சிந்தை மகிழும் சித்திரை மாதம்!
சிந்தை மகிழும் சித்திரை மாதம்! நமது தமிழர்களை பொறுத்தவரை மிகவும் பழங்காலத்திலிருந்தே மாதங்களை பயன்படுத்தி வருகின்றனர் என்பதை சங்க இலக்கியங்கள் மூலம் அறியலாம். தமிழ் மாதங்கள் மொத்தம் பனிரெண்டு ஆகும். பண்டைய தமிழர்கள் இரண்டு வகையாக மாதங்களை குறித்து வந்துள்ளார்கள். பூமிக்கு சார்பாக சூரியனின் இயக்கத்தை வைத்தும், பூமிக்கு சார்பாக சந்திரனின் இயக்கத்தை வைத்தும் மாதங்களை கணக்கிட்டார்கள். அவையாவன : சூரிய மாதம் என்றும் சந்திர மாதம் என்றும் வழங்கப்படுகிறது. தமிழ் மாதங்களில் முதலாமானவள் என்ற சிறப்பை […]
சொர்ணகாளீஸ்வரர் கோவில்
சொர்ணகாளீஸ்வரர் கோவில் : இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டத்தில் காளையார் கோவில் என்ற ஊரில் அமைந்துள்ளது. சொர்ணகாளீஸ்வரர் கோவில் சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். மூலவர் : சொர்ணகாளீஸ்வரர். தாயார் : சொர்ணவல்லி. தல மரம் : மந்தாரை. தல விருட்சம் : கொக்கு மந்தாரை. தீர்த்தம் : கஜபுஷ்கரணி, சிவகங்கைக்காளி தீர்த்தம், விஷ்ணு தீர்த்தம்,சரஸ்வதி தீர்த்தம்,கௌவுரி தீர்த்தம், ருத்ர தீர்த்தம்,லட்சுமி தீர்த்தம், சுதர்சன தீர்த்தம். புராண பெயர்கள் : திருக்கானப்பேர். ஊர் : காளையார் கோவில். மாவட்டம் […]
நல்லதங்காள் கோவில் :
நல்லதங்காள் கோவில் வத்திராயிருப்பு: தமிழ்நாடு மாநிலம் விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு என்ற பகுதியில் உள்ளது. குழந்தை பேறு கொடுக்கும் தலங்களில் ஒன்றானது நல்லதங்காள் கோவில். இந்த கோவில் மிகவும் பழமை வாய்ந்த கோவில் ஆக கருதப்படுகிறது. தல வரலாறு : அர்ச்சுனாபுரம் மற்றும் அந்த கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதியை ராமலிங்க சேதுபதி, இந்திராணி தம்பதியினர் ஆட்சி செய்து வந்தனர். இவர்களுக்கு நல்லதம்பி நல்லதங்காள் என இரண்டு குழந்தைகள். இவர்கள் தாய், தந்தையை இளம் வயதிலேயே இழந்தனர். இருந்த […]
காசி விஸ்வநாதர் கோவில்
காசி விஸ்வநாதர் கோவில்: காசி விஸ்வநாதர் கோவில் மிகவும் புகழ்வாய்ந்த சிவபெருமானின் திருத்தலமாகும். இக்கோவில் உத்திரப்பிரதேசத்திலுள்ள வாரணாசி எனும் இடத்தில் அமைந்துள்ளது. வாரணாசி என்று தற்போது அழைக்கப்பெற்றாலும் பழங்காலத்தில் காசி என அழைக்கப்பட்டதால் இத்தலம் காசி விஸ்வநாதர் கோவில் என அழைக்கப்படுகின்றது. விஸ்வநாதர் என்றால் அகிலத்தினை ஆள்பவர் என்று பொருளாகும். […]
அருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் கோவில்
அருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் கோவில்: இந்தியா நாட்டில் தமிழ்நாடு மாநிலத்தில் ஈரோடு மாவட்டத்தில், கோபிச்செட்டிப்பாளையம் வட்டத்தில் இருக்கும் ஒரு பிரசித்தி பெற்ற இந்து கோவில் ஆகும். இந்த கோவில் கோபிச்செட்டிப்பாளையம் நகரத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் பாரியூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இதன் முதன்மை தெய்வம் கொண்டத்துக் காளியம்மன் ஆகும். மூலவர் : காளியம்மன் (கொண்டத்துகாரி) புராண பெயர் : அழகாபுரி, பாராபுரி ஊர் : பாரியூர் மாவட்டம் : ஈரோடு தல வரலாறு: இந்த கோவில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது.தற்போது இருக்கும் கோவில் […]
திருத்தணி முருகன் கோவில்:
