January 14 2021 0Comment

திருப்பாவை பாடல் 29:

திருப்பாவை பாடல் 29 (ஆட்செய்வோம் எனல்) சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன் பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய்! பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா! எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய். பொருள் : விடியற்காலையில் வந்து உன்னை வழிபட்டு உன் பொன்போன்ற தாமரை பாதங்களை வணங்க வந்திருக்கிறோம். அதற்கான காரணத்தை கேட்பாயாக ! பசுக்களை மேய்த்து […]

January 13 2021 0Comment

திருப்பாவை பாடல் 28:

திருப்பாவை பாடல் 28: கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம் அறிவொன்றும் இல்லாத ஆயர்குலத்து உன்றன்னை பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம் குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை சிறுபேர் அழைத்தனவும் சீறி யருளாதே இறைவா! நீ தாராய் பறையேலோர் எம்பாவாய். பொருள்: குறையே இல்லாத கோவிந்தனே! நாங்கள் பசுக்களின் பின்னால் சென்று அவற்றை மேய்த்து, தயிர்ச்சாதம் உண்பவர்கள். எங்களுக்கு அறிவென்பதே இல்லை. ஆனால், ஒன்றே ஒன்று மட்டும் […]

January 13 2021 0Comment

திருப்பாவை பாடல் 27:

திருப்பாவை பாடல் 27: (மகிழ்ச்சி கொளல்) கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்தன்னைப் பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம் நாடு புகழும் பரிசினால் நன்றாக சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம் ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு மூடநெய் பெய்து முழங்கை வழிவார கூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய். விளக்கம் : பகைவரை வெல்லும் சிறப்பு உடைய கோவிந்தா! உன்னை வாயாரப் பாடி, மனதார நினைத்து வேண்டும் பறை கொள்வோம். அதற்கு மேலும் யாம் […]

அடுத்த கட்ட நகர்வுக்கு உதவும் கூடாரவல்லியும், அனுமன் ஜெயந்தியும்!!

அடுத்த கட்ட நகர்வுக்கு உதவும் கூடாரவல்லியும், அனுமன் ஜெயந்தியும்!! #DrAndalPChockalingam #SriAandalVastu புதுயுகம் டிவி – யில் இன்று (11.01.2021) நேரம் நல்ல நேரம் என்கின்ற நிகழ்ச்சியின் வாயிலாக Dr.ஆண்டாள் பி.சொக்கலிங்கம் அவர்கள் உளவியல் சார்ந்த வாஸ்து தீர்வுகள் கொடுத்த போது… Thanks to Puthuyugam TV  

January 13 2021 0Comment

திருப்பாவை பாடல் 26:

திருப்பாவை பாடல் 26: (வேண்டுவன இவை எனல்) மாலே மணிவண்ணா! மார்கழி நீராடுவான் மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே கோல விளக்கே கொடியே விதானமே ஆலின் இலையாய்! அருளேலோர் எம்பாவாய். விளக்கம் : திருமாலே! மணிவண்ணனே! ஆலிலை மேல் பள்ளிகொள்பவனே! மார்கழி மாதம் நீராடுவதற்காக மேன்மை பொருந்திய அடியவர்கள் செய்யும் செயல்பாடுகளை செய்ய எமக்கு […]

January 10 2021 0Comment

திருப்பாவை பாடல் 25:

திருப்பாவை பாடல் 25: (பறை தருக எனல்) ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில் திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய். விளக்கம் : தேவகி மகனாக பிறந்தாய்… அதே இரவில் யசோதை மகனாக ஒளித்து வளர்ந்தாய். கண்ணன் மறைந்து வளர்வதைப் பொறுக்க முடியாத கம்சன் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by