July 03 2022 0Comment

01000 vs 10000

01000 vs 10000

 

கரும்பலகையில் ‘1000’ என்று எழுதிவிட்டு, தன் வகுப்பறையில் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்த ஒரு மாணவனைப் பார்த்து அவனது கணித ஆசிரியர், “இது எவ்வளவு?” என்று கேட்டார்.

நம்பிக்கையுடன் இருந்தாலும், கேள்வியின் எளிமையைக் கண்டு சற்று அவமானமாக உணர்ந்து, “ஓராயிரம்,” என்று அவன் பதிலளித்தான்.

இப்போது ஆசிரியர் கூடுதலாக ஒரு பூஜ்யத்தை அந்த எண்ணின் வலப்பக்கம் ‘10000’ என எழுதிவிட்டு, அது எவ்வளவு என்று அவனிடம் மீண்டும் கேட்டார்.

“பத்தாயிரம்,” என்று உடனடியாகப் பதில் வந்தது.

இப்போது இன்னொரு பூஜ்யத்தை அந்த எண்ணின் இடப்பக்கம் ‘010000’ என்று எழுதிவிட்டு, அது எவ்வளவு என்று கேட்டார்.

“அதே பத்தாயிரம்” என்று அவன் பதில் கூறினான்.

ஆசிரியர் அவனைப் பார்த்து கண் சிமிட்டிப் புன்னகைத்தவாறே, “ஒரு முக்கியத்துவமற்ற எண் ஒரு முக்கியம் வாய்ந்த எண்ணைப் பின்தொடர்ந்து செல்லும்போது, அதன் மதிப்பு கூடுகிறது.

அதே எண் அந்த முக்கியத்துவம் வாய்ந்த எண்ணிற்கு முன்னால் செல்ல முயற்சிக்கும்போது, அதற்கு மதிப்பேதும் இல்லை.

அது போன்றதுதான் ஆசிரியருக்கும், மாணவனுக்கும் இடையே உள்ள உறவும். ஒரு மாணவன் தன் ஆசிரியரைப் பின்தொடர்ந்து சென்றால், அவனது மதிப்பு கூடுகிறது.

அதுவே தலை கீழாக அமைந்தால்., பதில் உனக்கே தெரியும் என்று முடித்தார்….

முக்கியத்துவத்தையும், மரியாதையையும், சகிப்புத்தன்மையையும் பின் தொடர்ந்து பாருங்கள் நண்பர்களே, மனிதனாய் பிறந்ததற்கான மகத்துவம் புரியும்…

கற்றவரை பின் தொடருங்கள்…

வாழ்வின் அர்த்தம் விளங்கும்…

என்றும் அன்புடன்
டாக்டர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

நன்றி தகவல் அனுப்பிய
திருமதி ஸ்வேதா கதிர் அவர்களுக்கு

 

Share this:

Write a Reply or Comment

twenty − 2 =