திருத்தணி முருகன் கோவில்: முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளுள் ஐந்தாவது படைவீடான திருத்தணிகை, சென்னையில் இருந்து சுமார் 84 கி.மீ. தூரத்தில் உள்ளது.சென்னையில் இருந்து திருப்பதி மற்றும் மும்பை செல்லும் இருப்புப் பாதை தடத்தில் வரும் ஜங்ஷன் அரக்கோணம். இங்கிருந்து வடக்கே சுமார் 13 கி.மீ. தொலைவில் இருக்கிறது திருத்தணி. கி.பி. 14-ஆம் நூற்றாண்டில் அறுபடை வீடுகளில் ஒன்றாக திருத்தணியை சேர்ப்பது என்ற கருத்து மேலும் வலுப்பெற்று, கி.பி. 15-ஆம் நூற்றாண்டில் அருணகிரிநாதரால் ஏற்றுக் கொள்ளப்பட்டு […]
அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன் கோவில்
தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் உள்ள விராதனூர் எனும் ஊரில் அமைந்துள்ளது அருள்மிகு அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன் திருக்கோயில். இது பழமை வாய்ந்த கோவில்களுள் ஒன்றாகும். மூலவர் – அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன் பழமை – 500-1000 வருடங்களுக்கு முன் ஊர் – விராதனூர் மாவட்டம் – மதுரை மாநிலம் – தமிழ்நாடு தல வரலாறு : சுமார் 750 வருடங்களுக்கு முன்பு உத்திரகோசமங்கை என்ற ஊரிலிருந்து இரண்டு குடும்பத்தினர் தங்கள் குலதெய்வமான அழகர்கோவில் பெருமாளுக்கு நேர்த்திக் கடன் செலுத்த புறப்பட்டு வந்தனர்.வழியில் […]
இலங்குடி சிவன் கோவில்:
இலங்குடி சிவன் கோவில்: ரத்தம் போல் வழியும் திரவம்…. அதிசய நந்தி ! பொதுவாக எல்லா சிவன் கோவிலிலும் நந்தி இருப்பதை பார்த்திருப்போம். ஆனால் சிவகங்கை #இலங்குடி கிராமத்தில் உள்ள சிவன் கோவில் சற்றே வித்தியாசமான சிறப்பு வாய்ந்த ஒரு அதிசய நந்தி சிலை உள்ளது. ஆம், அப்படி என்ன சிறப்பு என்றால், பல நூறு ஆண்டுகளாக இந்த நந்தியின் வாயில் இருந்து வித்தியாசமான ரத்தம் போன்ற திரவம் வழிந்தபடியே உள்ளது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம், ஆலங்குடியில் இருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில் உள்ளது ‘இலங்குடி” […]
சாத்தாயி அம்மன் கோவில்:
சாத்தாயி அம்மன் கோவில்: கரூர் மாவட்டம் குளித்தலை வட்டத்தில் உள்ளது நங்கவரம். திருச்சியில் இருந்து 22 கிலோ மீட்டர் தொலைவில் அமைதியான சூழலில் உள்ள கிராமம் இது. இங்கு சாத்தாயி அம்மன் ஆலயம் ஊரின் நடுவே அமைந்துள்ளது. ஊரின் செல்ல மகளாய் ஊரைக் காத்து வரும் காவல் தெய்வமாய் இருந்து வருகிறாள் […]
கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோவில்
கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோவில்: கொல்லிமலை அறப்பளீஸ்வரர் திருக்கோவில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் அமைந்துள்ள சிவன் கோவிலாகும். சங்ககாலத்தில் கொல்லிமலையானது சதுரகிரி என்றும் அறமலை என்றும் அழைக்கப் பட்டது. அம்பலவாண கவிராயர் இத்தலத்து இறைவன் மீது அறப்பளீஸ்வரர் சதகம் என்ற நூலை இயற்றியுள்ளார்.திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் தங்களது தேவாரப் பாடல்களில் கொல்லிமலை பற்றி குறிப்பிட்டுள்ளனர். கோவில் வரலாறு : இயற்கை வளம்மிக்க கொல்லிமலை வல்வில்ஓரி என்னும் மன்னன் ஆண்ட பகுதியாகும். காலாங்கி முனிவர் முதலாக பதினெண் சித்தர்கள் இம்மலையில் பல குகைகளில் தங்கித் தவம் […]
