May 30 2018 0Comment

வைத்தியநாத சுவாமி திருக்கோவில்:

வைத்தியநாத சுவாமி திருக்கோவில்:

தென்னிந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள மக்கள் பலருக்கு இத்தலத்து ஈசன் குலதெய்வமாக இருப்பதால் இங்கு வந்து வழிபடுகின்றனர். 

உயிர்களின் தீராத நோய்களைத் தீர்க்கும் பொருட்டு #தையல் நாயகியாய்த் தைல பாத்திரமும் #சஞ்சீவியும் வில்வ மரத்தடி மண்ணும் கொண்டுவர இறைவன் இங்கு வைத்தியநாதராக எழுந்தருளிய தலம்.

மூலவர் : வைத்தியநாதர்.

தாயார் : தையல்நாயகி.

தல விருட்சம் : வேம்பு.

தீர்த்தம் : சித்தாமிர்தம்.

ஆகமம் : காமிக ஆகமம்.

ஊர் : வைத்தீஸ்வரன் கோயில்.

மாவட்டம் : நாகப்பட்டினம்.

தல வரலாறு :

வைத்தீஸ்வரன் என்பது தமிழில் மருத்துவக் கடவுள் என்ற பொருளை உணர்த்துவது ஆகும். 

இக்கோவிலில் அமைந்திருக்கும் சித்தாமிர்தக் குளத்தின் நீர் புனித 

நீராக கருதப்படுகின்றது. இக்குளத்தில் நீராடினால் நோய் நீங்கும் என்று அங்கு வழிபடும் மக்களால் நம்பப்படுகின்றது.

ஒன்பது கிரகங்களுள் ஒன்றான அங்காரகன் தொழுநோயால் மிகத்தீவிரமாக பாதிக்கப்பட்டதன் விளைவாக கடவுள் சிவனார் வைத்தியநாத சுவாமியாக எழுந்தருளி அவரின் பிணி தீர்த்தார்.

திருநாவுக்கரசர் தீவிர வயிற்றுப்பிணியினால் அவதியுற்றபொழுது அவர் தமக்கையார் வைத்தியநாதனை நினைந்து பிணி நீக்க தொழுதிட்டார் அவ்வாறே எழுந்தருளி பிணி நீக்கினார். 

அன்று முதல் இத்தல சிவனாரை அவரின் பக்தகோடிகளால் வைத்தியநாதன் என்றழைக்கபெற்று வழிபடலாயினர்.

தலச்சிறப்பு :

செல்வ முத்துக்குமார சுவாமி மிகவும் பிரசித்தி பெற்ற தெய்வம் ஆவார். கார்த்திகை தோறும் இவருக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. சந்தனக் குழம்பு, மண் உருண்டை, சித்தாமிர்தம் ஆகியன நோய் தீர்க்கவல்லன.

சடாயு என்னும் புள் (பறவை) இருக்கு வேதம் (ரிக்குவேதம்), முருகவேல், சூரியனாம் ஊர் ஆகிய நால்வரும் இத்தலத்திற்கு வந்து இறைவனை வணங்கியதால் இத்தல நாயகர் புள்ளிருக்குவேளர் எனவும் #திருபுள்ளிருக்குவேளர் என தனிச் சிறப்புடனும் அழைக்கப்படுகின்றார்.

Share this:

Write a Reply or Comment

3 + thirteen =