July 01 2018 0Comment

தந்தி மாரியம்மன் திருக்கோயில்:

தந்தி மாரியம்மன் திருக்கோயில்

மூலவர் – தந்தி மாரியம்மன்

பழமை – 500 வருடங்களுக்கு முன்

ஊர் – குன்னூர்

மாவட்டம் – நீலகிரி

மாநிலம் – தமிழ்நாடு

அடர்ந்த வனமாக இருந்த இப்பகுதியை சீரமைத்த ஆங்கிலேயர்கள் குதிரை லாயங்களையும், சாரட் வண்டி கூடாரங்களையும் அமைத்தனர். இவற்றைக் கண்காணிக்க காவலாளிகள் நியமிக்கப்பட்டனர்.

ஒரு முறை, லாயக்காவலாளி ஒருவர் இரவு நேரத்தில் வெளியே வந்தபோது, ஒரு மரத்தில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் வெள்ளையாக இருந்த உருவம் ஒன்று அமர்ந்து ஆடுவதைக் கண்டார். 

கூர்ந்து நோக்கிய போது, சிறுமி ஒருத்தி பட்டாடையும், கண்களைப் பறிக்கும் நகைகளையும் அணிந்திருப்பதைப் பார்த்தார்.

மறுநாள், இத்தகவலை மற்றவர்களிடம் கூறினார். ஆனால், யாரும் நம்பவில்லை. மறுநாளும் இரவில், அவர் அதே காட்சியைக்கண்டு அதிர்ந்து, மறுபடியும் மற்றவர்களிடம் கூறினார். 

அவர் கூறியதை உறுதி செய்ய விரும்பிய அனைவரும் அன்றிரவில் குதிரை லாயத்தில் தங்கினர்.

காவலாளி கூறியது உண்மை என அறிந்து கொண்டனர். அன்று இரவில், ஒருவரின் கனவில் மாரியம்மன் தோன்றி அந்த மரத்தின் அடியில், சிறுமி போல காட்சி தந்த இடத்தில், தான் சுயம்புவாக வீற்றிருப்பதாக கூறினாள். அதன்பின், அம்பிகைக்கு கோயில் எழுப்பி வழிபட்டனர்.

அருள்மிகு தந்தி மாரியம்மன் திருக்கோயில், குன்னூர்– 643 101, நீலகிரி மாவட்டம்.

Share this:

Write a Reply or Comment

six + 17 =