திருப்பாவை பாடல் 19:

திருப்பாவை பாடல் 19: (கண்ணனை எழுப்பி அனுப்புக எனல்) குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய் திறவாய் மைத்தடங் கண்ணினாய்! நீயுன் மணாளனை எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண் எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால் தத்துவமன்று தகவேலோர் எம்பாவாய். விளக்கம் : மங்களகரமாக குத்து விளக்கு ஒளிவீச, யானை தந்தத்தினால் செய்யப்பட்ட கால்களைக் கொண்ட கட்டிலின் மேல், மென்மையான […]

திருப்பாவை பாடல் 18:

திருப்பாவை பாடல் 18: (நப்பின்னையை எழுப்புதல்) உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன் நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய் கந்தம் கமழும் குழலி கடை திறவாய் வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப் பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண் பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய். விளக்கம் : மதங்கொண்ட யானையின் வலிமையை உடையவரும், போர்க்களத்தில் புறமுதுகு காட்டி ஓடாமல் வலிமையை உடையவரான நந்தகோபரின் மருமகளே… […]

திருப்பாவை பாடல் 17:

திருப்பாவை பாடல் 17: (கண்ணன் குடும்பத்தவரை எழுப்புதல்) அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும் எம்பெருமான் நந்தகோபாலா! எழுந்திராய் கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குலவிளக்கே! எம்பெருமாட்டி யசோதாய்! அறிவுறாய்! அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர்கோமானே! உறங்காது எழுந்திராய் செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா! உம்பியும் நீயும் உறங்கலோர் எம்பாவாய். விளக்கம் : ஆடைகளையும், அன்னத்தையும், குளிர் நீரையும் தானமாக தந்து அறம் செய்யும் தலைவரான நந்தகோபனே துயில் எழுக! கொடியிடை கொண்ட பெண்களுக்கெல்லாம் முதன்மையானவளே… ஆயர் குலத்தை […]

திருப்பாவை பாடல் 16:

திருப்பாவை பாடல் 16: நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய் ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை மாயன் மணிவண்ணன் நென்னனலே வாய்நேர்ந்தான் தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான் வாயால் முன்னமுன்னம் மாற்றாதே யம்மா! நீ நேய நிலைக்கதவம் நீக்கலோர் எம்பாவாய். விளக்கம் : எங்களுடைய தலைவனாக இருக்கும் நந்தகோபனின் அரண்மனையைக் காவல் செய்பவனே! கொடிகளும் தோரணங்களால் கட்டப்பட்ட வாசல் காவலனே! நெடுங்கதவை திறப்பாயாக…!! மாயன் மணிவண்ணன் ஆயர்குல சிறுமியரான […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by