September 30 2018 0Comment

திருவைகுந்த விண்ணகரம்

31.திருவைகுந்த விண்ணகரம்:

திருவைகுந்த விண்ணகரம் அல்லது வைகுந்த விண்ணகரம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். 

திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் #திருநாங்கூரில் அமைந்துள்ளது. 

இக்கோயில் திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளுள் ஒன்று. 

வைகுண்டமான பரமபதத்தில் சங்கு சக்கரங்களுடன் எழுந்தருளியுள்ள வைகுண்டநாதனே இந்த வைகுந்த விண்ணகரத்தில் உள்ளான் என்பதும் சிவனின் ருத்ர தாண்டவத்தை நிறுத்த பரமபத நாதன் புறப்பட்டு வர அவரைப் பின்பற்றி 10 பெருமாள்களும் இவ்விடம் (திருநாங்கூர்) வந்தனர் என்பதும் தொன்நம்பிக்கை. 

பரமபதத்தில் இருந்து வந்ததால் அதே தோற்றத்தில் இங்கும் காணப்படுகிறார்.

திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளின் இறைவர்களும் எழுந்தருளும் தை அமாவாசைக்கு மறுநாளான திருநாங்கூர் கருடசேவைத் திருவிழாவுக்கு இவ்விறைவனும் எழுந்தருளுவார்.

வேறு பெயர்(கள்):வைகுந்தநாதப் பெருமாள் கோயில்

பெயர்:வைகுந்த விண்ணகரம்

இறைவன் உபய நாச்சிமார்கள் புடைசூழ கிழக்கு நோக்கி வீற்றிருந்த திருக்கோலதில் இருக்கும் வைகுந்த நாதன்.

இறைவி : வைகுந்த வல்லி

தீர்த்தம் : லட்சுமி புஷ்கரணி, உத்தங்கபுஷ்கரணி, விரஜா

விமானம் அனந்த சத்ய வர்த்தக விமானம்.

விண்ணகரம் என்பது ஊர்ப்பெயராகும். தமிழ் நாட்டில் ஈசனது கோவில் ஈச்சரம் என்று பெயர் பெற்றதைப் போல , விஷ்ணுவின் கோவில் விஷ்ணு கிரகம் எனப் பெயர் பெற்றது. அப்பெயர் விண்ணகரம் என்று மருவிற்று என்பர். வைணவர்கள் தலை கொண்டு போற்றும் 108 திருப்பதிகளில் ஆறு விண்ணகரங்கள் உள்ளன.

 

Share this:

Write a Reply or Comment

2 × 2 =