May 30 2018 0Comment

வாகனப் பிள்ளையார் திருக்கோயில்:

வாகனப் பிள்ளையார் திருக்கோயில்:

மூலவர்: – விநாயகர்

பழமை: – 200 வருடங்களுக்கு முன்

ஊர்: – ஆத்தூர்

மாவட்டம்: – சேலம்

மாநிலம்: – தமிழ்நாடு

ஆத்தூர் நகரத்தில் #வசிட்ட நதி ஓடுகிறது. இன்று வறண்டு கிடந்தாலும் 60 ஆண்டுகளுக்கு முன்பு வரை தண்ணீர் பெருகி ஓடிய நதியாகத்தான் இருந்தது. குறிப்பாக ஆடி மாதத்தில் மிக அதிக அளவில் தண்ணீர் ஓடும். 

200 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பிள்ளையார் சிலை வெள்ளத்தில் அடித்து வரப்பட்டது. அதைக் கண்டெடுத்த மக்கள், ஊருக்குள் ஓரிடத்தில் பிரதிட்டை செய்தனர். 

#வெள்ளத்தில் மிதந்து வந்த பிள்ளையார் என்பதால், “வெள்ளம் பிள்ளையார்‘ என்று பெயரும் சூட்டினர்.

காலப் போக்கில் அவர் வெள்ளைப் பிள்ளையார் ஆனார்.

பிள்ளையார் அமர்ந்த இடம் மிகவும் செழிப்படைந்தது. 

ஒரு கட்டத்தில் முக்கிய வீதிகள், பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட அனைத்தும் பிள்ளையாரைச் சுற்றி அமைந்தன.

போக்குவரத்து அதிகரித்தது. இவ்விடத்தை தாண்டிச் செல்பவர்கள் வாகனத்தை நிறுத்தி விட்டு விநாயகரை வணங்கிச் சென்றனர். 

அவர்களில் பெரும்பாலோனோருக்கு காரியம் கைகூடவே, இவர் “வாகனப் பிள்ளையார்’ என்ற பெயர் பெற்றார்.

தலச் சிறப்பு:

விநாயகரின் வாகனம் #மூஞ்சூறு. பிள்ளையார் முன்பு ஒற்றை மூஞ்சூறு வாகனம் இருக்கும். மகாராஷ்டிராவில் இரட்டை மூஞ்சூறு வாகனங்களைப் பார்க்கலாம். ஆனால் இரண்டு குட்டி மூஞ்சூறுகளுடன் ஒரு பெரிய மூஞ்சுறு ஆக மூன்று மூஞ்சூறுகள் உள்ள வித்தியாசமான கோயில் இது.

Share this:

Write a Reply or Comment

fifteen − fourteen =