கூடுவோம் வெல்வோம்…
இந்து மதமே இல்லையா??? – இந்து ஒருங்கிணைப்பு குழு – கூட்டம் 1 @ Vani Mahal, Chennai on 11th Feb 2018
இந்து மதமே இல்லையா??? – இந்து ஒருங்கிணைப்பு குழு – கூட்டம் 1 @ Vani Mahal, Chennai on 11th Feb 2018
பொன்னர் சங்கர் கோவில்:
பொன்னர் சங்கர் கோவில்: ✩ திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பெரியக்காண்டியம்மன் கோவில் கொண்டு அருள்பாலித்து வரும் தலம்தான் வீரப்பூர். இங்கு பெரியக்காண்டியம்மன் கோவிலுக்கு அருகில் அண்ணமார் சுவாமிகள் எனப்படும் பொன்னர் சங்கர் கோவில் உள்ளது. அதற்கு அருகில் காவல் தெய்வமாய், பிரமாண்டமான உயரத்தில் மிரட்டும் விழிகளுடன் இருக்கும் மந்திரம் காத்த மகாமுனி சிலை, காளை மாட்டுடன் கூடிய சாம்புவன் சிலை ஆகியன உள்ளது. அருகே வீரமலை மீது பெரியக்காண்டியம்மன் தவம் செய்த இடமென கூறப்படும் தவசு கம்பம் […]
அறியாத அற்புதங்கள்!
1. #திருநெல்வேலி பாளையங்கோட்டை அருகே திருச்செந்தூா் சாலையில் உள்ள சிரட்டை பிள்ளையாா் கோவிலில் விநாயகருக்கு விடலை போடும்போது சிரட்டையும், தேங்காயும் பிரிந்து சிதறுகிறது. 2. #ஸ்ரீரங்கம் கோவிலில் ஸ்ரீராமானுஜரின் உடல் 1000 வருடங்களாக கெடாமல் அப்படியே உள்ளது. 3. #தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில் 72 டன் கல் கோபுர உச்சியில் வைக்கப்பட்டுள்ளது. கருவறை குளிர்காலத்தில் வெப்பமாகவும் வெயில் காலத்தில் குளிராகவும் இருக்கிறது. 4. #தாராபுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில் உள்ள இசைப்படிகளில் தட்டினால் சரிகமபதநிச என்ற […]
அருள்மிகு உலகம்மன் கோவில்:
⭐ திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள #தென்காசி எனும் ஊரில் அமைந்துள்ள சிவாலயமாகும். இத்தலம் உலகம்மன் கோவில் என்றும், தென்காசி பெரிய கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. மூலவர் : விஸ்வநாதர் சுவாமி : அருள்மிகு #காசி விஸ்வநாதர் அம்பாள் : அருள்மிகு உலகம்மன் தீர்த்தம் : சகஸ்ரநாம தீர்த்தம், ஆனந்த தீர்த்தம், காசிக் கிணறு, வயிரவ தீர்த்தம், ஈசான தீர்த்தம், அன்னபூரணி தீர்த்தம், விசுவ தீர்த்தம் தலவிருட்சம் : செண்பக மரம் பழமை : 500-1000 வருடங்களுக்கு முன் ஊர் […]
விருபாட்சர் கோவில்
தலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்!! இந்தியாவில் உள்ள பல முக்கிய திருத்தலங்களில் பல விதமான அற்புதங்கள் நிகழ்ந்த வண்ணம் தான் உள்ளன. அந்த வகையில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய ஒரு கோவிலின் நிழல் தலை கீழாக விழும் அதிசயம் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு கோவிலில் நிகழ்கிறது.
பத்துமலைக் குகை முருகன் கோயில்:
பத்துமலைக் குகை முருகன் கோயில்: வேல் தாங்கிய கரமும், புன்னகை பொழியும் விழிகளும் கொண்டு 147 அடி உயரத்துடன் கம்பீரமாகக் காட்சிதரும் இந்த முருகன் சிலைதான் உலகின் மிகப்பெரிய முருகன் சிலை மலேசியாவில் அதிக எண்ணிக்கையிலான தமிழர்கள் (இந்துக்கள்) மட்டுமின்றி சீனர்களும் வந்து வழிபடக்கூடிய கோயில்களில் ஒன்று பத்துமலைக் குகை முருகன் கோயில். இந்தக் கோயில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரை அடுத்து 13 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. இங்குள்ள முருகப் பெருமான் சுப்பிரமணிய சுவாமி என்று […]
கருவளா்ச்சேரியில் அகத்தியர்:
கருவளா்ச்சேரியில் அகத்தியர்: கும்பகோணம் மருதாநல்லூா் அருகிலுள்ள,கருவளா்ச்சேரி திருக்கோயில். #வரலாறு : லோக மாதாவாம் அம்பிகை ‘கரு’ காக்கும் நாயகியாக, சுயம்பு மூர்த்தமாக, அகிலாண்டேஸ்வரி எனும் திருநாமத்துடன் அருள்பாலிக்கும் அற்புதத் திருத்தலம் இது. குழந்தை வரம் தருவதுடன், கர்ப்பப்பையில் வளரும் கருவையும் பாதுகாப்பவள் ஆதலால் அம்பிகைக்கு, ‘கருவளர்நாயகி’ என்றும் ஒரு பெயர் உண்டு. புற்று மண்ணால் ஆன சுயம்புத் திருமேனி ஆதலால் அம்பிகைக்கு அபிஷேக- ஆராதனைகள் கிடையாது; புனுகுச் சட்டம், சாம்பிராணி மற்றும் தைலக்காப்பு மட்டுமே […]
அத்ரி கங்கா
அத்ரி கங்கா #அகத்திய மாமுனிவர், கோரக்கநாதர் வாசம் செய்த புண்ணிய ஸ்தலமாக #திருநெல்வேலி விளங்குகிறது. இதில், ஒன்று ‘அத்ரிமலை’ எனும் மூலிகை மலை. இதைத்தான், ‘பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்’ என பாடினர். ‘இம்மூலிகை தென்றல் உடலில் பட்டாலே போதும் நோய்கள் விலகியோடும்,’ என்பது நம்பிக்கை. இம்மலையில் அத்ரிமகரிஷி வாசம் செய்தார். சீடர்கள் தியானம் செய்த இடம், மூலிகை மருந்து தயாரித்த இடம் போன்றவை காலத்தால் அழியாத காவியம் போல் இன்றளவும் பசுமையாக காட்சியளிக்கிறது. இம்மலைக்கு […]
