December 30 2019 1Comment

திருப்பாவை பாடல் 14

திருப்பாவை பாடல் 14:
உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய்! எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானை பாடலோர் எம்பாவாய்.
பொருள்:
எங்களை முன்னதாகவே வந்து எழுப்புவேன் என்று வீரம் பேசிய பெண்ணே! கொடுத்த வாக்கை மறந்ததற்காக வெட்கப்படாதவளே! உங்கள் வீட்டின் பின்வாசலிலுள்ள தோட்டத்து தடாகத்தில் செங்கழுநீர் மலர்கள் மலர்ந்து விட்டன. ஆம்பல் மலர்கள் தலை கவிழ்ந்தன. காவி உடையணிந்த துறவிகள் தங்கள் வெண்பற்கள் ஒளிவீச கோயில்களை நோக்கி, திருச்சங்கு முழக்கம் செய்வதற்காக சென்று கொண்டிருக்கின்றனர்.ஆனால், பெண்ணே! சங்கும் சக்கரமும் ஏந்திய பலமான கரங்களை உடையவனும், தாமரை போன்ற விரிந்த கண்களையுடையவனுமான கண்ணனைப் பாட இன்னும் நீ எழாமல் இருக்கிறாயே!
விளக்கம்:
கொடுத்த வாக்கை தவற விடவே கூடாது. வாக்கு கொடுப்பது மிக எளிது. அதைக் காப்பாற்ற முடியுமா என தெரிந்து பேச வேண்டும். வாக்கு கொடுத்து விட்டு பிறரை ஏமாற்றுபவர்கள், கொஞ்சம் கூட வெட்கமின்றித் திரிகிறார்களே என ஆண்டாள் வருந்துகிறாள். நாக்கு சரியானதை மட்டுமே பேச வேண்டும், சொன்னதைச் செய்ய வேண்டும் என்பது இப்பாடல் உணர்த்தும் கருத்து.
#பாசுரம் #பொருள் #விளக்கம் #ஆண்டாள் #திருப்பாவை #திருவெம்பாவை #மார்கழி #திங்கள் #Margazhi #December #Aandal #andal #thirupaavai #thiruvenbavai #sri_aandal_vastu
#ஸ்ரீ_ஆண்டாள்_வாஸ்து #vastushastram,#vastushastra,#vasthushastram,#about_consultant,#tamilvastu,#team,#vastu #vasthu,#sri_aandal_vastu #chockism
#ஆண்டாள்_பக்தர்கள்_பேரவை #Andal_Bakthargal_Peravai
#வாஸ்து, #உளவியல், #ஆன்மீகம்  #கலந்தாய்வு_கூட்டம் #Vasthu_Meet #Vasthu_QandA #Money_Attraction_Tips #apc #chennai #andal_p_chockalingam  #ஆண்டாள்_பி_சொக்கலிங்கம்
Share this:

1 comment

  1. Hello! This is my 1st comment here so I just wanted to give a quick shout
    out and say I genuinely enjoy reading your articles. Can you suggest
    any other blogs/websites/forums that go over the same
    subjects? Thanks!

    Reply

Write a Reply or Comment

8 + 10 =