சமயத்தில் காப்பாள் சமயபுரத்தாள்:
சமயத்தில் காப்பாள் சமயபுரத்தாள்: ஒரு பெண்மணி, தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் தன் மகளின் திருமணத்திற்காக பத்து பவுன் வாங்கி வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாள். இதை கவனித்துக் கொண்டிருந்த ஒருவன், அவள் பஸ் ஏறும் போது, நகையை பறித்துக் கொண்டு ஓடிவிட்டான். அவள் அலறித்துடித்தது தான் மிச்சம். அவள் நேராக சமயபுரம் சென்றாள். மாரியம்மா சமயபுரத்தாளே சமயத்தில் உதவும் கருணைக்கடலே என் நிலையைப் பார்த்தாயா, நீ குடிகொண்டிருக்கும் இந்த ஊரில் இப்படி நடக்கலாமா, என்று அழுதாள். என் […]
மகிமாலீஸ்வரர் திருக்கோயில்:
மகிமாலீஸ்வரர் திருக்கோயில்: ஈரோடு நகரம் பழங்காலம் தொட்டே சைவ மதத்தை போற்றி வந்துள்ளது. இரண்டு ஓடைகளுக்கு நடுவில் இருப்பதால் ஈரோடை என்ற பெயர் ஏற்பட்டது. பின்னர் மருவி ஈரோடு என அழைக்கப்பட்டது என ஒரு பெயர் காரணம் சொல்லப்பட்டாலும், ஈரோடு நகர மக்கள் சிவ வழிபாட்டில் சிறந்து விளங்கியதால் இப்பெயர் ஏற்பட்டது என்ற கருத்தும் உண்டு. எந்நாட்டவருக்கும் அதிபதியான தென்னாடு கொண்ட சிவன் தன் தலையில் மனைவியான கங்கையுடன் வீற்றிருப்பதால் அவரது தலை ஈரமாக இருப்பதை உணர்த்தும் […]
கோவர்த்தனாம்பிகை திருக்கோயில்:
கோவர்த்தனாம்பிகை திருக்கோயில்: இத்தலத்தில் அம்பாள் மேற்கு நோக்கி தவம் புரிந்ததால் சிவனும் மேற்கு நோக்கிய படியே அருட்காட்சி தருகிறார். அவருக்கு இடப்புறம் தனிச்சன்னதியில் உச்சிப்பகுதியில் #சிங்கமுக உருவம் கொண்ட திருவாசியின் மீது நின்ற கோலத்தில் தலையில் கடிண்ட மகுடத்துடன், மேற்கு நோக்கியபடி கைகளில் தாமரை, குவளைகள் கொண்டு அம்மன் காட்சி தருகிறாள். அம்பாள் தவம் இருந்து மக்களைக் காத்து அருளிய இப்பகுதி பழனங்கள் (வயல்வெளி) நிறைந்த பழமையான பகுதியாக இருந்ததால் இவ்வூர் தொடக்கத்தில் #பெரும்பழனம் என்றும் பெரும்பழனாபுரி […]
அவிநாசியப்பர் திருக்கோயில்:
அவிநாசியப்பர் திருக்கோயில்: காசியில் வாசி அவிநாசி : காசியில் வாசி அவிநாசி என்பார்கள். காசியில் போய் வழிபட்டால் என்ன புண்ணியம் கிடைக்குமோ அது இத்தல இறைவனான அவிநாசி #லிங்கேஸ்வரரை வழிபட்டால் கிடைக்கும் என்பது ஐதீகம். இங்குள்ள அவிநாசியப்பர், #பைரவர், #காசி தீர்த்தம் மூன்றும் காசியிலிருந்து கொண்டுவரப்பட்டவை. அமாவாசையன்று இங்குள்ள காசிக்கிணற்றில் நீராடி இறைவனை வழிபடுவது சிறப்பு. அன்றைய தினம் மதியம் இடைவேளையில்லாமல் திறந்தே இருக்கும். அவிநாசி என்றால்… #விநாசம் என்றால் அழியக்கூடியது என்று பொருள். இத்துடன் […]
அதுல்யநாதேஸ்வரர் திருக்கோயில்
#அதுல்யநாதேஸ்வரர் திருக்கோயில்: திருஞானசம்பந்தர் இங்கு வந்து அறையணிநாதரை வணங்கி பதிகம் பாடிவிட்டு திருவண்ணாமலை செல்ல விரும்பினார். ஆனால், ஏதோ சில காரணங்களால் அவரால் திருவண்ணாமலை செல்ல முடியவில்லை. எனவே, இக்கோயிலிலேயே அண்ணாமலையாரை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பின் இங்கிருந்தே தூரத்தில் தெரிந்த #திருவண்ணாமலையாரை குறித்து பதிகம் பாடினார். #சம்பந்தர் பிரதிஷ்டை செய்த சிவன் சன்னதி அறையணிநாதர், அம்பாள் சன்னதிகளுக்கு இடையே தனியே இருக்கிறது. சம்பந்தர் திருவண்ணாமலையாரை வணங்கி பதிகம் பாடிய இடத்தில் ஒரு பீடத்தின் மேல் அவரது […]
