July 07 2022 0Comment

எல்லாம் சரியாகிவிடும்!!!!

எல்லாம் சரியாகிவிடும்!!!!

புலம்பிக் கொண்டே
இருந்தால் விதி
உங்கள் வாழ்க்கையை
பந்தயத்தில் கால்பந்து
அடி வாங்குவதை
போல புரட்டிப் போட்டுக்
கொண்டே தான் இருக்கும்

சூழ்நிலை சரியில்லை
என்றால் சூழ்நிலை சரியாக அமையவில்லை என்றால் அமைதியாக மாறிவிடுங்கள்

ஒரு நாள் வரும்
எல்லாம் மாறும்
அந்த நாள் விதியும் வெறுத்து விலகிப் போக கூடிய
நாளாக இருக்கும்

உங்கள் வாழ்நாளில் எதை செய்தாலும் திருப்தியுடன் செய்யுங்கள்
அது ஒன்றே உங்கள் வாழ்வை
அர்த்தம் உள்ளதாக மாற்றும்

மனம் சோர்வடையும் போது நம்பிக்கையாய் பேசுபவர்களோடு நேரம் செலவிடுங்கள்
நிச்சயமாக நீங்கள் நம்பக்கூடியவர்கள்
வார்த்தையிலேயே
உங்களுக்கு வைத்தியம்
பார்த்து விடுவார்கள்
ரணமான மனதிற்கு ஏதுவாக

இதுபோன்ற இக்கட்டான
சூழ்நிலைகளில்
5 ரகசிய சூட்சுமங்களை
நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள்

1. விமர்சனம்

யானை படுத்தாலும் குதிரை
மட்டம் என்பதை மறந்து
உங்களை பார்த்து விமர்சனம் செய்பவன் இயலாதவன்
என்பதே உண்மை

இது போன்ற சூழ்நிலைகளை சந்திக்கும் போது புன்னகைத்து கடந்து முன்னோக்கி பார்த்து கடந்து சென்று கொண்டே இருங்கள்.

2. பயணம்

பந்தய குதிரை ஓடும்போது
ஓடுதளம் அருகிலுள்ள
புற்களை பார்த்து கொண்டு
ஓடுவதும் இல்லை
அதை உண்பதற்காக ஓடுவதை நிறுத்துவதும் இல்லை
அது எப்போதும் வெற்றி
இலக்கை மட்டுமே
மனதில் கொண்டு ஓடுகிறது

அதே போல் பயணத்தின் நோக்கம் இலக்காக இருந்தாலும் எந்த சூழ்நிலையிலும் பயணமே தடைப்பட்டு போய் விடக்கூடாது என்பதுதான் அதைவிட மிக முக்கியமான விதி என்பதை நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள்

3.உணர்ச்சி

வலிமையான உணர்ச்சிதான் எப்போதும் வெற்றி பெறுகிறது

நீங்கள் உங்கள்
நம்பிக்கைக்கு உரம் போட்டு
உங்கள் பயத்திற்கு நிரந்தர
பட்டினி போடுங்கள்

4.கேலி

நம்மிடம் என்ன
இருக்கிறது என்பதை விட
என்ன இல்லை என்று ஆராய்ந்து கேலி பேசுவதில் தான் இந்த உலகம் மிக அதிக அக்கறை கொள்கிறது
இதை எதிர்கொள்ளும் நேரிடும் போது மறந்து திகைத்து
நிற்பது போல் கடந்து விடு

5.முயற்சி

காலால் மிதித்த
தன்னை கையால்
எடுக்க வைக்கும்
பெருமை கொண்ட முள்ளை போல உன்னை தாழ்த்திப் பேசினவர்களே உன்னை பாராட்டி புகழ்ந்து பேசும் வகையில் உன் முயற்சியை வடிவமைத்துக் கொள்

இறைவனுக்கு மட்டும் மனதை கொடு
உண்மையில் தேவைப்படுபவனுக்கு மட்டும் அன்பை கொடு
உனக்கு சூழ்நிலை ஒத்து வரும்போதெல்லாம்
இல்லாதவனுக்கும் கை கொடு

எல்லாம் சரியாகிவிடும் ஒரு நாள்

என்றும் அன்புடன்

Dr ஆண்டாள் P சொக்கலிங்கம்

 

Share this:

Write a Reply or Comment

five × 5 =