July 13 2022 0Comment

பியூட்டி பாட்டி

பியூட்டி பாட்டி

அந்தக் கிராமத்துப்
பெண்ணுக்கு 62 வயது
அன்பானவர்
நல்ல அறிவுள்ளவர்
ஆனால், அவருக்கு
எழுதப் படிக்கத் தெரியாது

ஒருநாள், அவர் தன்னுடைய 12 வயதுப் பேத்தியை அழைக்கிறார் ‘கண்ணு, எனக்கு இந்தக் கதையைப் படிச்சுக் காட்டு’ என்று கேட்டுக்கொள்கிறார்

பாட்டி இது கதை இல்லை தொடர்கதை
ஒவ்வொரு வாரமும் வரும் இது
என்கிறார் அந்தச் சிறுமி

ஆமாம் கண்ணு
ஒவ்வொரு வாரமும் நீ எனக்கு இதைப் படிச்சுக்காட்டு
என்கிறார் பாட்டி

சரி என்று கதையைப்
படிக்கத் தொடங்குகிறார் பேத்தி
அதைப் பாட்டி கூர்ந்து கவனிக்கிறார்

அதன்பிறகு, ஒவ்வொரு புதன்கிழமையும் அந்த வார இதழ் வருகிறது. அதைப் பேத்தி படிக்கிறார், பாட்டி கேட்கிறார்

அந்த நேரத்தில், பக்கத்துக் கிராமத்தில் ஒரு திருமண விழா. பேத்தி அந்தத் திருமணத்தில் கலந்துகொள்ளச் செல்கிறார், அங்கேயே சில நாட்கள் தங்கிவிடுகிறார்

வழக்கம்போல், புதன்கிழமை வருகிறது, வார இதழும் வருகிறது

அதில் தொடர்கதையும் இருக்கிறது ஆனால் அதைப் படித்துக்காட்டப் பேத்தி பக்கத்தில் இல்லை

பாட்டிக்கோ ஆவல் தாங்கவில்லை

அந்தக் கதையில் அடுத்து என்ன நடந்தது என்று தெரிந்துகொள்ளத் துடிக்கிறார்

புத்தகத்தைத் திரும்பத் திரும்பப் பார்க்கிறார்

அதில் இருக்கும் எழுத்துகள் அவருக்குத் தெரிகின்றன

ஆனால், அவை சொல்லவருவது என்ன என்று தெரியவில்லை

தன்னுடைய விரல்களுக்குப் படிக்கத் தெரியாதா என்கிற ஏக்கத்துடன் அந்த எழுத்துகளை வருடிப்பார்க்கிறார்
இருந்தாலும் படிக்க முடியவில்லை என்கிற ஏக்கத்துடன்

வெள்ளிக்கிழமை, பேத்தி திரும்பி வரும்வரை அவர் காத்திருக்கின்றார்
வந்த பின் அவரைப் பார்த்ததும் பாட்டிக்கு ஒரே அழுகை….

கண்ணு, நான் இந்தக் கதையைப் படிக்க ஆசைப்பட்டேன், ஆனா, என்னால படிக்கமுடியலையே என்று தேம்புகிறார்

அன்று அவர் ஒரு தீர்மானம் எடுக்கிறார். ‘
நான் எழுதப் படிக்கக் கற்றுக்கொள்ளப்போகிறேன்

பேத்தி சிரிக்கிறார்

பாட்டி, இத்தனை வயசுக்கப்புறம் நீங்க எப்படிப் பள்ளிக் கூடத்துக்குப் போவீங்க?

நான் பள்ளிக்கூடத்துக்குப் போகப்போறதில்லை

உன்கிட்ட கத்துக்கப்போறேன் என்கிறார் பாட்டி

ஆனா ஆவன்னாவில ஆரம்பிச்சு எல்லாத்தையும் சொல்லிக்கொடு நான் கத்துக்கறேன்
அப்புறமா நானே எல்லாக் கதையையும் படிச்சுக்குவேன்

இப்படித் துணிவோடு பேசியபோதும் எழுதப் படிக்கக் கற்றுக்கொள்வது அவருக்கு எளிதாக இருக்கவில்லை பாட்டிக்கு

ஆனால் அவர் கடுமையாக உழைக்கிறார்
தொடர்ந்து படித்துப் படித்து
எழுதி எழுதிப் பயிற்சி எடுக்கிறார்

மூன்று மாதத்தில் எழுதப் படிக்கத் தெரிந்துகொள்கிறார்

சரஸ்வதி பூஜையன்று பேத்தியை நாற்காலியில் உட்காரவைத்து அவருடைய காலைத் தொட்டு வணங்குகிறார்

நான் கும்பிடுவது
என் பேத்தியை இல்லை
என் வாத்தியாரம்மாவை என்கிறார்.

புகழ் பெற்ற கன்னட எழுத்தாளர்
சுதா மூர்த்தி தன்னுடைய பாட்டி கிரிஷ்தக்கா-வுக்கு எழுதப் படிக்கக் கற்றுக்கொடுத்த கதைதான் இது

நமக்கு இது தெரியவில்லையே என்கிற ஏக்கமும்
தெரிந்து கொள்ள வேண்டும்
என்கிற துடிப்பும் வந்துவிட்டால்
மற்ற தடைகளெல்லாம்
ஒரு பொருட்டா என்ன!!!!

மற்றவர்கள் தோள் மீது
ஏறி நின்று தன்னை உயரமாக காட்டிக் கொள்வதை விட தனித்து நின்று தன் உண்மையான உயரத்தை காட்டுவதே தன்னம்பிக்கை

எனவே

என்னால் முடியும் என நம்புங்கள்
உங்களால் முடியும் என நம்புங்கள்
நம்மால் முடியும் என நம்புங்கள்

என்றும் அன்புடன்

Dr ஆண்டாள் P சொக்கலிங்கம்

 

Share this:

Write a Reply or Comment

5 + nine =