November 11 2018 0Comment

சொக்கன் பக்கம்  -13- 86/4

சொக்கன் பக்கம் கிறுக்கல் – 13 86/4 என் அப்பா மறைந்த இரண்டு மாதங்களுக்கு பிறகு, நீர் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருந்த மீன் போல இருந்த என்னை, என் நண்பன் ஒருவன் பார்க்க வந்தான் ஒரு செய்தியோடு…. என் காதலி சொன்னதாக அவன் என்னிடம் சொன்ன செய்தி இது தான். என் சொக்கு எந்த முடிவெடுத்தாலும் அது சரியாக தான் இருக்கும். அவனைப்பற்றி எனக்கு நன்கு தெரியும் எல்லோரையும் விட அவன் எந்தளவிற்கு என்னை நேசித்தான் என்று. […]

November 11 2018 0Comment

கிறுக்கல் – 12- 86/3

சொக்கன் பக்கம் கிறுக்கல் – 12 86/3 பெண் பார்க்க செல்வதென முடிவெடுத்த பிறகு மதுரை சென்று என் கூட படித்த நண்பனை துணைக்கு கூப்பிட்டு கொண்டு அம்பையிலிருந்து என் பாட்டியுடன் சென்றேன் நெல்லை மாநகருக்கு… நெல்லையப்பர் கோவிலில் வைத்து பெண்ணை பார்க்கிறேன் என்று சொன்னதால் பெண்ணும், அவள் உறவினர்களும் அங்கு ஏற்கனவே வந்திருந்து எனக்காக காத்திருந்தனர்… பெண் பார்க்கும் படலத்தில் எனக்கு துளி கூட ஆர்வமில்லாததால் அவளுக்கும்,எனக்கும் எப்போதும் பிடித்த நீல வண்ண கலரில் அழுக்கு […]

November 11 2018 0Comment

கிறுக்கல் – 11 -86/2

சொக்கன் பக்கம் கிறுக்கல் – 11 86/2 என் நண்பன் சொல்லிய உடன், நான் பெரிதும் ஆசைப்பட்ட அவளை, அவளுடைய அக்கா வீட்டில் சந்திக்க ஒப்புக் கொண்டதற்கு காரணம், அவள் அக்கா காதல் திருமணம் செய்து கொண்டது என்னுடைய நெருங்கிய நண்பன் ஒருவனை தான். செய்த தொழில்கள் வேறாக இருந்ததாலும், அவரவர் கவலைகள் அவரவருக்கு என்கின்ற அளவில் வாழ்ந்ததாலும் என் காதலியின் அக்கா கணவனான என் நண்பனிடம் தொடர்பே இல்லாமல் வாழ்ந்து வந்தேன்…. இந்த சூழ்நிலையில் நண்பனின் […]

November 11 2018 0Comment

கிறுக்கல் – 10 – 86

சொக்கன் பக்கம் கிறுக்கல் – 10 86 வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… என்னுடைய வாழ்க்கையை ஆண்டாளுக்கு முன், ஆண்டாளுக்கு பின் என இரண்டு வகையாக பிரிக்கலாம்… ஆண்டாளுக்கு முன் என்றால் என் வாழ்க்கையில் ஆண்டாள் வருவதற்கு முன் என அர்த்தம் கொள்ளவும்…. பள்ளியாகட்டும், கல்லூரியாகட்டும் சொக்கலிங்கத்தை பிடித்தவர்கள் 10 பேர் என்றால் பிடிக்காதவர்கள் 100 பேர் இருப்பார்கள் காரணம் சொக்கலிங்கத்திற்கு,  கடவுள் நம்பிக்கை அறவே இல்லை  படிப்பு சுமார்  ஆசிரியரிடம் நல்ல […]

November 11 2018 0Comment

கிறுக்கல் – 9 – தர்ம யுத்தம்

சொக்கன் பக்கம் கிறுக்கல் – 9 – தர்ம யுத்தம் பணத்தை வட்டிக்கு விடுபவர்கள்; லஞ்சம் வாங்கும் அரசியல்வாதிகள், அதிகாரிகள்; கொலைகாரர்கள்; திருடர்கள்; கெட்டவர்கள்; சாராயம் விற்பவர்கள்; பெண்களை வியாபாரமாக்கி பணம் சம்பாதிப்பவர்கள் etc., என இப்படி இயற்கைக்கு முரணான வகையில் சம்பாதிப்பவர்கள் எல்லோரும் வசதி வாய்ப்புடன் நன்றாக இருக்கின்றார்கள். பக்கத்து வீட்டுக்காரன் அவ்வளவு அயோக்கியத்தனம் செய்கின்றார்; பெத்த அம்மா, அப்பாவிற்கு கூட சோறு போடாமல் அவர்களை முதியோர் இல்லத்தில் தங்க வைத்திருக்கின்றார். ஆனால் அவர் நன்றாக […]

