March 01 2018 0Comment

திரியம்பகேஸ்வரர் :

திரியம்பகேஸ்வரர் :

கருவறையில் வற்றாத நீர் ஊற்று!

நாட்டில் உள்ள கோவில்கள் ஒவ்வொன்றிலும் ஒரு தனி சிறப்பும் அதிசயங்களும் இருக்கும்.

இந்தியாவில் உள்ள பல கோவில்களில் நாம் பலவிதமான அதிசயங்களை கண்டிருப்போம். அந்த வகையில் திரியம்பகேஸ்வரர் என்னும் சிவன் கோவிலில் பல்லாயிரம் ஆண்டுகளாக அனைவரையும் வியப்பில் ஆழ்த்தக்கூடிய ஒரு நீரூற்று அதிசயம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. வாருங்கள் இது குறித்து விரிவாக பார்ப்போம்.

அந்த வகையில் ஒரு திருத்தலத்தில் சுயம்பு லிங்கம் உள்ள கருவறையில் எப்பொழுதும் நீர் ஊறிக் கொண்டே இருக்கும் அருள்மிகு திரியம்பகேஸ்வரர் திருக்கோவில்..

இந்த கோவில் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டம் திரியம்பகத்தில் உள்ளது.

இத்தலம் இந்தியாவில் உள்ள சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கங்களுள் இதுவும் ஒன்று ஆகும்.

திரியம்பகேஸ்வரர் ஆலயத்தில் சுயம்பு லிங்கமாக வீற்றிருக்கும் மூன்று சிறிய லிங்கங்கள் ஒரே ஆவுடையாரில் உள்ளன.

அந்த சுயம்பு லிங்கத்தில் இருந்து நீர் எப்போதும் ஊறிக் கொண்டேயிருப்பது அதிசயமான நிகழ்வாகும்.

இத்தலம் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2500 அடி உயரத்தில் மலை மீது அமைந்துள்ள ஆலயம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் திருத்தலத்தில் உள்ள பிரம்மகிரியில் இருந்துதான் கோதாவரி நதி உற்பத்தியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரம்மகிரி எனப்படும் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த கோவில் கருங்கற்களினால் கட்டப்பட்டுள்ள கோவிலாகும்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் வாழ்ந்த கௌதம ரிஷி என்னும் முனிவர் தன் மனைவியோடு இருந்த கடுமையான தவத்தின் பயனாக இங்கு சிவன் தன் ஜடாமுடியில் இருந்த கங்கையை அவிழ்த்துவிட்டார் என்றும் அதுவே இங்கு எப்போதும் நீரூற்றாக ஓடிக்கொன்றிருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

அதோடு ரிஷியின் வேண்டுகோளுக்கு இணங்க சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய முமூவரும் சுயம்பு வடிவில் இங்கு தங்கியதாகவும் அதனாலேயே இங்கு மூன்று லிங்கங்கள் உள்ளன என்றும் கூறப்படுகிறது.

ஆன்மீக ரீதியாக பல காரணங்கள் கூறப்பட்டாலும், அறிவியல் ரீதியாக, இங்கு நடக்கும் அதிசயத்திற்கான காரணங்கள் இதுவரை புலப்படவில்லை. அறிவியலால் அறிய முடியாது பல ரகசியங்கள் நம் நாட்டில் பல உண்டு என்பதற்கான ஒரு சிறந்த சான்று இந்த நீரூற்று அபிஷேகம் என்றே கூறலாம்.

அம்மலையில் கௌதமர் வாழ்ந்த குகையும் அவரால் உண்டாக்கப்பட்ட புனித தீர்த்தமும் உள்ளன. கௌதமர் வழிபட்ட 1008 லிங்கங்களும் அக்குகையில் இருக்கின்றன.

இங்கு சிவனே மலையாக இருப்பதாக ஐதீகம். கோதாவதி நதி உற்பத்தியாகும் இடம் இது என்று கூறப்படுகிறது.

Share this:

Write a Reply or Comment

five + thirteen =