ஒரு இடத்தின் வடமேற்கு(North West Corner) மூலையில் அமைக்கப்படும் படிக்கட்டு அந்த இடத்தின் வடகிழக்கு (North East) பகுதியில் இருந்து ஆரம்பிக்கலாமா?

ஒரு இடத்தின் வடமேற்கு(North West Corner) மூலையில் அமைக்கப்படும் படிக்கட்டு அந்த இடத்தின் வடகிழக்கு (North East) பகுதியில் இருந்து கண்டிப்பாக ஆரம்பிக்க கூடாது. படத்தில் உள்ள இடம்: சிகரலஹள்ளி, தர்மபுரி

ஒரு இடத்தில் கட்டப்படும் கட்டிடம் அந்த இடத்தின் எல்லை வரை கட்டலாமா?

ஒரு இடத்தில் கட்டிடம் கட்டும் போது அந்த இடத்தின் எல்லை வரை கட்டிடம் கட்டக்கூடாது. அதாவது அந்த இடத்தின் நான்கு புறமும் மதில் சுவர் அமைத்து, மதில் சுவரின் தெற்கு மற்றும் மேற்கு பகுதியை ஒட்டியவாறு கட்டிடம் கட்ட வேண்டும். ஒரு இடத்தின் மதில் சுவருக்கும், கட்டிடத்தின் தாய் சுவருக்கும் உள்ள இடைவெளியானது மேற்கு பகுதியை விட கிழக்கு பகுதியில் அதிகமாகவும், தெற்கு பகுதியை விட வடக்கு பகுதியில் அதிகமாகவும் இருக்க வேண்டும்.

ஒரு வீட்டின் வடமேற்கு மூலையில் அமைக்கப்படும் கழிவறையின் மேல்தளத்தில் சாமான்கள் வைப்பதற்காக பரண் அமைக்கலாமா?

ஒரு வீட்டின் வடமேற்கு மூலையில் அமைக்கப்படும் கழிவறையின் மேல்தளத்தில் சாமான்கள் வைப்பதற்காக பரண் கண்டிப்பாக அமைக்க கூடாது. பெரும்பான்மையான வீடுகளில் படத்தில் உள்ளபடி தான் சாமான்கள் வைப்பதற்காக பரண் அமைத்து இருப்பார்கள். இப்படி பரண் அமைப்பதை கண்டிப்பாக தவிர்ப்பது நல்லது. மேலும் இது போன்ற அமைப்பு உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் அங்கு உள்ள சாமான்களை எடுத்து விட்டு அந்த இடத்தை காலியாக வைத்து இருந்தாலே வாஸ்து உண்மையா? பொய்யா? என்பதை உணர்ந்து கொள்ள முடியும். படத்தில் உள்ள […]

ஒரு வீட்டின் தென்மேற்கு அறையின் தெற்கு சுவற்றில் அதன் மேற்கு சுவரை ஒட்டி ஜன்னல் (2) அமைக்கலாமா?

ஒரு வீட்டின் தென்மேற்கு அறையின் தெற்கு சுவற்றில் அதன் மேற்கு சுவரை ஒட்டி ஜன்னல் (2) அமைக்க கூடாது.

ஒரு இடத்தில் அமைக்கப்படும் அறையின் மேல் தளத்திற்கு ஆஸ்பெஸ்டாஸ் பயன்படுத்தலாமா?

வாஸ்து காரணங்களுக்காக அல்ல. அறிவியில் காரணங்களுக்காக ஒரு இடத்தில் அமைக்கப்படும் அறையின் மேல் தளத்திற்கு ஆஸ்பெஸ்டாஸ் பயன்படுத்த கூடவே கூடாது.

ஒரு இடத்தில் பூஜை அறையை எங்கு எப்படி அமைக்க வேண்டும்?

ஒரு இடத்தில் பூஜை அறையை கிழக்கு பார்த்து அமைக்க வேண்டும். தென்மேற்கு மற்றும் வடகிழக்கு மூலையில் கண்டிப்பாக அமைக்க கூடாது. சுவற்றில் பூஜை அறையை அமைத்தால் மனிதர்களின் கால் மிதி படாது என்பதால் படத்தில் உள்ள படி அமைப்பது சாலச்சிறந்தது.

Open chat
1
Hello,
Can I help You?
Powered by