April 16 2019 0Comment

கேடிலியப்பர் திருக்கோயில்: 

கேடிலியப்பர் திருக்கோயில்: வேளூர் என்ற பெயருடைய தலங்கள் பல இருந்ததால் கிழக்கே உள்ள இத்தலம் கீழ்வேளூர் ஆனது. கோச்செங்கண்ணன் கட்டிய மாடக்கோயில்களுள் இதுவும் ஒன்று. இங்குள்ள #அஞ்சுவட்டத்தம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. அகத்தியர் பூஜித்த லிங்கமும் உள்ளது. இங்குள்ள நடராஜர் இடது பாதம் ஊன்றி வலது பாதம் தூக்கிய நிலையில் பத்து திருக்கரங்களுடன் அகத்தியருக்கு அருள்பாலிப்பது சிறப்பம்சமாகும். படைப்பாற்றல் குறைந்ததால், கோயில் வடக்கு கோபுர வாசலின் எதிரில் பிரம்மதீர்த்தம் ஏற்படுத்தி, அதில் மூழ்கி அட்சயலிங்க சுவாமியை […]

April 16 2019 0Comment

அசலதீபேஸ்வரர் திருக்கோயில்: 

அசலதீபேஸ்வரர் திருக்கோயில்: இத்தலம் தேவார வைப்புத்தலமாக கூறப்படுகிறது.  கார்த்திகை மாதத்தில் திருவண்ணாமலையில் ஏற்றப்படும் தீபம் விசேஷம். அதேபோல் கார்த்திகைக்கு முதல் நாளில் வரும் பரணி நட்சத்திரத்தன்று இங்கு ஏற்றப்படும் தீபம் மிகவும் விசேஷம். அப்போது சுவாமிக்கு விசேஷ அபிஷேக,பூஜை செய்யப்படுகிறது.  சிவபக்தரான #பீஜாவாபா மகரிஷி இத்தல இறைவன் மீது பக்தி கொண்டு இங்கேயே சிவனுக்கு சேவை செய்து வந்தார். இவர் ஒவ்வொரு கார்த்திகை மாத பரணி நட்சத்திரத்தன்றும் இங்கு சுவாமி சன்னதி எதிரேயுள்ள தீப ஸ்தம்பத்தில் தீபம் […]

April 16 2019 0Comment

எமனேஸ்வரமுடையார் திருக்கோயில்:

எமனேஸ்வரமுடையார் திருக்கோயில்: திருக்கடையூரில் எமனை சம்ஹரம் செய்த கால சம்ஹரமூர்த்தியாக அருளும் சிவன், இத்தலத்தில் அனுக்கிரமூர்த்தியாக இந்திர விமானத்தின் கீழ் காட்சி தருகிறார். இங்கு ஆயுஷ்ய ஹோமம், அறுபது, எண்பதாம் திருமணம் செய்துகொண்டால் ஆயுள் நீடிக்கும் என்பது நம்பிக்கை. மாசிமகத்தன்று சிவனின் அம்சமான, முருகனே அவரது சார்பில் தீர்த்தத்திற்கு எழுந்தருளுகிறார். கார்த்திகை கடைசி திங்கள்கிழமையன்று இவருக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுவது #சிறப்பு. இத்தலத்தின் தலவிநாயகர்: ராஜகணபதி #சிறப்பம்சங்கள்: அம்பாள் #சொர்ணகுஜாம்பிகைக்கு, இரண்டு கரங்களுடன் தனிச்சன்னதியில் இருக்கிறாள். மார்கழியில் #பைரவாஷ்டமி, […]

April 16 2019 0Comment

தேசிகநாதர் திருக்கோயில்

தேசிகநாதர் திருக்கோயில்: இந்த பைரவரே இத்தலத்தின் பிரதான மூர்த்தியாவார். பக்தர்கள் முதலில் பைரவரை வழிபட்ட பின்பே, சிவன், அம்பாளை வணங்குகிறார்கள். இங்கு சிவன், அம்பாளுக்கு செய்யப்படும் கற்பூர ஆரத்தியை பக்தர்கள் கண்ணில் தொட்டு வைக்க அனுமதி கிடையாது. பைரவருக்கு ஆரத்தி எடுத்த கற்பூரத்தட்டையே பக்தர்களுக்கு காட்டுகிறார்கள். பைரவருக்கு முக்கியத்துவம் தரும் வகையில், இவ்வாறு செய்வதாக சொல்கிறார்கள். தேய்பிறை அஷ்டமியில் இங்கு சிறப்பு ஹோமம் நடக்கிறது. ஹோமம் முடிந்ததும் சுவாமிக்கு விசேஷ அபிஷேக, அர்ச்சனை நடந்து அதன்பின் பைரவர் […]

April 16 2019 0Comment

வடாரண்யேஸ்வரர் திருக்கோயில்: 

