நிரஞ்சனா -ஹிந்து தன்னெழுச்சி மாநாடு

நிரஞ்சனா வேலூர் ஒன்னுபுரம் திருமதி.நிரஞ்சனா தண்டபாணி பிறந்தது முதல் இதுநாள் வரை ஒரே இடத்தில் வாழ்க்கை ஒரு வருடம் முன் வரை தன் சொந்த ஊரை கூட தனியாக தாண்டாதவர் மூன்று குழந்தைகளுக்கான சாமனிய தமிழக தாய் பள்ளி படிப்பை கூட தாண்டாத சாதாரண பெண்மணி அக்டோபர் 14 ,2018  பல ஆயிரக்கணக்கான பேருக்கு முன்னால் மைக் பிடிக்கின்றார் பயம் இல்லாமல் பேசுகின்றார் என்றால் அதற்கு ஒரே காரணம் வெறி ….. ஜெயிக்க வேண்டும் என்கின்ற வெறி… […]

இரும்பு கோட்டை முரட்டு சிங்கங்கள்

இரும்பு கோட்டை முரட்டு சிங்கங்கள்: சமீபத்தில் சென்னையில் உள்ள ஒரு கோவிலின்  வாசலில் ஒரு ஐந்து மணி நேரம்  அமர்ந்து அங்கு நடக்கக் கூடிய விஷயங்களை  பார்க்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. நம்முடைய மக்களை கூர்ந்து கவனித்தபோது பாஸ்ட் புட், பாஸ்ட் வேலை, பாஸ்ட் தூக்கம், பாஸ்ட் பிறப்பு, பாஸ்ட் இறப்புக்கு  மத்தியிலே வாழ்ந்து  கொண்டிருக்கின்றார்கள்  என்கின்ற உண்மை   நன்கு புரிந்தது எனக்கு. எல்லா விஷயத்திலும் அவசரம் என்கின்ற உண்மை  ஒவ்வொருவரின்  செல்களிலும், நாடி நரம்பெல்லாமும் ஊறிவிட்டது என […]

படிக்காதவன்

படிக்காதவன் 1971 இல் பிறந்த எனக்கு நிறைய தெரியும் பிறரை விட என நம்பும் நிறைய மனிதர்கள் இந்த பூமியில் உண்டு. இருந்தாலும் நான் இன்னும் நிறைய படிக்க வேண்டி இருக்கின்றது என்பதை உணர்த்தும் வகையில் சில சம்பவங்கள் சில சமயம் அழுத்தம் திருத்தமாக நடந்து கொண்டும் இருக்கத்தான் செய்கின்றது அந்த சில சம்பவங்களில் ஒன்று மிகவும் வலிமையானது; அர்த்தம் பொருந்தியது நான் இன்றும் என்றும் இப்போதும் எப்போதும் அதை அவன் செயலாக நம்புகின்றேன். அந்த கருத்தோடு […]

பிச்சைக்காரன்:

பிச்சைக்காரன்: முன்னாள் முதல்வர் திரு.கருணாநிதி அவர்களின் உடல் தகனம் சென்னையில் நடைபெற்ற அன்று நான் ஸ்ரீவில்லிபுத்தூரில் நான்காம் நாள் விழாவிற்காக சென்றிருந்தேன். ஆண்டாளை எப்போது பார்த்தாலும் வெறும் வயிற்றோடு தான் பார்ப்பது என் பாணி என்பதால் அன்றைக்கு காலையும் ஆகாரம் இல்லை; மதியம் கொஞ்சம் புளி சாதம். கொடுக்கப்பட்ட புளி சாதத்தை ருசிக்க நூறு பேர் இருந்தார்கள் என்பதால் புளி சாதத்தை மட்டும் கொஞ்சம் எடுத்து கொண்டு, கையில் பிரசாதமாக கொடுக்கப்பட்ட பழங்களையும், புளி சாதத்தையும் பிறருக்கு […]

நாராயணா !!! நாராயணா !!!

நாராயணா !!! நாராயணா !!!   இந்த உலகத்தில் வாய்ப்பு கிடைத்து தவறு செய்து  மாட்டி கொண்டவனை கெட்ட மனிதன் என்கின்றோம் வாய்ப்பு எதுவும்  கிடைக்காததால்  தவறு எதுவும் செய்யாதவனை  நல்ல மனிதன்  என்கின்றோம் உண்மையில்  வாய்ப்பு கிடைத்தும்  தவறு செய்யாதவனே மாமனிதன் என புரிந்துகொள்ள  தவறி விட்டோம்……  தவறவிட்ட நண்பர்களே!!!!! வாய்ப்புகள்  ஆயிரம்  நீங்கள் ஏற்படுத்தி கொடுத்தாலும் தன்னிலை என்றும் மாறாத  என் நண்பர் #நாராயணமூர்த்தியே என்னை பொறுத்தவரை  என் வாழ்வில் நான் கண்ட மாமனிதர்.. […]

கலக்கல் கணேசன்:

கலக்கல் கணேசன்: 1985-1986 களில் கடவுளை வணங்குபவன் முட்டாள் கடவுள் இல்லை  கடவுள் இல்லவே இல்லை கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் கடவுளைப் பரப்புபவன் அயோக்கியன் கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி 786 என்ன அல்லாவின் டெலிபோன் நம்பரா பரிசுத்த ஆவியில் இட்லி வேகுமா என்று நிறைய சுவர்களில்  அப்போது நான் வசித்த அடையாறு  பகுதியில் எழுதியவனும் நானே… 400 க்கும் மேற்பட்ட  பிள்ளையார் சிலைகளை உடைத்தவனும் நானே….. சரியாக அதில் இருந்து 10 வருடங்கள் கழித்து 1995-1996 களில் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by