December 28 2017 0Comment

திருக்கண்ணமங்கை கோவில்:

தமிழ்நாட்டில் #திருவாரூர் மாவட்டத்திலுள்ள, திருக்கண்ணமங்கை என்னும் ஊரில் அமைந்துள்ள விஷ்ணு கோவிலாகும். இக்கோவில் 108 திவ்யதேசங்களுள் ஒன்று.மேலும் இது #பஞ்சகிருஷ்ண தலங்களிலும் ஒன்றாகும். 12 ஆழ்வார்கள் பாடிய பாசுரங்களை நாலாயிர திவ்யப் பிரபந்தமாகத் தொகுத்தளித்த நாதமுனிகளின் மாணவர் திருக்கண்ண மங்கை ஆண்டாள், பெருமாளை வழிப்பட்டு வாழ்ந்த தலம் என்பதால் இவ்வூர் அவரது பெயரால் வழங்கப்படுகிறது.

புராண பெயர்(கள்): லட்சுமி வனம், ஸப்தாம்ருத ஷேத்ரம்

பெயர்: #பக்தவத்சலப்பெருமாள் திருக்கோவில், திருக்கண்ணமங்கை

ஊர்: திருக்கண்ணமங்கை

மாவட்டம்: திருவாரூர்

மூலவர்: பக்தவத்சலப் பெருமாள், பத்தராவிப் பெருமாள் (விஷ்ணு நின்றகோலம்,பிரமாண்ட திருவுருவம்)

உற்சவர்: பெரும் புறக் கடல்

தாயார்: கண்ணமங்கை நாயகி

உற்சவர் தாயார்: அபிஷேகவல்லி

தீர்த்தம்: தர்சன புஷ்கரணி

பிரத்யட்சம்: வருணபகவான், ரோமச மகரிஷி, முப்பத்து முக்கோடி தேவர்கள்.

பாடல் வகை: நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்

மங்களாசாசனம் செய்தவர்கள்: திருமங்கையாழ்வார்

விமானம்:உட்பல விமானம்.

தல விருட்சம்: மகிழம்

தீர்த்தங்கள்:தர்சண புஷ்கரணி தீர்த்தம்

திருவிழா:
ஏப்ரல்-மே மாதத்தில் நடைபெறும் சித்ரா பௌர்ணமித் திருவிழா, இத்தலத்தில் நடைபெறும் முக்கிய திருவிழா.

தல வரலாறு:

#மகாலட்சுமி தவம் செய்து பக்தவத்சலப் பெருமாளைக் கைப்பிடித்த தலம் என்பதால் இவ்விடம் லட்சுமி வனம் என்றும் அழைக்கப்படுகிறது. சாபத்தால் துன்புற்ற சந்திரன் இங்கமைந்த #புஷ்கரணியில் நீராடி சாபவிமோசனம் பெற்றான் என்பது தொன்நம்பிக்கை.

#திருமணக் கோலம் தினசரி காண முனிவர்கள் தேனீ வடிவில் உள்ளனர்.

#பாத்ம புராணம் 5வது காண்டத்தில் 81 முதல் 87 முடிய உள்ள 7 அத்தியாயங்களில் இத்திருத்தலம் குறித்து கூறப்படுகின்றது.

#சப்தமிர்த தலம் :

இத்தலத்தில்,விமானம்,மண்டபம்,வனம்,
ஆறு,கோவில் அமைவிடம்,ஊர், புஷ்கரணி ஆகிய ஏழும் மரணமில்லா வாழ்வைத் தரும் அமிர்தத்தின் சிறப்பைக் கொண்டமைந்துள்ளதால், இத்தலம் சப்தமிர்த தலம் என அழைக்கப்படுகிறது.

தமிழ்நாட்டிலுள்ள பஞ்சகிருஷ்ண தலங்களில் இத்தலமும் ஒன்று. ஏனைய நான்கு பஞ்சகிருஷ்ண தலங்கள் கபிஸ்தலம், திருக்கோவிலூர், திருக்கண்ணங்குடி, திருக்கண்ணபுரம் ஆகிய ஊர்களிலுள்ள பெருமாள் கோவில்கள் ஆகும்.

#அமைவிடம்

இக்கோவில் திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டத்திலுள்ள திருக்கண்ணமங்கை ஊரில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து சுமார் 25 மைல் தொலைவிலும், திருச்சேரையிலிருந்து சுமார் 15 மைல் தொலைவிலும் திருவாரூர் இரயில் நிலையத்திலிருந்து சுமார் 4 மைல் தொலைவிலும் அமைந்துள்ளது.

Share this:

Write a Reply or Comment

8 − 5 =