November 11 2018 0Comment

போற்றி பாடடி பெண்ணே:.

சொக்கன் பக்கம்
கிறுக்கல் – 8
போற்றி பாடடி பெண்ணே:.
கடந்த கொண்டிருக்கின்ற விஷயங்கள் என
தனிமையில் பல விஷயங்களை யோசிக்கும்போது
கடந்து வந்த விஷயங்களை நினைத்துப் பார்க்கும்போது
பாலைவனச் சோலையாக தனித்து இருக்கும்போது
தனிமையிலும் ஒரு இனிமை உண்டு
என்று என்னால் உரக்கச் சொல்ல முடியும்
என்றால் அந்த பெருமை
இசைஞானி #இளையராஜா ஒருவரை மட்டுமே போய் சேரும்.
இசையால் எல்லாவற்றையும் மறக்க வைத்து ஆறுதல் தரவும் முடிகின்றது
நாம் மறக்க நினைப்பதை நினைவூட்டி தண்டனை தரவும் முடிகின்றது
அப்படிப்பட்ட இசையை எனக்கு நான் வாழும் காலத்தில்
கொடுத்தது இசைஞானி இளையராஜா ஒருவர் மட்டுமே.
தனிமை என்னை தனிமை படுத்தும் போதேல்லாம்
சிறந்த காரை சுயமாக,வேகமாக ஒட்டி கொண்டு
இசைஞானியின் பாடல்களுடன்
நீண்ட தொலைதூர இரவு பிரயாணத்தை
தொடர்வது என் வழக்கம்.
#இசைஞானி இளையராஜா என் சமகாலத்து
மனித வாழ்க்கையில் மிக முக்கியமானவர் ஆகி விட்டார்
இவர் இசை நிறைய சந்தர்பங்களில் என்னுடைய பதில் இல்லா நிறைய கேள்விகளுக்கு இன்றும் விடையாக இருந்து கொண்டு இருக்கின்றது
உங்களுக்கு எதுவும் சரியாக அமையாமல் போய் விட்டால்
இசையோடு இருக்க பழகுங்கள்.
இசை உங்களை செம்மையாக வழி நடத்தும்
ஒருகால் இசையை நீங்கள் விரும்பாவிட்டால் உங்களுக்கும் பிரபஞ்ச அலைவரிசைக்கும் கொஞ்சம் இடைவெளி அதிகமாக உள்ளது என என்னால் உறுதியாக கூற முடியும்.
என்னுடன் நட்பில் எப்போதும் தொடர்பவர்களை கூர்ந்து பார்த்தபோது
நிறை நிறையை மட்டுமே ஈர்க்கும் என்கின்ற விதிக்கு ஏற்ப அவர்களும் என்னைப்போல் தான் இருகின்றார்கள் என்கின்ற உண்மை ஒரு கட்டத்தில் மிக தெளிவாக புரிந்தது.
அந்த வகையில் நான் விரும்பும் இளையராஜா இசையை என்னைவிட பல ஆயிரம் மடங்கு விரும்புபவர்கள் இந்த பூமியில் பல லட்சம் பேர் உண்டு
அப்படி ஒருவர் தான் என் ஆருயிர் சகோதரி மேத்தா நகர் கீதா அவர்கள்
ஏனோ தெரியவில்லை இளையராஜா நினைவில் வரும் போதெல்லாம் இவரும் என் நினைவிலிருந்து தப்புவதில்லை
நான் அடிக்கடி அழைத்து பேசும் சில நபர்களில் இவரும் ஒருவர்
என்னுடைய நேரடி தொலைபேசி எண் தெரிந்த வெகு சில வாடிக்கையாளர்களில் இவரும் ஒருவர்
இவர் எனக்கு என்றும் முக்கியமானவர்.
எனக்கு மனம் கனமாக இருக்கும் பொழுதும்
நீண்ட நெடிய பயணத்தின் நடுவிலும்
ஒரு சில நிமிடங்கள் இவருடன் பேசி செல்வதுண்டு
இவருடன் பேசியபின் பறந்து போய்விடும் எப்பேர்பட்ட இறுக்கமும்
லேசாகிவிடும் மனதும்
பார்வையிலே குமரியம்மா பழக்கத்திலே குழந்தையம்மா
இவருக்காகவே பாடப்பட்ட பாட்டு என்று
ஒவ்வொரு முறை அவருடன் பேசி முடித்த பின் எண்ணுவதுண்டு
என் பயணத்தில் சிலர் வாழ்நாள் முழுவதும் என்னுடன் பிரயாணிக்க வேண்டும் என்று நான் ஆசைப்படும் நபர்களில் மிக முக்கியமானவர்
கணேஷின் சீதா:எங்களின் கீதா
அப்பழுக்கற்ற பத்தரை மாத்து தங்கம்
என்ன தவம் செய்தேனோ நான் லயித்து வாழ நிறைய விஷயங்களை எனக்கு இன்னும் மிச்சம் விட்டு வைத்ததற்கு
இளையராஜாவுக்கும் அவரின் இசை ரசிகைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
– என்னை இன்றும் நானாக இருக்க வைத்துக் கொண்டிருப்பதற்கு
 Dr.ஆண்டாள் பி. சொக்கலிங்கம்
Share this:

Write a Reply or Comment

nine + eleven =

Open chat
1
Hello,
Can I help You?
Powered by