July 06 2022 0Comment

போட்டி

போட்டி

சில நாய்களுக்கும்
ஒரு சிறுத்தைக்கும்
இடையில் எந்த விலங்கு
வேகமாக ஓடுகிறது
என்று ஒரு போட்டி
ஏற்பாடு செய்யப்பட்டது
வானை நோக்கி துப்பாக்கி
சுடப்பட்டு போட்டி ஆரம்பமானது
நாய்கள் ஓட ஆரம்பித்தன….
ஆனால் சிறுத்தை தன் கூண்டை விட்டு வெளியே வரவே இல்லை
போட்டியை பார்க்க கூடியிருந்த அனைத்து மக்களுக்கும்
தாங்க முடியாத ஆச்சரியம்
என்ன நடந்தது?
ஏன் சிறுத்தை ஓடவில்லை?
என்று போட்டி ஒருங்கிணைப்பாளரிடம்
மக்கள் அனைவரும்
கேட்டார்கள்
அதற்கு அவர் சொன்ன விடை
சில சமயங்களில்
நீங்கள் சிறந்தவர்
என்பதை மற்றவர்களுக்கு
நிருபிக்க நினைப்பதே
ஒரு அவமானம்
சிறுத்தை அதன்
வேகத்தையும்
ஆளுமையையும் வேட்டையாடுவதற்கு
மட்டுமே பயன்படுத்தும்
ஓட்டப்பந்தயத்தில்
வெற்றி பெற்றுதான்
சிறுத்தை அதன்
வேகத்தையும், வலிமையையும்
சில நாய்களுக்கு
நிருபிக்க வேண்டும் என்கின்ற
அவசியம் என்றைக்கும்
அதற்கு இல்லை
அந்த எண்ணம் வந்ததால் அது ஓடவில்லை என நினைக்கின்றோம்
இவ்விடத்தில் தான் நாம்
கூர்ந்து கவனிக்க வேண்டிய
ஒரு விஷயம் உள்ளது
இதில் குற்றம் என்பது நாய்களிடத்திலோ
சிறுத்தைகளிடத்திலோ இல்லை
அர்த்தமற்ற போட்டியை நடத்த முற்பட்டவர்களிடம் தான் முழு குற்றமும் உள்ளது
நம்மில்
பெரும்பான்மையானவர்கள்
வாழ்வில் பல
சூழ்நிலைகளில்,
அர்த்தமற்ற பல
வாழ்க்கை போட்டிகளில்
நாம் சிறந்தவர்கள் என்பதை எல்லோருக்கும் தேவையில்லாமல் நிருபிக்க முயற்சி செய்து
கொண்டே இருக்கின்றோம்
நிருபிக்க முயற்சி செய்து
தோற்று கொண்டேயும் இருக்கின்றோம்
ஊருக்காக வெட்டியாக
வாழ்ந்து ஒவ்வொரு நாளும்
நாம் நம்மை தொலைத்துக் கொண்டேயும் இருக்கின்றோம்
தொடர்ந்து
தொலைந்து போவதற்கு முன்
தொலைந்து போக கூடாது என்று நீங்கள் முடிவெடுத்தால்
நடுவர்களுக்காகவும்
நாய்களுக்காகவும்
வாழ்வதை நிறுத்திவிட்டு
விட்டுவிட்டு
நாய்கள் நகர்ந்து விடும்
அல்லது உங்கள் நகர்வுகள் நாய்களை நகர்த்தி விடும் என்ற எண்ணத்துடன் உங்களை நீங்களே முன்னெடுத்து செல்லுங்கள்
அது போன்ற நேரங்களில்
சில சந்தர்ப்பங்கள் நம்மை முட்டாளாக கூட ஆக்கலாம் பரவாயில்லை
ஆனால் அது நம்மை
முடவனாக்கி விடாமல் மட்டும் பார்த்துக் கொள்ள வேண்டும்
அருமையற்றவன் வீட்டில்
எருமை கூட குடி இருக்காது
என்பதை நினைவில்
நிறுத்திக் கொண்டு
தேவையில்லாதவர்களிடமும், தகுதியற்றவர்களிடமும் நாம் யார் என்பதை நிரூபிக்காமல் இருப்பதே சிறந்த புத்திசாலித்தனம்
என்பதை நாம் உணர்ந்து
கொண்டாலேயே நமக்கு என்றும்
வெற்றி சர்வ நிச்சயம்
காற்றின் வேகத்தை
பொறுத்து அதன்
பெயர்கள் வேறுபடும்
நம் வேகத்தையும் நாம் அதிகப்படுத்துவோம்
நாமும் வேறுபடுவோம்
புது உலகம் புது பெயர்
நமக்காக காத்துக் கொண்டிருக்கிறது
என்றும்.அன்புடன்
Dr ஆண்டாள் P சொக்கலிங்கம்
Share this:

Write a Reply or Comment

2 + 2 =