November 11 2018 0Comment

கிறுக்கல் – 7  – காரும், கனவும்

சொக்கன் பக்கம் கிறுக்கல் – 7 காரும், கனவும் காணும் கனவையும், காண வேண்டிய கனவையும் எப்படி காண்பது என்று பார்ப்போமா? குறைந்த மாத சம்பளத்தில் இருந்து கொண்டு, பணத்திற்கு சிரமப்பட்ட காலங்கள் எனக்கும் இருந்தது. மாத சம்பளத்திற்கு வேலை பார்த்த காலகட்டங்களில், வேலை முடிந்து அரசு பேருந்தில் தான் கூட்டத்துடன் பிரயாணப்படுவேன் நான் தங்கியிருந்த இடத்தை அடைய. பேருந்தில் பிரயாணப்படும் போது ஒரு 2nd hand இரு சக்கர வாகனம் அல்லது குறைந்த பட்சம் TVS-50 […]

November 11 2018 0Comment

போற்றி பாடடி பெண்ணே:.

சொக்கன் பக்கம் கிறுக்கல் – 8 போற்றி பாடடி பெண்ணே:. கடந்த கொண்டிருக்கின்ற விஷயங்கள் என தனிமையில் பல விஷயங்களை யோசிக்கும்போது கடந்து வந்த விஷயங்களை நினைத்துப் பார்க்கும்போது பாலைவனச் சோலையாக தனித்து இருக்கும்போது தனிமையிலும் ஒரு இனிமை உண்டு என்று என்னால் உரக்கச் சொல்ல முடியும் என்றால் அந்த பெருமை இசைஞானி #இளையராஜா ஒருவரை மட்டுமே போய் சேரும். இசையால் எல்லாவற்றையும் மறக்க வைத்து ஆறுதல் தரவும் முடிகின்றது நாம் மறக்க நினைப்பதை நினைவூட்டி தண்டனை […]

November 11 2018 0Comment

முருக

முருக ஒன்றும் இல்லாதவனாக ஒன்றும் இல்லாத முறையில் என்றும் செந்தூர் முருகனை சந்திப்பது என் வழக்கம். சந்தித்து விட்டு சென்னையை நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தபோது காரியாபட்டியில் உள்ள சின்ன தேவர் என்னுடைய ஆருயிர் தம்பி விஜய் குமார் அவர்களின் நினைப்பு எட்டி பார்த்தது. 160 கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் என்றாலும் மனம் ஏனோ தம்பி விஜயகுமாரை பார்த்துவிட்டு செல்லலாம் என்று எண்ணி தம்பியை தொடர்பு கொண்டபோது தம்பியும் அவருடைய உணவகத்தில் தான் இருப்பதாக சொன்னதைக் […]

November 11 2018 0Comment

கிறுக்கல் – 6 – சொத்தும், சொத்தையும்

சொக்கன் பக்கம் கிறுக்கல் – 6 – சொத்தும், சொத்தையும்: திருமணம் தள்ளிப் போகும் பெண்கள் தங்களுக்கு திருமணம் நல்லபடி உடனே நடக்க என்ன செய்ய வேண்டும்? –    திருமணப் பெண் திருமணத்தை பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும். –    திருமணப் பெண்ணின் குடும்பத்தினர் அனைவரும் திருமணம் தள்ளி போய் கொண்டிருக்கும் பெண்ணின் திருமணம் பற்றி மட்டுமே நினைக்க வேண்டும். 1953 – ம் வருடம் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்தில் ஒரு சாதாரண […]

November 11 2018 0Comment

கிறுக்கல் – 5 – தள்ளுதலும், கொள்ளுதலும்

சொக்கன் பக்கம் கிறுக்கல் – 5 – தள்ளுதலும், கொள்ளுதலும் வாழ்க்கையை இரண்டு வார்த்தைகளில் நல்ல காதலர்களிடம் சொல்ல சொன்னால் நான், நீ என்று சொல்லி முடித்துவிடுவர்…… வாழ்க்கையை இரண்டு வார்த்தைகளில் நல்ல கவிஞரிடம் சொல்ல சொன்னால் இரவு, பகல் என்று சொல்லி முடித்துவிடுவார்…… என்னிடம் வாழ்க்கையை இரண்டு வார்த்தைகளில் சொல்ல சொன்னால் தள்ளுதலும், கொள்ளுதலும் தான் வாழ்க்கை என்று சொல்லி முடித்துவிடுவேன்……. இந்த இரண்டு வார்த்தைகளின் அர்த்தம் புரிந்து போனால், அதன் பிறகு நமக்கே நமக்கு […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by