December 28 2020 0Comment

திருப்பாவை  பாடல் 10:

திருப்பாவை

பாடல் 10:

(கதவை திறக்க) நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்! மாற்றமும் தராரோ? வாசல் திறவாதார் நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால் போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும் தோற்றும் உனக்கே பெருந்துயில் தந்தானோ? ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே! தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.

விளக்கம் :

சென்ற பிறவியில் நாராயணனை எண்ணி விரதம் இருந்து அதன் பயனாக இப்பிறவியில் சொர்க்கத்தில் இருப்பது போன்று சுகம் பெற்றுக் கொண்டிருக்கும் அம்மையே! மாற்றம் ஏதும் வேண்டாமோ? இல்லத்தின் வாயிலை திறக்கவில்லை என்றாலும் பரவாயில்லை… பதில் உரைக்க மாட்டாயோ? நறுமணம் வீசும் துளசியை தலையில் அணிந்த நாராயணனை நாம் போற்றி பாடினால் அவன் நாம் மேற்கொள்ளும் விரதத்திற்கு ஏற்ற பலனை உடனே தருவான். நாராயணின் ராம அவதாரத்தில் தூக்கத்திற்கு உதாரணமாக சொல்லக்கூடிய கும்பகர்ணன் தோற்கடித்தது மட்டுமல்லாமல் அவனது தூக்கத்தையும் உனக்கே அளித்து விட்டார்களோ… சோம்பல் உடையவளே! கிடைப்பதற்கு அரிய அணிகலன் போன்றவளே…!! தெளிவாக துயில் கலைத்து கதவை திறப்பாயாக…!! என்று ஆண்டாள் அழைக்கிறாள்.

Share this:

Write a Reply or Comment

17 − 3 =