தூவாய் நாதர் திருக்கோயில்:
தூவாய் நாதர் திருக்கோயில்: ஒரு முறை சுந்தரமூர்த்தி நாயனார் தனது இரண்டாவது துணைவியான #சங்கிலி நாச்சியாரிடம், நான் எப்போதும் உன்னை விட்டு பிரியமாட்டேன்,என்று உறுதி மொழி கொடுத்தார். திடீரென அவருக்கு முதல் துணைவியான பரவை நாச்சியார் நினைவுக்கு வந்தவுடன் திருவாரூர் புறப்படுகிறார். பரவை நாச்சியாருக்கு செய்து கொடுத்த உறுதி மொழியை மீறியதால் சுந்தரரின் பார்வை பறிபோனது. மனம் கலங்கிய #சுந்தரர் பார்வை வேண்டி ஒவ்வொரு சிவத்தலங்களாக சென்று, மீண்டும் பார்வை தந்தருளும்படி வேண்டினார். காஞ்சிபுரம் வந்தபோது காமாட்சியின் […]
மகிமாலீஸ்வரர் திருக்கோயில்:
மகிமாலீஸ்வரர் திருக்கோயில்: ஈரோடு நகரம் பழங்காலம் தொட்டே சைவ மதத்தை போற்றி வந்துள்ளது. இரண்டு ஓடைகளுக்கு நடுவில் இருப்பதால் ஈரோடை என்ற பெயர் ஏற்பட்டது. பின்னர் மருவி #ஈரோடு என அழைக்கப்பட்டது என ஒரு பெயர் காரணம் சொல்லப்பட்டாலும், ஈரோடு நகர மக்கள் சிவ வழிபாட்டில் சிறந்து விளங்கியதால் இப்பெயர் ஏற்பட்டது என்ற கருத்தும் உண்டு. எந்நாட்டவருக்கும் அதிபதியான தென்னாடு கொண்ட சிவன் தன் தலையில் மனைவியான கங்கையுடன் வீற்றிருப்பதால் அவரது தலை ஈரமாக இருப்பதை உணர்த்தும் […]
பிரளயகாலேஸ்வரர் திருக்கோயில்:
பிரளயகாலேஸ்வரர் திருக்கோயில்: பிரளயகாலேஸ்வரர்: ஒருமுறை உலகம் சிவபெருமானால் அழிக்கப்பட்டது. அப்போது இத்தலம் தவிர அனைத்து இடங்களும் வெள்ளத்தால் மூழ்கியது. இதையறிந்த தேவர்கள் இங்கு வந்து, உயிர்களை இத்தலத்தில் வைத்து காக்கும்படி வேண்டினர். சிவனும் நந்தியிடம் வெள்ளத்தை தடுக்க ஆணையிட்டார். சிவனைப் பார்த்திருந்த நந்தி, ஊரை நோக்கி திரும்ப வெள்ளத்தை திசை மாற்றி பூமியை காத்தது. எனவே இங்குள்ள இறைவன் பிரளயகாலேஸ்வரர் என அழைக்கப்பட்டார். கலிக்கம்பநாயனார் தன் மனைவியுடன் இணைந்து, வீட்டிற்கு வரும் சிவனடியார்களுக்கு பாத பூஜை செய்து […]
உத்தமர் கோவில்:
உத்தமர் கோவில்: பிரம்மன் சன்னதி : படைக்கும் தொழிலைச் செய்யும் பிரம்மாவிற்கு பூலோகத்தில் தனக்கென தனியே கோயில் இல்லையே என மனக்குறை இருந்தது. எனவே, மகாவிஷ்ணு அவரை பூலோகத்தில் பிறக்கும்படி செய்தார். பிரம்மா இத்தலத்தில் பெருமாளை வணங்கி தவம் செய்து வந்தார். அவரது பக்தியை சோதிப்பதற்காக மகாவிஷ்ணு, கதம்ப மரத்தின் வடிவில் நின்று கொண்டார். இதையறிந்த பிரம்மா கதம்ப மரத்திற்கு பூஜைகள் செய்து, சுவாமியை வணங்கினார். அவரது பக்தியில் மகிழ்ந்த மகாவிஷ்ணு காட்சி தந்து, நீ எப்போதும் […]
ஆலந்துறையார் திருக்கோயில்:
ஆலந்துறையார் திருக்கோயில்: பழு என்றால் ஆலமரம். எனவே சுவாமி #ஆலந்துறையார் எனப்படுகிறார். தல விருட்சமான ஆலமரம் இப்பகுதியில் அதிகமாதலால் #திருப்பழுவூர் என பெயர் பெற்றது. கயிலாயத்தில் அன்னை பார்வதி விளையாட்டாக சிவனின் கண்ணை பொத்தியதால், சிவனின் இரு கண்களாக விளங்கும் சூரிய, சந்திரரின் ஒளி இல்லாமல் போனது. இதனால் உலக இயக்கம் நின்றது. முனிவர்களும் தேவர்களும் கலங்கி நின்றனர். அப்போது சிவபெருமான் தனது தேவியிடம், விளையாட்டாக தவறு செய்தாலும் மற்றவர்களுக்கு அது பாதிப்பை ஏற்படுத்துமானால், அது பாவமே […]
