப்ப சுவாமி அருவமாகக் காவல் இருக்கிறார் என்பதுதான்.
இந்த ஊரில் எந்த வீட்டில் விசேஷம் நடந்தாலும் முதல் மரியாதை முனியப்பசாமிக்குத் தான். அவர் உத்தரவு தந்த பின்பு தான் காரியத்தை துவங்குகிறார்கள்.
அந்த ஊரில் குழந்தை பிறந்தவுடன் முனியப்ப சாமியின் பெயரையே முதலில் கூறுகிறார்கள். குழந்தைகளுக்கு முதல் முடியிறக்குவது முனியப்ப சுவாமிக்குத்தான்.
வருடத்திற்கு ஒரு முறை ஊரில் அனைவரும் ஒன்றுகூடி திருவிழா நடத்துகிறார்கள். திருவிழாவின் போது பால்குடம் எடுத்து பொங்கல் வைத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
கோட்டை முனியப்பருக்கு கோட்டை ஏதும் இல்லாவிட்டாலும் சிறு கோயிலில் அமைந்திருப்பதே ஊருக்கு கோட்டை அமைந்தது போல் காவலாக உள்ளது என்று பக்தர்கள் கூறுகிறார்கள்.
#சிறப்பம்சங்கள் :
வெட்டவெளியில் வானம் பார்த்து வரிசையாக குத்தப்பட்டிருக்கும் வேல்கம்புகள், விண் ஒளியை மறைத்து கிளைபரப்பி நிற்கும் வயது மறந்த அரச விருட்சம். அருகில் கோட்டை முனியப்ப சுவாமி அருவமாகக் #காவல் இருக்கிறார் என்பதுதான்.
Share this:

Write a Reply or Comment

fourteen − three =