வாஸ்து பயிற்சி வகுப்பு – II (Vastu Practitioner Training – II): – கடிதம் 2

ஸ்ரீ

Vastu - Nothing Is Impossible

வாஸ்து பயிற்சி வகுப்பை நான் நடத்துவதற்கு காரணங்கள் பல இருந்தாலும் அதில் மிக முக்கியமானது  என்று நான் நினைப்பது  பெண்கள் முன்னேற்றம் பற்றியதாகும்.

இன்று நம் சமுதாயத்தில் பெரும்பாலான படித்த பெண்களும், படிக்காத பெண்களும் சமையலறையும், படுக்கையறையும், வரவேற்பறையும் தான் அவர்களுடைய வாழ்வியில் முறை என்று சொல்லும் அளவிற்கு முடக்கப்பட்டு இருக்கின்றார்கள்.

குறிப்பாக இதில் வேலைக்கு போகும் பெண்களை பார்த்தால் வாரம் 5 அல்லது 6 நாள் வேலையுடன் வேலை, வாரத்தில் மீதம் உள்ள ஒரே ஒரு நாளில் குடும்பத்தினருக்கு நல்ல உறவுப் பெண்ணாக நடந்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்துடன் வாழ்க்கை என இப்படி ஒவ்வொரு பெண்ணும் தன் அடையாளத்தை இழந்து முகவரி இல்லாத கடிதம் அஞ்சல் பெட்டியில் போடப்பட்டிருப்பது போல் ஒரு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

  • இப்படி வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு பெண்மணியும் தங்களுடைய பிறப்பு இலட்சியத்தை மீட்டெடுக்கவும், தங்களது லட்சிய பயண இலக்கை வெற்றிகரமாக பிரயாணப்பட்டு நல்ல படி அடைவதற்கும் ஒரு உந்து சக்தியாகவும், கலங்கரை விளக்கமாகவும், அஞ்சல் பெட்டியில் போடப்பட்டிருக்கும் முகவரி இல்லாத கடிதத்திற்கு முகவரி எழுதும் முயற்சியாகவும் என்னுடைய வாஸ்து பயிற்சி வகுப்பு கண்டிப்பாக இருக்கும்.

வாஸ்து பயிற்சிக்கும், பெண்கள் முன்னேற்றத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்?

  • நோய்க்கு மருந்து நோயிலிருந்து எடுக்கப்படுவது உண்மையானால்…பாம்பு கடிக்கு மருந்து பாம்பிலிருந்து எடுக்கப்படுவது உண்மையானால்…பெண்ணின் பிரச்சினைக்கு பெண் தானே தீர்வாக இருக்க முடியும்…
  • வாஸ்து என்பதே பணத்திற்கு அப்பாற்பட்டு “CONTACTS” – ஐ உருவாக்குவது தானே… அப்படி உருவாகும் CONTACTS – ஐ ஆணை விட விவரமாக,லாவகமாக கையாண்டு BUSINESS – ஆக மாற்றும் திறன் பெண்ணிற்கு உண்டு என்பதை நான் திடமாக நம்புகின்றேன்.
  • வாஸ்துவில் இன்று 1000 ஆண்கள் இருக்கின்றார்கள் என்றால் 1 அல்லது 2 பெண்கள் தான் இருக்கின்றார்கள். இந்த எண்ணிக்கை கண்டிப்பாக குறைந்தது 500 – ஐ யாவது தொட வேண்டும்.
  • ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பெண் வாஸ்து நிபுணர்கள் அதிகரித்தால் ஒரு ஆண் வாஸ்து நிபுணர் தான் சந்திக்கும் ஒரு பெண்ணிடம் பேச முடியாத விஷயத்தை ஒரு பெண் வாஸ்து நிபுணர் தான் சந்திக்கும் ஒரு பெண்ணிடம் பேச முடியும் இதன் ஒரே விளைவு சந்தோஷம் மட்டுமே அனைவருக்கும்…

பெண்களுக்கு பாதுகாப்பானதா வாஸ்து பார்ப்பது?

