அஞ்சானி மாதவ மலை பனிலிங்கம்
அஞ்சானி மாதவ மலை பனிலிங்கம் : இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு முக்கிய இந்துக் குடைவரை கோயில்,அமர்நாத் கோயில் ஆகும். இக்கோயில் 5,000 ஆண்டு பழமையானதாகவும் இந்து புராண காலத்தில் மிக முக்கியமானதாகவும் கருதப்படுகிறது. மணாலி: காஷ்மீர் அமர்நாத் கோயில் பனிலிங்கம்போல் இமாச்சல பிரதேசம் சோலாங் பகுதியில் உள்ள கோயிலில் 10அடி பனிலிங்கம் உருவாகியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் இறுதியில் தொடங்கி ஆகஸ்ட் முதல் வாரம் வரை காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகைக் கோயிலில் […]
அதிசய நடராஜர் !
அதிசய நடராஜர் ! பொதுவாக ஒவ்வொரு கோவிலிலும் ஒரு இறைவன் சிலை வடிவமாக காட்சியளிப்பார். ஆனால் நாகப்பட்டினத்தில் மனித வடிவில் காட்சியளிக்கிறார் இறைவன். இத்தல இறைவனை பூமிநாதர் என்றும், அம்பாளை அங்கவளநாயகி என்றும் அழைக்கிறார்கள். கோவிலில் காணப்படும் சிற்பங்கள் அனைத்தும் சிலை வடிவமாக செதுக்கப்பட்டு வைக்கப்படுகிறது. ஆனால் நாகப்பட்டினம் மாவட்ட கோனேரிராஜபுரத்தில் உமாமகேஸ்வரர் திருக்கோவிலில் உள்ள உற்சவருக்கு மட்டும் ஒரு தனிச் சிறப்புள்ளது. மனித தோற்றம் : இங்குள்ள நடராஜர் சிலையானது, ஒரு மனிதரைப் போலவே காட்சியளிக்கும். […]
சிவயோகிநாதர் கோவில்:
சிவயோகிநாதர் கோவில்: பொதுவாக ஆலயங்களில் ஒரே ஒரு தல விருட்சம்தான் இருக்கும். ஒரு சில கோவில்களில் அபூர்வமாக இரண்டு அல்லது மூன்று கூட இருக்கும். ஆனால் கும்பகோணம் அருகில் உள்ள #திருவிசநல்லூர் சிவயோகநாதர் திருக்கோவிலில், #8 தல விருட்ச மரங்கள் இருக்கும் #அதிசயத்தைக் காணலாம். வன்னி, உந்து வில்வம், புன்னை, மகிழம், ஆல், அரசு, நெல்லி, பரசு வில்வம் என இங்கு எட்டு தலவிருட்சங்கள் இருக்கின்றன. மேலும் இந்த ஆலயத்திற்குள் நுழையும் போது, நந்திதான் முதலில் உள்ளது. […]
கருமாரி அம்மன்
திருவேற்காடு கருமாரி அம்மன் கோவில் ! ⭐ தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து 20கி.மீ. தொலைவில் திருவேற்காட்டில் அமைந்துள்ளது.திருவேற்காடு எனும் பெயருக்கு தெய்வீக மூலிகைகள் நிறைந்த வனம் என்பது பொருளாகும். ⭐ மூலவர்: தேவி கருமாரியம்மன் ⭐ தல விருட்சம் : கருவேல மரம் ⭐ தீர்த்தம் : வேலாயுத தீர்த்தம் ⭐ பழமை : 500-1000 வருடங்களுக்கு முன் ⭐ ஊர் : திருவேற்காடு #தல வரலாறு : ⭐ தேவி கருமாரியம்மன் ஒரு நாடோடியாகத் திரிந்ததாகவும் அந்தப் பருவத்தில் அவர் […]
பண ஈர்ப்பு விதி – 110 – உன்னாலும் முடியும் தம்பி
Andal P.Chockalingam’s Speech at Vani Mahal
உச்சிப்பிள்ளையார் கோயில்:
உச்சிப்பிள்ளையார் கோயில்: தென்னிந்திய மாநிலமான தமிழகத்தி்ன் திருச்சி நகரத்தில் உள்ள பிள்ளையார் கோயில் ஆகும்.நிலவியல் அடிப்படையில், 3 பில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த பாறையின் உச்சியில் இந்த கோயில் அமைந்துள்ளதால் உச்சிப்பிள்ளையார் கோயில் என்று இதற்கு பெயர் வந்தது. (இப்பாறைக்கு மலைக் கோட்டை எனவும் பெயர் உண்டு.) திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை ஒரு தொல்பழங்கால மலைப்பாறை ஒன்றன்மீது கட்டப்பட்ட கோட்டை, கோயில்கள் என்பவற்றைக் கொண்ட ஒரு தொகுதி ஆகும். நடுவில் ஒரு மலையும், அதைச் சுற்றி கோட்டையும் கொண்டு […]
புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில்:
புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில்: தமிழ்நாடு, தஞ்சை மாவட்டம், புன்னைநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இங்கு முத்துமாரியம்மன் புற்று வடிவில் அருள்பாலிக்கிறார். தேவஸ்தான கோயில்: தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். பிற சன்னதிகள்: முத்துமாரியம்மன் சன்னதி அருகில், துர்க்கை அம்மனுக்குத் தனி சன்னதி உள்ளது. இரு அம்மன்களும், அருகருகே எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிப்பது, இக்கோவிலின் தனிச்சிறப்பு. அம்பாள் சன்னதியின் வலப்புறம் பேச்சியம்மன் சன்னதி உள்ளது. கோயிலின் உள்ளே ஒரு குளமும், வெளியே ஒரு குளமும் […]
ஸ்ரீ பகவதி அம்மன்:
ஸ்ரீ பகவதி அம்மன்: தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரசித்திபெற்ற கோவிலாகும். இங்குள்ள குமரிஅம்மன் “ஸ்ரீ பகவதி அம்மன்” “துர்கா தேவி” எனவும் பெயர் பெற்றுள்ளார். இங்கு, குமரி அம்மன் குழந்தை வடிவில் அருள்பாலிப்பதாகக் கூறப்படுகிறது. இவ்விடம் கிழக்கில் வங்காள விரிகுடாவும், மேற்கில் அரபிக்கடலும், தெற்கில் இந்தியப் பெருங்கடலுமாக முக்கடல் சங்கமமான, இந்தியாவின் தென்கோடி நில முனையில் அமைந்துள்ளது. இக்கோவிலின் வழிபாடுகளையும், சடங்குகளையும் “திரு. சங்கராச்சாரியார்” சங்கரா மடம் மூலமாக நடக்க வழிவகைச் செய்துள்ளார். முனிவர் […]
சுவேதாரண்யேசுவரர்:
சுவேதாரண்யேசுவரர்: திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில் சமய குரவர்களாகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். இந்திரன், வெள்ளை யானை வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 11வது சிவத்தலமாகும். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தல வரலாறு: பிரம்மனிடம் வரம் பெற்ற மருத்துவன் என்ற அசுரன் தேவர்களுக்கு […]
