June 27 2022 0Comment

மார்வாரி @ மார்வாடியும் – மதராஸியும்

மார்வாரி @ மார்வாடியும் – மதராஸியும்

பொதுவாக வட இந்தியர்கள் தென்னிந்தியாவிலிருந்து டெல்லி மற்றும் மும்பைக்கு வேலை செய்ய வரும் தமிழர்கள்,மலையாளிகள், தெலுங்கர்கள் மற்றும் கன்னடர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக மதராஸிகள் என்றே அழைப்பர்.

நாம் அனைவரும் திராவிட மொழிகள் பேசினாலும் நம்மிடையே உள்ள வேறுபாடுகளை அவர்கள் உணர மாட்டார்கள்.

அதைப்போலவே தமிழ் நாட்டில் வட இந்தியாவிலிருந்து வரும் அனைவரையும் நாம் சேட்டு/மார்வாடி/ வடக்கன் என்றே பொதுவாக அழைக்கின்றோம்.

தமிழகத்திற்கு வடமேற்கு இந்தியாவில் இருந்து ‌ வருபவர்கள் பெரும்பாலும் தொழில் அதிபர்கள், சிறு வணிகர்கள் ஆகவும்

வடக்கு கிழக்கு மற்றும் மத்திய மாநிலங்களிலிருந்து கடந்த 20 ஆண்டுகளில் வந்தவர்கள் பெரும்பாலும் படிக்காத உடல் உழைப்பு செய்யும் தொழிலாளர்கள் ஆகவும் உள்ளனர்.

நாமும் எல்லா வட இந்தியர்களையும் ஒன்றாக கருதக் கூடாது. அவர்களிடம் உள்ள வேறுபாடுகளை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்:

1.

மார்வாடிகள்

மார்வாடிகள் ராஜஸ்தானின் தென் மேற்கே உள்ள மார்வார் என்ற இடத்தில் இருந்து அதாவது தற்போது ஜோத்பூர் என்று அழைக்கப்படும் பகுதியிலிருந்து வந்தவர்கள்.

மார்வாரில் இருந்து வந்ததால் மார்வாடிகள் என்றே பெரும்பாலும் அழைக்கப்படுகிறார்கள்.

இதில் பாதி பேர் இந்துக்கள்

மீதி பேர் ஜெயின் என்று அழைக்கப்படும் சமனர்கள்.

தமிழ்நாட்டில் டால்மியா சிமெண்ட், இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் பெரிய நகை கடை முதலாளிகள் இவர்கள் தான்.

2).

பனியாக்கள்:

இவர்கள் பெரும்பாலும் குஜராத்திகள்.தமிழ்நாட்டில்
வாணிய செட்டியார் என்பதை போல
நகரத்தார் சமூகத்தை போல

இந்தியா மட்டுமின்றி திரைகடல் ஓடி உலகெங்கும் தொழில் துவங்கி
நல்ல தொழிலதிபர்கள் ஆக உள்ளனர்.

அம்பானி குழுமம்,
அதானி குழுமம் ,ஸ்டெர்லைட் நிறுவனம் மற்றும்
கோத்தாரி சுகர்ஸ் அனைத்தும் இவர்களுடையதுதான்.

3).

சிந்திகாரர்கள்:

இவர்கள் அனைவரும் இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது சிந்து மாகாணத்திலிருந்து அகதிகள் ஆக வந்த இந்துக்கள்.

முதலில் மும்பை க்கு அகதிகள் ஆக வந்தவர்கள் தற்போது இந்தியா முழுவதும் பரவி தொழில் அதிபர்கள் ஆக உள்ளனர்.சென்னை மற்றும் ஓசூரில் உள்ள அசோக் லேலண்ட் நிறுவனம், எண்ணூர் பவுண்டரிஸ் , டி மார்ட் அனைத்தும் இவர்களுடையதுதான்.

4).

பார்ஸிக்கள்:

இவர்கள் பாரசீக நாட்டில் இருந்து வந்தவர்கள்.அதாவது தற்போது ஈரான் என்று அழைக்கப்படும் பெர்சிய நாட்டில் இருந்து ஆறாம் நூற்றாண்டில் அரேபியா முஸ்லிம்களின் படையெடுப்பு
மற்றும் கட்டாய மதமாற்றத்திக்கு
அஞ்சி இந்தியாவிற்கு வந்தவர்கள்.

பாரசிகத்திலிருந்து வந்ததால் பார்ஸிக்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

டாடா குழுமம், கோத்ரேஜ் குழுமம், பாம்பே டையிங் மற்றும் பல நிறுவனங்கள் இவர்களுக்கு சொந்தமானது.

தமிழகத்தில் TCS,Titan Tanishq jewellary கண்ணன் தேவன் டீ எஸ்டேட், மாஞ்சோலை டீ எஸ்டேட் எல்லாம் இவர்களுடையது தான்.

எனவே வட இந்தியாவில் இருந்து வந்த அனைவரையும் நாம் ஒன்றாக கருதக் கூடாது.
சிலர் நமக்கு முதலாளியாகவும்
பலர் நம்மிடம் வேலை செய்பவர்கள் ஆகவும் இருக்கிறார்கள்.

எனவே இந்தி பேசும் அனைவரையும் பானி பூரி விற்பவர்கள், பான் பராக் வாயன் என ஏளனமாக நினைக்க வேண்டாம்.

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வட இந்தியர்களின் மூலதனமும், வட இந்திய தொழிலாளர்களின் உழைப்பும் இன்றியமையாதது.

என்னை வெட்டுங்கள்
என்று குளங்கள் கெஞ்சுகின்றது.

எங்களை தயவு செய்து வெட்டாதீர்கள் என்று
மரங்கள் மன்றாடி வருகின்றது.

என்ன செய்வது
மனிதன் பிறக்கும் போதே
தலைகீழாகப் பிறந்தவன்..
எல்லாவற்றையும்
தலை கீழாக தான் செய்கிறான். என்று நெல்லை பக்கம் சொல்வடை ஒன்று உண்டு.

அதேபோல் தமிழகத்தில் வசிக்கும்/ பணிபுரியும் வட இந்தியர்களை நாமும் தவறாக நினைத்துக்கொண்டு இருக்கின்றோம்.

எல்லாவற்றையும் தவறாக
புரிந்து கொள்வதிலும்
தவறாக அர்த்தம் கொள்வதிலும் நம்முடைய முழு வாழ்க்கையும் முடிந்து போய் விடுகிறது.

யாரும் யாரை விட ஒரு உசத்தியும் இல்லை யாரும் யாரை விடவும் மட்டமும் இல்லை என்கின்ற எண்ணத்துடன் இனி

மனிதம் வளர்ப்போம்
உழைக்கத் தயாராகுவோம்
வானம் வசப்படும் தூரம் தான்.

வாழ்க்கை வாழ்வதற்கு இல்லை கொண்டாடுவதற்கு…

என்றும் அன்புடன்

டாக்டர் ஆண்டாள் P சொக்கலிங்கம் .

Share this:

Write a Reply or Comment

18 + one =