  • பொதுவாக நாம் இந்த உலகை அது எப்படி இருக்கின்றதோ அப்படி பார்ப்பதில்லை. நாம் எப்படி இருக்கின்றோமோ அப்படியே தான் பார்க்கின்றோம். அதனால் தான் பெரும்பாலான சமயம், நமது சொந்த நடத்தைக்கு கிடைக்கும் பதிலாகவே பிறருடைய நடத்தையும் இருக்கும்.
  • அந்த வகையில் உலகமும், நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களும் பாதுகாப்பானவர்களே…
  • உளவியல் ரீதியாக அடுத்தவர்கள் பிரச்சினையை நாம் தீர்க்க முற்படும் போதே நாம் நம் நிலையில் இருந்து உயர ஆரம்பித்து விடுகின்றோம். அந்த வகையில் எந்த மாற்றத்தையும் மனிதனுக்கு கொடுக்க முடியாத மற்ற விஷயங்களை பின்பற்றாமல் இருக்கும் ஒருவருக்கு வாஸ்துபடி ஒரு வீட்டையோ, தொழில் நிறுவனத்தையோ அமைத்து கொடுக்கும் போது அவர் 100% கண்டிப்பாக நல் வாழ்க்கை வாழ்வார் என்பது திண்ணம். அப்படி வாழ்பவர்களின் உண்மையான வாழ்த்தும் உங்களை உண்மையாக உயர்த்தும்.மொத்தத்தில் அந்த பெண்ணிற்கு மட்டும் அல்ல அவளின் மொத்த குடும்பத்திற்கே அந்த வாழ்த்து மிகவும் பாதுகாப்பானது

வாஸ்து கற்ற பின் குடும்ப சூழல் காரணமாக நான் வெகு தொலைவிற்கெல்லாம் பிரயாணப்பட முடியாதே?

  • பரவாயில்லை. உங்கள் வீடு உள்ள இடத்திலேயே குறைந்தது 500 வீடுகளை வாஸ்து Centric ஆக மாற்ற முயற்சி எடுத்தாலே நீங்கள் அடுத்த கட்டத்திற்கு உட்கார்ந்த இடத்தில் இருந்தே பிரயாணப்பட ஆரம்பித்து விடுவீர்கள்.

வெறும் வாஸ்து மட்டும் தானே கற்று கொடுக்கப் போகிறீர்கள். அதை மட்டும் வைத்து கொண்டு நீங்கள் சொல்லும் இலக்கை அடைய முடியுமா?

  • வெறும் வாஸ்துவை நீங்கள் Internet – லோ, புத்தகத்திலோ கூட ஒரளவு படித்து தெரிந்து கொள்ளலாம். வாஸ்துவை மட்டும் வைத்துக் கொண்டு உங்கள் இலக்கை அடைய முடியும் என்று ஒரு கால் நான் சொன்னேன் என்றால் அதைவிட நகைச்சுவை வாக்கியம் இவ் உலகத்தில் வேறு எதுவும் இருக்க முடியாது.
  • கொஞ்சம் வாஸ்து, நல்ல மனம் கொண்டு நிறைய பணத்தை கவர்ந்து இழுக்கும் வழிமுறைகள், குறித்த இலக்கை அடைய விதிகள் என நிறைய இருக்கின்றது நம் பயிற்சி வகுப்பில்.

வாஸ்து கொண்டு தொலைந்த வாழ்க்கையை தேடி பிடிப்போம்.

தேடி பிடித்த வாழ்க்கையை தொடர்ந்தெடுத்து செல்வோம்.

ஒன்றை நூறாக்கி,

நூறை ஆயிரமாக்கி,

ஆயிரத்தை லட்சமாக்கி,

லட்சத்தை கோடியாக்குவோம்  – ஆண்டாள் துணையுடன் வாழ்க வளமுடன்

 

திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;

தஞ்சமடைந்த நம் ராமநுஜனே தஞ்சம்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

 

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Share this:

1 comment

  1. மிக அருமையான விளக்கம்…

    Reply

Write a Reply or Comment

fifteen − twelve =