வடாரண்யேஸ்வரர் திருக்கோயில்: #காரைக்கால் அம்மையார் அருளிய மூத்த திருப்பதிகம் பெற்ற சிறப்புடையது. தாமரை மலர் விரித்தாற் போல் அமைந்து அதன் மேல் அமைந்துள்ள #கமலத்தேர் இங்கு தனி சிறப்பு. சும்பன், நிசும்பன் என்ற இரு அசுரர்கள் ஆலமரங்கள் அதிகமாக உள்ள காட்டில் தங்கி தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் துன்பம் விளைவித்து வந்தனர். இதனால் பாதிப்படைந்தவர்கள் சிவ பார்வதியிடம் சென்று முறையிட்டனர். பார்வதி தேவி தன் பார்வையால் காளியை தோற்றுவித்து அரக்கர்களை அழித்து விட்டு, அவளையே ஆலங்காட்டிற்கு தலைவியாக்கினாள். அரக்கர்களை […]

April 16 2019 0Comment

திருத்தளிநாதர் திருக்கோயில்: 

திருத்தளிநாதர் திருக்கோயில்: சிவ பக்தனான இரண்யாட்சகனுக்கு அந்தகாசுரன், சம்பாசுரன் என இரண்டு மகன்கள் பிறந்தனர். இவர்கள் சிறந்த சிவபக்தர்களாக இருந்தாலும், தேவர்களுக்கு பெரும் துன்பம் கொடுத்தனர். தேவர்கள் சிவபெருமானை துதித்தனர். சிவன் தனது அம்சமாக விஸ்வரூபம் எடுத்து வந்தார். அந்தகாசுரன், சம்பகாசுரனை வதம் செய்தார். இவரே பைரவர் ஆவார். அசுரர்கள் என்றாலும் அவர்கள் பக்தர்கள் என்பதால் பைரவருக்கு தோஷம் பிடித்தது. தோஷம் நீங்க இங்கு சிவலிங்க பூஜை செய்தார். இவரே இத்தலத்தில் யோகபைரவராக காட்சி தருகிறார். இவர் […]

April 16 2019 0Comment

அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில், 

அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில், பணிவு தரும் அம்பிகை:  அம்பாள் சாந்தநாயகி, தனிச்சன்னதியில் தெற்கு நோக்கி பத்ம பீடத்தில் நின்ற கோலத்தில் இருக்கிறாள். இவளது பாதத்தில் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. இவளே, இங்கு பிரதானமானவள் ஆவாள். எனவே, கோயிலுக்குச் செல்பவர்கள் முதலில் இவளை வணங்கிவிட்டே, சிவன் சன்னதிக்குச் செல்கிறார்கள். இதற்காக, நுழைவு வாயிலை அடுத்து அம்பாள் சன்னதி முதலில் அமைக்கப்பட்டிருக்கிறது. அம்பாளை வெளியில் இருந்து பார்க்கும்போது, முகத்தை தரிசிக்க முடியாதபடி சன்னதி அமைக்கப்பட்டிருக்கிறது. சற்றே குனிந்து பார்த்தால்தான் அம்பிகையை […]

April 16 2019 0Comment

திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்

திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்: முருகப்பெருமான் சூரபத்மன் முதலிய அரக்கர்களை அழிக்க போர் செய்த போது, தப்பிப் பிழைத்த மாக்கிரகன் என்ற அசுரன் சிவபூஜை செய்து வந்தான். அவன் இத்தலம் வந்த போது இங்குள்ள இறைவனுக்கு தன் பெயரால் மாக்கிரன் என பெயர் சூட்டினான். இப்பெயர் மருவி மாகறலீசர் என்று மாறியது. அழகிய சுதை சிற்பங்களோடு 5 நிலை ராஜகோபுரமும், இரண்டு பிரகாரமும் உள்ளது. பிரகாரத்தில் கணபதி, ஆறுமுகன், அறுபத்து மூவர், நடராஜர், பைரவர், நவக்கிரக சன்னதி உள்ளது. விமானத்தில் […]

April 16 2019 0Comment

சத்யநாதர் திருக்கோயில்: 

சத்யநாதர் திருக்கோயில்: ஏழு சீடர்களுடன் தெட்சிணாமூர்த்தி:  பொதுவாக தெட்சிணாமூர்த்தி சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய நான்கு சீடர்களுக்கு ஞானம் போதித்த நிலையில்தான் காட்சிதருவார். ஆனால், இங்கு அவருக்கு கீழே 7 சீடர்கள் இருக்கின்றனர். இது வித்தியாசமான அமைப்பாகும். இவரிடம் வேண்டிக்கொண்டால் ஞானம் பிறக்கும் என்பது ஐதீகம். சத்யநாதசுவாமி சற்றே சிவந்த நிறத்தில் காட்சியளிக்கிறார். அம்பாளுக்கு காரார்குழலி என்ற பெயரும் உள்ளது. நந்தியின் கழுத்து மட்டும் தெற்கு முகமாக திரும்பியிருக்கிறது. இதற்கு நேரே ஒரு வாசலும் உண்டு. […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by