January 10 2021 0Comment

திருப்பாவை பாடல் 23:

திருப்பாவை பாடல் 23:

(அருள் செய்க) மாரி மலைமுழஞ்சில் மன்னிக்கிடத்துறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி மூரி நிமிர்ந்து முழங்கப் புறப்பட்டு போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! உன் கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்புடைய சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

விளக்கம் :

மழைக்காலத்தில் மலைக்குகையில் பெண் சிங்கத்துடன் அனைத்தையும் மறந்து உறங்கும் ஆண் சிங்கம், உறக்கம் கலைந்து கண் சிவந்து தன் எல்லைக்குள் யாரும் புகுந்துள்ளனரா? என்பதை அறிவது போல, கண்ணில் தீப்பொறி பறக்க, பிடரியை சிலுப்பியபடி எழுந்து வரும். அதைப் போல, கண்ணா, நீயும் புறப்பட்டு வருவாயாக…! காயாம்பூ போன்ற நிறமுடைய மணிவண்ணா! நீ உன்னுடைய கோவிலில் இருந்து இங்கே வா…! அழகிய அரியணையில் வந்து அமர்ந்து எங்களின் குறைகளை கேட்டு அருள்புரிவாயாக… என்று வேண்டுகிறாள் ஆண்டாள்.

Source:web

Share this:

Write a Reply or Comment

15 − three =