கங்கைகொண்ட சோழபுரம் ஸ்ரீப்ரஹதீஸ்வர ஸ்வாமிக்கு அன்னாபிஷேகம்:

ஸ்ரீ

Rice - அரிசி

 

அனைவருக்கும் வணக்கம்…

ஐப்பசி பூர்ணிமையில் கங்கைகொண்ட சோழபுரத்துக் கோயிலிலுள்ள ஸ்ரீப்ரஹதீஷ்வர லிங்கத்திற்கு அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற வேண்டும் என்ற எண்ணம் ஸ்ரீ ஆச்சார்ய மஹா ஸ்வாமிகளின் மனதில் உதயமான பிறகு, அப்புனிதப்பணி சென்ற இருபத்து எட்டு வருஷங்களாக நன்கு நடந்து வருகின்றது. பிரதி வருஷமும் பல ஊர்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த அன்னாபிஷேக வைபத்தை தரிசித்துப் போகின்றனர்.

இப்புனித கைங்கர்யத்தை தமிழ்நாடு, ஆந்திரா என்று பல பகுதிகளைச் சேர்ந்த ஸ்ரீகாஞ்சி மடம் பக்தர்கள் பலரைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள குழு ஒன்று ஏற்று ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ சங்கராச்சார்ய ஸ்வாமிகள் அவர்களின் ஆக்ஞையுடன் நடந்து வருகின்றது.

கங்கைகொண்ட சோழபுரம் ஸ்ரீப்ரஹதீஸ்வர ஸ்வாமி லிங்கத்திற்கு பூர்த்தியாக அன்னாபிஷேகம் செய்யவும், ஆண்டு முழுவதும் நடக்க வேண்டிய நைவேத்தியம் மற்றும் சிவகைங்கர்யங்களுக்கும், அன்னாபிஷேகத்தை காண வரும் திரளான பக்தர்களின் உணவிற்கும் மற்றும் தொண்டர்கள், சிவாச்சார்யார்களின் உணவு முதலியவற்றிற்கும் சுமார் 125 மூட்டைகள் (9375 Kgs, 75 Kgs per bag) பச்சரிசி தேவைப்படுகின்றது.

ஸ்ரீ மகாஸ்வாமிகளின் உத்தரவுப்படி அபிஷேகம் செய்த அன்னம் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் ஏழை மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.

இந்த வருஷத்தில் அன்னாபிஷேகம் ஜய வருஷம் ஐப்பசி 10 – ம் தேதி செவ்வாய்க்கிழமை, 27 அக்டோபர் 2015-ல் நடைபெறும். மஹா அபிஷேகம் 26.10.2015 -ல் நடைபெறும் (11.00 am)

பாரதநாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழும் பக்தர்கள் அனைவரும் தங்களால் இயன்ற வரை நல்ல தர பச்சரிசி அபிஷேக சாமான்கள் உபயமாக வழங்கியும் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு வந்து மேலே குறிப்பிட்ட தினங்களில் அபிஷேக ஆராதணைகளைத் தரிசித்தும் இப்புனித கைங்கர்யத்தில் பங்கு கொண்டு ஸ்ரீப்ரஹதீஷ்வர ஸ்வாமியின் கிருபையையும் ஸ்ரீகாஞ்சி ஆச்சார்ய ஸ்வாமிகளின் ஆசிகளையும் பெற்று எல்லா நலன்களையும் அடைய வேணுமாய் பிரார்த்திக்கின்றோம். இந்த உபயதாரர்களின் பிரதிநிதியாக காஞ்சி மடம் அன்னாபிஷேக கமிட்டி வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து அன்னாபிஷேகத்தை பக்திபூர்வமாக நன்கு நடத்த ஸ்ரீகாஞ்சி ஸ்வாமிகளின் ஆக்ஞை.

27.10.2015 அன்று காலை 11 மணிக்கு மேல் அன்னாபிஷேகம் ஆரம்பித்து மாலை 6 மணி அளவில் மஹா தீபாராதனை நடைபெறும்.

இந்த தெய்வீக கைங்கரியத்திற்கு சிறப்பாக உதவும் வகையில் நம் சகோதரர் திரு.ஆண்டாள் K. திருகோவிந்தன், மண்ணச்சநல்லூர் (Ph: 90423 27209 / 83447 97847) அவர்கள் சிறந்த விலையில் அரிசி வழங்குவதற்கு இசைந்துள்ளார். அவர் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ அரிசியை வாங்கி அனுப்பலாம்.

அரிசி போய் சேர வேண்டிய இடம்:

அன்னாபிஷேகக் கமிட்டி

மேனேஜர், ஸ்ரீ சங்கர மடம்,

92, மடத்துத் தெரு,

கும்பகோணம் – 612 001

 

திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;
தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!
நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

1 + 8 =