கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோவில்

    
 கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோவில்:

கொல்லிமலை அறப்பளீஸ்வரர் திருக்கோவில் நாமக்கல்
மாவட்டம் கொல்லிமலையில் அமைந்துள்ள சிவன்  கோவிலாகும்.

சங்ககாலத்தில் கொல்லிமலையானது சதுரகிரி என்றும் அறமலை என்றும் அழைக்கப்

பட்டது. அம்பலவாண கவிராயர் இத்தலத்து இறைவன் மீது அறப்பளீஸ்வரர் சதகம்

என்ற நூலை இயற்றியுள்ளார்.திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் தங்களது

தேவாரப் பாடல்களில் கொல்லிமலை பற்றி குறிப்பிட்டுள்ளனர்.

கோவில் வரலாறு :

இயற்கை வளம்மிக்க கொல்லிமலை வல்வில்ஓரி என்னும் மன்னன் ஆண்ட
பகுதியாகும். காலாங்கி முனிவர் முதலாக பதினெண் சித்தர்கள்
இம்மலையில் பல குகைகளில் தங்கித் தவம் செய்துள்ளனர்.

அறைப்பள்ளி என்பது மலைமேல் உள்ள கோவில் என்ற பொருளாகும். எனவே

இக்கோவிலுள்ள ஈஸ்வரர் அறைப்பள்ளி இக்கோவிலுக்குப் பக்கத்தில் மீன்பள்ளி

என்ற ஆறு ஓடுகிறது.

இம்மீன்பள்ளியாற்றில் இறைவன் மீன்களின் வடிவில் இருப்பதாக நம்பப்படுகிறது.

எனவே மீன்களுக்கு பழம், தேங்காய் வைத்துப் படைத்து அவற்றுக்கு உணவு தரும்

பழக்கம் பண்டை நாளில் இருந்து வந்துள்ளது.இதன்பின்னரே அறைப்பள்ளிநாதருக்கு

பூஜை நிகழ்கிறது.இக்கோவிலின் மேற்கு பகுதியில் கொல்லிப்பாவை என்னும் தெய்வ

சக்தி வாய்ந்த பதுமை ஒன்று இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

சிந்தாமணி,குறுந்தொகை, சிலப்பதிகாரம், நற்றிணை மற்றும் புறநானூறு
ஆகியவை வாயிலாக இப்பாவையின் சிறப்புக்களை குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கொல்லிப்பாவையால் இம்மலை காக்கப்படுவதால் கொல்லிமலை எனப் பெயர்

பெற்றதாகக் கூறப்படுகிறது. கொல்லிப்பாவையை இம்மலை வாழ்மக்கள் எட்டுக்கை

அம்மன் என்று கூறுகின்றனர்.

கோவில் சிறப்புகள் :

இக்கோவிலில் சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவலிங்கத்தின் உச்சியில்
கலப்பை மோதியதால் ஏற்பட்ட தழும்பு காணப்படுகிறது. ஒரே இடத்தில் நின்று ஒரே

நேரத்தில் அறப்பளீஸ்வரர்,தாயம்மை,விநாயகர், முருகன் ஆகிய நான்கு

தெய்வங்களையும் ஒரு சேர தரிசித்து மகிழும் அரிய அமைப்பு இக்கோவிலின்

தனிச்சிறப்பாகும்.அறம்வளர்த்தநாயகி சன்னிதி முன்மண்டபத்தின் மேற்பகுதியில்
அஷ்ட லட்சுமிகளுடன் கூடிய ஸ்ரீசக்ர யந்திரம் உள்ளது. இதன் கீழே நின்று வழிபட

லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.சுற்றுப்பிரகாரத்தில் வள்ளி, தேவசேனாவுடன் முருகனும்,
விநாயகர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, லட்சுமி, சரஸ்வதி,தட்சிணாமூர்த்தி,

சண்டிகேஸ்வரர், துர்க்கை, கால பைரவர், சூரியன், சந்திரன் ஆகியோர் எழுந்தருளியுள்ளனர்.

இயற்கை அன்னையின் அழகை ஒட்டு மொத்த குத்தகைக்கு எடுத்து கொண்ட மலை

அழகிகளில் கொல்லிமலை சிறப்பு பெற்றது. தன் அழகை 17 மைல் தூரத்திற்கு

விரித்திருக்கும் இந்த மலை ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய

பழமையும் சிறப்பும் உடையது.

#கொல்லிமலை #அறப்பளீஸ்வரர் #ஸ்ரீசக்ர_யந்திரம்

Share this:

Write a Reply or Comment

2 × 2 =